Friday, October 23, 2026

🦋 Meditation verse - லுூக்கா 16 : 15 / Luke 16:15

 🌅ஆதவன் தியானம்🌅

எண் :- 2085 - நாள் :- 24.10.2026



"நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 )

மனிதர்கள் பார்க்கின்றபடி தேவன் பார்ப்பதில்லை. பொதுவாக மனிதர்கள் ஒருவருடைய அழகையும் அந்தஸ்தையும் பார்த்து அவர்களை மேன்மையாகக்  கருதுவார்கள். ஆனால் தேவன் அப்படி மனிதர்களைப் பார்ப்பதில்லை. இதனையே அவர் சாமுவேலிடம் , "நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" ( 1 சாமுவேல் 16 : 7 ) என்று கூறினார்.

இன்று சில சபைகளிலும், ஆலயங்களிலும் பலர் மற்றவர்களால் இப்படி மேன்மையாகக் கருதப்படுகின்றனர். காரணம் அவர்கள் செய்யும் சில நல்ல காரியங்கள். ஆனால், தேவன் ஒருவர் செய்யும் நல்ல காரியங்களையல்ல, மாறாக அந்தக்காரியங்கள் செய்யப்பட்ட நோக்கத்தையும் பார்க்கின்றார். உண்மையான தேவ அன்புடன் அதனைச் செய்தார்களா அல்லது மற்றவர்களிடம் புகழ்ச்சியடையவேண்டும் எனும் எண்ணத்தில் செய்தார்களா என்று தேவன் பார்க்கின்றார். இப்படி உண்மையான தேவ அன்பில்லாமல் பிறர் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல்ல செயல்களைச் செய்வதை தேவன் வெறுக்கின்றார். காரணம், "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 )

மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. காரணம், தேவன் தாழ்மையையே மேலான குணமாகக் கருதுகின்றார். "தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" ( லுூக்கா 14 : 11 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? எனவே, இந்த குணத்தையே அவர் மனிதர்களிடம் எதிர்பார்க்கின்றார் என்பது தெளிவு. 

நமக்கு அவர் இதனையே முன்மாதிரிகையாக விட்டுச்சென்றார். இயேசு கிறிஸ்துவின் தாழ்மையினைக் குறித்து, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" ( பிலிப்பியர் 2 : 6-8 ) என்று வாசிக்கின்றோம். 

அவரது பிள்ளைகள் என்று கூறிக்கொண்டு நாம் தாழ்மையற்றவர்களாக, பெருமைக்காகச் சில செயல்களில் ஈடுபடும்போது அது அவருக்கு அருவருப்பாக இருக்கின்றது. ஆம், மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படும் செயல்கள் தேவனுக்கு  முன்பாக அருவருப்பாயிருக்கிறது.  எனவே நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். நம்மிடம் இத்தகைய இழிவான குணம் இருக்குமானால் மாற்றிக்கொள்வோம். அருவருப்பான இடங்களில் நாம் தங்கமாட்டோமல்லவா? அதுபோலவே தேவனும். எவ்வளவு சிறப்பான செயல்களைச் செய்தாலும் உள்ளத்தில் அருவருப்பான இத்தகைய குணங்களைக் கொண்டவர்களிடம்  தங்குவதில்லை. 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

🌅 AATHAVAN MEDITATION 🌅

No. 2085 – Date: 24.10.2026

“You are those who justify yourselves in the sight of people, but God knows your hearts; for that which is highly esteemed among people is detestable in the sight of God.” (Luke 16:15, NASB)

God does not see things the way human beings do. Generally, people esteem others based on their physical beauty, social status, and position. But God does not look at people in this way. He made this clear to Samuel when He said, “Do not look at his appearance or at the height of his stature, because I have rejected him; for God sees not as man sees, since man looks at the outward appearance, but the LORD looks at the heart” (1 Samuel 16:7, NASB).

Even today, in some churches and places of worship, certain people are highly esteemed by others because of the good deeds they perform. However, God does not merely look at the good deeds a person does; He also examines the motives behind those deeds. He sees whether they are done out of genuine love for God or with the intention of gaining praise and recognition from others. God detests people doing good deeds without genuine love for Him, simply to win the admiration of others. The reason is that “they loved the approval of people rather than the approval of God” (John 12:43, NASB).

What is highly esteemed among people is detestable in the sight of God because He considers humility a far greater virtue. Did Jesus Christ not say, “For everyone who exalts himself will be humbled, and the one who humbles himself will be exalted” (Luke 14:11, NASB)? It is therefore clear that humility is the quality He expects to see in His people.

Jesus Christ left us an example of humility to follow. Concerning His humility, we read: “Although He existed in the form of God, He did not regard equality with God a thing to be grasped, but emptied Himself, taking the form of a bond-servant, and being made in the likeness of men. Being found in appearance as a man, He humbled Himself by becoming obedient to the point of death, even death on a cross” (Philippians 2:6–8, NASB).

When we call ourselves, His children yet remain proud and engage in certain activities merely to gain recognition and glory for ourselves, such behaviour is detestable to Him. Indeed, what is highly esteemed among people may be detestable in the sight of God.

Therefore, let us examine ourselves carefully. If we find this degrading attitude within us, let us change. Would we willingly remain in a place that we find detestable? Likewise, God does not delight in dwelling with those who harbour such detestable attitudes in their hearts, no matter how impressive their outward deeds may appear.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...