Friday, October 23, 2026

🍒 One More Year of Grace Luke 13:1–9 / இன்னும் ஓர் ஆண்டு இறைவன் தந்த அருள் - லூக்கா 13:1–9

                        - Sr. Amutha, ICM

In today’s Gospel, Jesus speaks of two tragedies: some Galileans killed by Pilate and eighteen people crushed by the falling tower of Siloam. One was caused by human violence, the other by an accident. Jesus makes it clear that the victims were not greater sinners than others, nor was God punishing them. Instead of judging the dead, He invites us to examine ourselves: “If we do not repent, we will all perish as they did.”

Jesus reminds us that life is uncertain. We often postpone our conversion, thinking we have plenty of time to reconcile, overcome our weaknesses, and become better people. But the real question is not why tragedy happens to others; it is whether we are living in the right relationship with God and our neighbour and bearing the fruits God desires.

The parable of the fig tree is one of my favourite Gospel passages, and I especially reflect on it on my birthday. The gardener’s plea, “Sir, leave it for this year also,” speaks deeply to me. Every birthday reminds me that God has blessed me with another year of life and another opportunity to grow and serve.

The gardener does not simply ask for more time; he promises to cultivate the soil and nourish the tree. Likewise, I want to take this gift of another year seriously—to rebuild what has been damaged, renew what has become weak, and nurture what still has the possibility of growth.

Lord, thank You for giving me another year. Help me not to take this grace for granted. Give me the wisdom and courage to repair what is damaged, renew what needs attention, and nurture what can still bear fruit for Your Kingdom. Amen.

இன்னும் ஓர் ஆண்டு இறைவன் தந்த அருள் (லூக்கா 13:1–9)

இன்றைய நற்செய்தியில், இரண்டு துயரமான நிகழ்வுகளைப் பற்றி இயேசு பேசுகிறார். பிலாத்துவால் கொல்லப்பட்ட கலிலேயர்கள், சிலோவாம் கோபுரம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பதினெட்டு பேர். ஒன்று மனிதனின் வன்முறையால் நடந்தது; மற்றொன்று எதிர்பாராத விபத்தால் நடந்தது. ஆனால், இறந்தவர்கள் மற்றவர்களைவிடப் பெரிய பாவிகள் என்பதாலோ, கடவுள் அவர்களைத் தண்டித்ததாலோ இவை நடக்கவில்லை என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். இறந்தவர்களைப் பற்றி தீர்ப்பிடுவதற்குப் பதிலாக, நம்மையே ஆராய்ந்து பார்க்கும்படி அழைக்கிறார்: “மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.”

வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். மனம் மாறுவதற்கும், உறவுகளைச் சரிசெய்வதற்கும், நம்முடைய குறைகளைக் களைந்து நல்ல மனிதர்களாக மாறுவதற்கும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைத்து, நாம் பலவற்றைத் தள்ளிப்போடுகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு ஏன் துன்பம் நேர்கிறது என்று கேட்பதைவிட, நாம் கடவுளோடும் பிறரோடும் சரியான உறவில் வாழ்கிறோமா, கடவுள் விரும்பும் நற்பலன்களை நம் வாழ்வில் கொடுக்கிறோமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

அத்திமரத்தைப் பற்றிய இந்த உவமை எனக்கு மிகவும் பிடித்த நற்செய்திப் பகுதிகளில் ஒன்று. குறிப்பாக, என்னுடைய பிறந்தநாளன்று இதைப் பற்றி நான் ஆழமாகச் சிந்திப்பேன். “ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்” என்று தோட்டக்காரர் கேட்பது என் உள்ளத்தை மிகவும் தொடுகிறது. ஒவ்வொரு பிறந்தநாளும், கடவுள் எனக்கு வாழ்வதற்காக இன்னும் ஓர் ஆண்டையும், வளர்வதற்கும் அவருக்குப் பணியாற்றுவதற்கும் இன்னொரு வாய்ப்பையும் தந்திருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது.

தோட்டக்காரர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கேட்கவில்லை; மண்ணைக் கொத்தி, உரமிட்டு, மரம் வளர்வதற்குத் தேவையான பராமரிப்பையும் செய்ய முன்வருகிறார். அதுபோல, கடவுள் எனக்குத் தந்துள்ள இந்தப் புதிய ஆண்டை நான் மிகவும் பொறுப்போடு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். சேதமடைந்தவற்றைச் சீரமைக்கவும், வலுவிழந்தவற்றைப் புதுப்பிக்கவும், இன்னும் வளர்ந்து நற்பலன் தரக்கூடியவற்றைப் பேணிவளர்க்கவும் விரும்புகிறேன்.

இறைவா, எனக்கு இன்னும் ஓர் ஆண்டைத் தந்ததற்கு நன்றி. நீர் தந்த இந்த அருளை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க உதவும். சேதமடைந்தவற்றைச் சீரமைக்கவும், கவனிக்க வேண்டியவற்றைப் புதுப்பிக்கவும், உமது ஆட்சிக்காக இன்னும் நற்பலன் தரக்கூடியவற்றைப் பேணிவளர்க்கவும் தேவையான ஞானத்தையும் துணிவையும் எனக்குத் தாரும். ஆமென்.

Sr. அமுதா ICM

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...