Saturday, October 10, 2026

🦋 Meditation verse - கலாத்தியர் 3 : 13 / Galatians 3:13

ஆதவன் தியானம்

எண் :- 2072 - நாள் :- 11.10.2026


"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." ( கலாத்தியர் 3 : 13 )

யூதர்கள் மோசே அளித்த நியாயப்பிரமாணத்தின்மேல் மட்டுமே பற்றுக்கொண்டு வாழ்ந்தனர். அவர்களுக்கு அந்தக்  கட்டளைகள் மட்டுமே மேலானவைகளாகத் தெரிந்ததே தவிர அவை கூறிய உள்ளான மனிதநேயம், அன்பு இவைகள் புரியவில்லை. அதாவது, அவர்கள் கட்டளைகளைக் கட்டளையாக மட்டுமே பார்த்து  மனிதநேயத்தைக் கடைபிடிக்கத் தவறிவிட்டனர். 

ஆனால்  ஆபிரகாம், மோசேயின்  கட்டளைகள் கொடுக்கப்படுவதற்குமுன் வாழ்ந்தவர். அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நீதியுள்ள வாழ்க்கை வாழ்வில்லை. மாறாக, தேவன்மேல் கொண்டிருந்த விசுவாசத்தின் அடிப்படையில் நீதியாக வாழ்ந்தார். இப்படி ஒரு விசுவாச வாழ்க்கை வாழ்வே நாம் அழைக்கப்படுகின்றோம். 

ஆம் அன்பானவர்களே, மோசேமூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டங்கள் பயனற்றவை ஆகிவிட்டன. காரணம், அவைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் எவரும் தேவனுக்குமுன் நீதிமானாகமுடியாது. இதனையே நாம், "நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 ) என்று வாசிக்கின்றோம். 

கட்டளைகளை மட்டும் கடைபிடித்து, கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தை விட்டு விலகி அவரது அன்பின் வார்த்தைகளுக்கு நாம் விலக்கியவர்களாக வாழ்வோமானால்  நாம் சபிக்கப்பட்டவர்கள். "நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 10 )

பழைய ஏற்பாட்டின்படி, தூக்கில் தொங்கவிடப்பட்டவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று பொருள் (உபாகமம் 21:23). இதனையே அப்போஸ்தலரான பவுல் சுட்டிக்காட்டி, கிறிஸ்து இயேசு மனுக்குலத்தின் பாவ சாபங்களை சுமந்து சிலுவையில் தொங்கியதால் அப்போது சபிக்கப்பட்டவராக இருந்தார் என்றும்,  இப்படி நமக்காகச் சிலுவையில் தொங்கி சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்றும்  கூறுகின்றார். 

இது ஏனென்றால் ஆபிரகாமுக்கு விசுவாசத்தினால் கிடைத்த ஆசீர்வாதம் புறஜாதியினராகிய நமக்கும் வரும்படி என்று கூறுகின்றார் பவுல். ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததால் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதுபோல கிறிஸ்துவை விசுவாசித்து நாமும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆம் இதனையே, "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று." ( கலாத்தியர் 3 : 14 ) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவின் மேலான அன்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எனவே இன்னும் நாம் தேவையற்ற சடங்குகளிலும்,  சம்பிரதாயங்களிலும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி  கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது. கட்டளைகளின் மீதல்ல; மாறாக, கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொள்வோம். அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்தி ஆபிரகாமுக்கு அளித்த ஆசீர்வாத வாக்குறுதிகளை நாமும் பெறும்படி தகுதியாக்குவார்.   

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No: 2072 | Date: 11.10.2026

"Christ redeemed us from the curse of the Law, having become a curse for us—for it is written: 'Cursed is everyone who hangs on a tree.'" — Galatians 3:13

The Jews lived with a strong attachment solely to the Law given by Moses. Those commandments were the only things that seemed supreme to them, but they failed to understand the inner humanity and love conveyed through them. In other words, they viewed the commandments merely as strict rules and failed to practice basic humanity.

However, Abraham lived before the commandments of Moses were given. He did not live a righteous life by obeying a set of laws; rather, he lived righteously based on his faith in God. We too are called to live such a life of faith.

Yes, dear ones, the legal system given through Moses became incapable of saving us, because no one can be justified before God simply by keeping rules. Regarding this, we read:

"Now, that no one is justified by the Law before God is evident; for, 'The righteous one will live by faith.'" — Galatians 3:11

If we merely observe rules while turning away from faith in Christ and distancing ourselves from His words of love, we remain under a curse:

"For all who are of the works of the Law are under a curse; for it is written: 'Cursed is everyone who does not abide by all things written in the book of the Law, to perform them.'" — Galatians 3:10

According to the Old Testament, anyone hanged on a tree is considered cursed (Deuteronomy 21:23). Pointing this out, the Apostle Paul explains that because Jesus Christ bore the sin and curse of humanity and hung on the cross, He became a curse on our behalf. By hanging on the cross for us and becoming a curse, He redeemed us and set us free from the curse of the Law.

Paul explains that this happened so that the blessing given to Abraham through faith might also come to us, the Gentiles. Just as Abraham received a blessing because he believed God, we too must receive blessing by believing in Christ. Indeed, as we read:

"In order that in Christ Jesus the blessing of Abraham would come to the Gentiles, so that we would receive the promise of the Spirit through faith." — Galatians 3:14

This is an example of the supreme love of Christ. Therefore, let us not continue focusing on unnecessary rituals, traditions, and rule-keeping at the expense of our faith in Christ. Let us place our complete faith not in commandments, but in Christ. He Himself will guide us in the paths of righteousness and make us worthy to receive the promises of blessing given to Abraham.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ഗലാത്യർ 3 : 13

  ആധവൻ ധ്യാനം നമ്പർ: 2072 | തീയതി: 11.10.2026 "‘മരത്തിൽ തൂക്കപ്പെടുന്നവനെയെല്ലാം ശപിക്കപ്പെട്ടവൻ’ എന്ന് എഴുതിയിരിക്കുന്നതുപോലെ, ക്രിസ...