Tuesday, October 13, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 122 : 6, 7 / Psalm 122:6–7

ஆதவன் தியானம்

எண் :- 2075 - நாள் :- 14.10.2026


"எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரண்மனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக." ( சங்கீதம் 122 : 6, 7 )

இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய பொருளோடு நாம் பார்க்கவேண்டிய ஒன்று. எருசலேம் என்று கூறப்படுவது உலகிலுள்ள எருசலேம் நகரத்தைக் குறிக்காமல் இந்த உலகிலுள்ள கிறிஸ்துவின் சபையினைக் குறிக்கின்றது. சபை என்பது குறிப்பிட்ட எந்த ஒரு திருச்சபைப்  பிரிவையும் குறிக்காமல் விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது.  

அதாவது, நாம் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டுள்ள மக்களது சமாதானத்துக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றது. இந்த உலகினில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு முயலுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் துன்பத்தைச் சகிக்கவேண்டியதிருக்கின்றது. எனவே அவர்கள் இந்தத் துன்பங்களை மேற்கொண்டு வாழ்வதற்கு நாம் ஜெபிக்கவேண்டும். இப்படி எருசலேமாகிய சபையின்  சமாதானத்துக்காக நாம் ஜெபிக்கின்றபோது நாம் சபையினை நேசிக்கின்றோம் என்று பொருள். இப்படி உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக என்று இன்றைய தியான வசனத்தின் முற்பகுதி கூறுகின்றது. 

தொடர்ந்து, இப்படி எருசலேமின் சமாதானத்துக்காக ஜெபிக்கும் "உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரண்மனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக" என்று கூறப்பட்டுள்ளது. அலங்கம் என்பது இராஜாக்கள் வாழும் அரண்மனையினைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கோட்டைச்சுவர். ஆம், எருசலேமாகிய சபைக்காக ஜெபிக்கும்போது நமது பாதுகாப்பு அரண் பலப்பட்டு நமக்கு சமாதானம் உண்டாகின்றது. மீட்கப்பட்ட நாமே கிறிஸ்துவின்முன் இராஜாக்களாக இருக்கின்றோம். 

ஆம், கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டுள்ள நம்மை அவர் இராஜாக்களும் ஆசாரியர்களுமாக மாற்றியுள்ளார். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்று வாசிக்கின்றோம். 

சுருக்கமாக, கிறிஸ்துவுக்கு உரிமையாளர்களாக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் சபையின் சமாதானத்துக்காக ஜெபிக்கவேண்டும்; அது நமது கடமை. அப்படி நாம் ஜெபிக்கும்போது நமக்குத் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்விலும் குடும்ப வாழ்விலும் பாதுகாப்பும் சுகமும் உண்டாயிருக்கும். 

நமது அன்றாட ஜெபத்தில் நமக்காக மட்டும் ஜெபிக்காமல் சபைக்காகவும் அதன் சமாதானதுக்காகவும்  ஜெபிக்க மறக்காமல் இருப்போம்.  

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

Number: 2075 | Date: 14.10.2026

"Pray for the peace of Jerusalem: 'May they prosper who love you. May peace be within your walls, and prosperity within your palaces.'" — Psalm 122:6–7 (NASB)

Today’s meditation verse is one that we need to view with a spiritual meaning. What is referred to as "Jerusalem" here does not denote the earthly city of Jerusalem, but rather the Church of Christ in this world. "The Church" does not refer to any specific denomination, but to the assembly of believers.

That is, scripture instructs us to pray for the peace of the people who have believed in and accepted Christ. Every Christian who strives to live a spiritual life in this world must endure tribulation. Therefore, we ought to pray that they overcome these tribulations and live. When we pray for the peace of the Church—which is Jerusalem—it means that we love the Church. The former part of today's meditation verse states, "May they prosper who love you."

Continuing, to those who pray for the peace of Jerusalem, it is said: "May peace be within your walls, and prosperity within your palaces." The "wall" (rampart/fortress) refers to the fortified wall built around the palace where kings reside. Yes, when we pray for the Church—Jerusalem—our wall of protection is strengthened, and peace comes upon us. We who are redeemed stand as kings before Christ.

Indeed, having believed in and accepted Christ, He has made us kings and priests. We read:

"But you are a chosen people, a royal priesthood, a holy nation, a people for God’s own possession, so that you may proclaim the excellencies of Him who has called you out of darkness into His marvellous light."— 1 Peter 2:9 (NASB)

In summary, as those chosen and owned by Christ, we must pray not only for ourselves but also for the peace of the Church; it is our duty. When we pray in this manner, we will experience protection and well-being in our personal spiritual life as well as in our family life.

In our daily prayers, let us not forget to pray for the Church and its peace, rather than praying solely for ourselves.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - സങ്കീർത്തനം 122:6, 7

  ആധവൻ ധ്യാനം നമ്പർ: 2075 | തീയതി: 14.10.2026 "യെരൂശലേമിന്റെ സമാധാനത്തിനായി പ്രാർത്ഥിക്കുവിൻ; നിന്നെ സ്നേഹിക്കുന്നവർ സ്വസ്ഥമായിരിക്കു...