Monday, October 26, 2026

🍒 Called Not Only to Be Good, but to Be Holy - Ephesians 5:27; Leviticus 19:2; 1 Peter 1:15–16


                            - Sr. Amutha, ICM

In one of the retreats I attended, I remember a priest saying something that deeply touched me: “We are not called merely to be good Christians, good religious, or good missionaries; we are called to be holy.” This made me reflect more deeply on the meaning of our Christian vocation.

St Paul tells us in today's first reading that Christ desires to present the Church to Himself in splendour, “holy and without blemish” (Ephesians 5:27). In Leviticus 19:2, God commands His people, “Be holy, for I, the Lord your God, am holy.” St Peter repeats this call: “As he who called you is holy, be holy yourselves in all your conduct” (1 Peter 1:15–16).

To be holy means to be set apart for God, not separated from people, but living among them with a heart that belongs to Him. Being good is important, but holiness goes deeper. We may pray, fulfil our duties, and serve others faithfully, yet holiness calls us to examine our hearts. Are we growing in love, humility, forgiveness, and compassion? Are we willing to let go of pride, jealousy, resentment, and selfishness?

Holiness is not about appearing perfect before others; it is about allowing God to transform us from within. Every Christian is called to holiness, and we live this calling through our daily actions relationships, words, and love for others. Let us ask ourselves: Am I satisfied with being good, or am I allowing God to make me holy?

Lord Jesus, transform our hearts and help us grow in Your love. May our daily lives reflect Your holiness and make Your presence visible to everyone we meet. Amen.

நல்லவர்களாக மட்டுமல்ல, புனிதர்களாக வாழவும் நாம் அழைக்கப்பட்டவர்கள் (எபேசியர் 5:27; லேவியர் 19:2; 1 பேதுரு 1:15–16)

நான் கலந்துகொண்ட ஒரு தியானத்தில், அருள்பணியாளர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் என் மனதை ஆழமாகத் தொட்டன: “நாம் நல்ல கிறிஸ்தவர்களாக, நல்ல துறவிகளாக, நல்ல மறைப்பணியாளர்களாக இருப்பதற்கு மட்டுமல்ல, புனிதர்களாக வாழ்வதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.” இந்த வார்த்தைகள் நமது கிறிஸ்தவ அழைப்பைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வைத்தன.

இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல், கிறிஸ்து தம் திருச்சபையை மாசு மறுவற்ற, புனிதமான மகிமை நிறைந்த திருச்சபையாகத் தமக்குமுன் நிறுத்த விரும்புகிறார் என்று கூறுகிறார் (எபேசியர் 5:27). லேவியர் நூலில், “நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நான் தூயவர். எனவே நீங்களும் தூயவர்களாய் இருங்கள்” என்று கடவுள் அழைக்கிறார் (லேவியர் 19:2). புனித பேதுருவும், “உங்களை அழைத்தவர் தூயவராய் இருப்பதுபோல, நீங்களும் உங்கள் நடத்தையெல்லாம் தூய்மையாய் இருங்கள்” என்று அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 1:15–16).

புனிதமாக வாழ்வது என்பது கடவுளுக்கென ஒதுக்கப் பட்டவர்களாக வாழ்வதாகும். இது மக்களிடமிருந்து விலகி வாழ்வதல்ல; மக்களோடு வாழ்ந்துகொண்டே, நம் இதயத்தை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகும். நல்லவர்களாக இருப்பது முக்கியம்; ஆனால் புனிதம் என்பது அதைவிட ஆழமானது. நமது அன்றாட வாழ்வில் அன்பு, மன்னிப்பு, தாழ்மை, இரக்கம் ஆகியவற்றில் வளர்கிறோமா? பெருமை, பொறாமை, மனக்கசப்பு, சுயநலம் ஆகியவற்றைக் கைவிடத் தயாராக இருக்கிறோமா?

புனிதம் என்பது மற்றவர்கள்முன் குறையற்றவர்களாகத் தோன்றுவது அல்ல; கடவுள் நம்மை உள்ளிருந்து மாற்றுவதற்கு இடமளிப்பதாகும். நமது வார்த்தைகளிலும் உறவுகளிலும்,  செயல்களிலும் கிறிஸ்துவின் அன்பு வெளிப்பட வேண்டும். எனவே, நாம் நம்மையே கேட்டுக்கொள்வோம்: நல்ல கிறிஸ்தவர்களாக இருப்பதோடு நிறுத்திக் கொள்கிறோமா, அல்லது கடவுளின் அருளால் புனிதத்தில் வளர்கிறோமா?

அன்பு இயேசுவே, எங்கள் உள்ளங்களை மாற்றி, உமது அன்பில் வளரச் செய்யும். எங்கள் அன்றாட வாழ்வின் வழியாக உமது அன்பையும் புனிதத்தையும் மற்றவர்கள் அனுபவிக்க அருள்புரியும். ஆமென்.

அமுதா ICM

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...