Thursday, October 15, 2026

🦋 Meditation verse - லுூக்கா 11 : 52 / Luke 11:52

ஆதவன் தியானம்

எண் :- 2078 - நாள் :- 17.10.2026


"நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள்" ( லுூக்கா 11 : 52 )

முற்காலத்தில் வேதாகம வல்லுநர்களே நியாயசாஸ்திரிகளாக இருந்தனர். இன்றைய தியான வசனம் அவர்களுக்குக் கூறப்பட்டதுபோலத் தெரிந்தாலும் அது மூளை அறிவால் வேதாகமத்தைப் போதிக்கும் போதகர்களுக்கும் பொருந்தும்.

தேவனை அறிவதற்கு முக்கியமான ஒரு  தடையாக இருப்பது மனித அறிவு. நாம் நமது மூளை அறிவால், சரித்திரம், புவியியல், அறிவியல், வேதியல், கணிதம்  இவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் தேவனை இப்படி நாம் மூளை அறிவால் அறிந்துகொள்ளமுடியாது. இன்று பலரும் புத்தகங்களைப் படிப்பதுபோல வேதாகமத்தைப் படித்து தங்களது மூளை அறிவு விளக்கும் வகையில் தேவ வார்த்தைகளின் பொருளைப் புரிந்துவைத்துள்ளனர்.  

பலரும் வேதாகமத்தை வாசிப்பதன்மூலம் தேவனை அறிந்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால், முதலில் தேவனை நாம் அறிந்துகொண்டபின்னர் வேதாகமத்தை வாசிப்போமானால் அதில் கூறப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு நமக்குப் புது விளக்கங்களும் தெளிவும் ஏற்படும். ஆம் அன்பானவர்களே, வேதாகமம் முழுவதும் நாம், "தேவனை அறியும் அறிவு" எனும் வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதைப்  பார்க்கமுடியும். 

தேவனை அறியாதவன் வேதாகமம் கூறும் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. அப்படி அறியாதவன் மற்றவர்களுக்கு வேதாகமத்தைச்  சரியாகப் போதிக்கவும் முடியாது. காரணம், "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்" ( ரோமர் 8 : 5 ) ஆவிக்குரிய வாழ்க்கை அனுபவத்துக்குள் வந்தவன்தான் ஆவிக்குரிய சிந்தனைகொண்டவனாக இருக்கமுடியும். மட்டுமல்ல, "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

ஆம் அன்பானவர்களே, தேவனை அறிய மூளை அறிவு தேவையில்லை, மாறாக குழந்தைகளைப்போன்ற உள்ளமே தேவை. இதனையே ஆண்டவராகிய இயேசு, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது" ( லுூக்கா 10 : 21 ) என்று கூறுகின்றார். 

ஆனால், துரதிஷ்டவசமாக இன்று மூளை அறிவால் வேதாகமத்தைப் படித்து அறிந்தவர்களே போதகர்களாகவும் குருக்களாகவும் இருக்கின்றனர். ஆலயங்களில் பிரசங்கிக்கும் பலரைவிட ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும் விசுவாசிகள் தேவனை அறிந்தவர்களாக இருக்கின்றனர். பல விசுவாசிகளை இவர்கள் தங்களது மூளை அறிவு போதனையால் குழப்பி வழிதவறச் செய்கின்றனர். ஆம் அவர்கள் அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டார்கள், அவர்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறார்கள். இத்தகையவர்களுக்கு ஐயோ என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.  

மூளை அறிவால் மட்டும் வேதாகமத்தை அறிந்து தேவனை அறியாத ஒருவன் விசுவாசிகளுக்குத் தேவனைப்பற்றிப் போதிப்பது, "கழுகுக்  குஞ்சுகளுக்கு குள்ளவாத்து பறப்பதற்கு கற்றுக்கொடுப்பதுபோல" இருக்கின்றது என்கின்றார் பிரசங்கிகள் பிரபு என அழைக்கப்படும் சார்லஸ் ஸ்பர்ஜன்.  

அன்பானவர்களே, ஒருவேளை கட்டாயத்தின் சூழ்நிலையாலும், வேறு வாய்ப்புகள் இல்லாததாலும் இன்று இப்படி மூளை அறிவால் வேதாகமத்தைக் கற்றுப் போதிக்கும் குள்ளவாத்து போன்ற போதகர்களிடம் நாம் சிக்கிக்கொண்டிருக்கலாம். அதற்காகக் கவலைப்படாமல் நமது தனிப்பட்ட தேவ ஐக்கியத்தை வலுப்படுத்தி வாழ்வோம். அப்போது, தேவனுடைய ஆவியானவரே நமக்கு அனைத்தையும் போதித்து நம்மைச் சத்திய வழியில் நடத்துவார். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No: 2078 — Date: 17.10.2026

"Woe to you lawyers! For you have taken away the key of knowledge; you yourselves did not enter, and you hindered those who were entering." (Luke 11:52, NASB)

In ancient times, Bible scholars were the scribes (lawyers). Although today’s meditation verse seems to be addressed to them, it equally applies to the pastors who teach the Bible relying merely on human intellect.

Human intellect stands as a major obstacle to truly knowing God. Through human intellect, we can comprehend history, geography, science, chemistry, and mathematics. However, God cannot be known through mere intellectual understanding. Today, many read the Bible just like any other book and interpret God’s Word based solely on the understanding of their human minds.

Many believe that reading the Bible is the way to know God. However, if we know God first and then read the Bible, new light and clarity will shine upon the words spoken within it. Yes, beloved, throughout the Scriptures, we can see the recurring phrase: "the knowledge of God."

One who does not know God cannot understand the spiritual truths taught in the Bible. And one who lacks this understanding cannot teach the Bible accurately to others. For:

"For those who are in accord with the flesh set their minds on the things of the flesh, but those who are in accord with the Spirit, the things of the Spirit." (Romans 8:5, NASB)

Only someone who has entered into a spiritual life experience can possess spiritual thoughts. Furthermore:

"However, you are not in the flesh but in the Spirit, if indeed the Spirit of God dwells in you. But if anyone does not have the Spirit of Christ, he does not belong to Him." (Romans 8:9, NASB)

Yes, beloved, knowing God does not require human intellect; rather, it requires a heart like a child. The Lord Jesus spoke of this when He said:

"I praise You, Father, Lord of heaven and earth, that You have hidden these things from the wise and intelligent and have revealed them to infants. Yes, Father, for this way was well-pleasing in Your sight." (Luke 10:21, NASB)

Unfortunately, today, those who have merely studied and comprehended the Bible through human intellect hold positions as pastors and priests. In many churches, the believers sitting in the congregation know God far better than those preaching from the pulpit. Yet, these leaders confuse believers and lead them astray with their intellectual teachings. Indeed, they have taken away the key of knowledge; they themselves do not enter, and they hinder those who are entering. To such people, Jesus Christ says: "Woe to you."

Charles Spurgeon, known as the Prince of Preachers, said that when a person knows the Bible only through human intellect without knowing God and tries to teach believers about Him, it is like a duck trying to teach young eagles how to fly.

Beloved, perhaps due to compelling circumstances or a lack of other choices, we may find ourselves stuck under pastors who teach the Bible solely through human intellect—much like those ducks. But do not be dismayed; let us strengthen our personal fellowship with God. When we do, the Holy Spirit Himself will teach us all things and lead us in the way of truth.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ലൂക്കൊസ് 11 : 52

  ആധവൻ ധ്യാനം നമ്പർ :- 2078 — തീയതി :- 17.10.2026 "ന്യായോപദേഷ്ടാക്കന്മാരായ നിങ്ങൾക്കു ഹാ കഷ്ടം! നിങ്ങൾ അറിവിന്റെ താക്കോൽ എടുത്തുകളഞ്ഞ...