ஆதவன் தியானம்
எண் :- 2074 - நாள் :- 13.10.2026
"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )
இன்றைய தியான வசனம் பிற இன மக்களுக்குக் கூறப்பட்ட வசனமல்ல, மாறாக இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்குக் கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகளாகும். இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தனர். எனவேதான் அவர்களை "என் ஜனங்கள்" என்று தேவன் கூறுகின்றார்.
இந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்கள் முதலில் செய்த தவறு, கர்த்தரை விட்டுவிட்டது. அதாவது, அவரது கற்பனைகளையும் அவர்மேலுள்ள அன்பையும் விட்டுவிட்டார்கள் அவர்கள். இரண்டாவது, பிற தெய்வங்களை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டனர். இதனையே, "ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" என்று தேவன் வருத்தத்துடன் கூறுகின்றார்.
இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்குமுன் நாம் வாசிக்கின்றோம்,. "எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 ) ஆம், வீணான தெய்வங்களுக்காக கர்த்தரது மகிமையை மாற்றினார்கள்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான ஜீவத்தண்ணீரை நமக்குக் கொடுக்கும் ஊற்றாக இருக்கின்றார். இதனை அவரே, "வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" ( யோவான் 7 : 38 ) என்று கூறவில்லையா?
ஆம் அன்பானவர்களே, இன்று நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக இருக்கின்றோம். இன்றும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் பழைய இஸ்ரவேல் மக்கள் செய்தத் தவறையே செய்துகொண்டிருக்கின்றனர். இன்று ஒருவேளை நாம் வேறு தெய்வங்களை வணங்காமலிருக்கலாம் ஆனால் தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நாம் பணம், சொத்துக்கள், பதவி, அதிகாரம், பெருமை இவற்றுக்குக் கொடுப்போமானால் நாமும் அந்நிய தெய்வங்களை வணங்கி, வெடிப்புள்ள தண்ணீர் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றோம் என்றுதான் பொருள். ஆம் கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல இத்தகைய அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை. அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. உலகத் தேவைகளையும் பெருமைகளையும் தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவையும் அவர் காட்டிய நெறிகளை விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.
இஸ்ரவேலர் பலமுறை அடிமைப்பட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டு இப்படி வெடிப்புள்ள தொட்டிகளைக் கட்டிக்கொண்டதால்தான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
உலக இஸ்ரவேலர் செய்தத் தவறுபோல நாமும் செய்யாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கிறிஸ்துவை விட்டுவிடாதிருப்போம்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காகக் கட்டிக்கொள்ளாமல் இருப்போம்.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN
Meditation
Number: 2074 | Date: 13.10.2026
"For My people have committed two evils: They have abandoned Me,
the fountain of living waters, to carve out for themselves cisterns, broken
cisterns that can hold no water." — Jeremiah 2:13 (NASB)
Today’s
meditation verse was not spoken to other nations, but rather, these are the
words of God spoken to His chosen people, Israel. The people of Israel were
chosen by God, which is why God calls them "My people."
The
first mistake these chosen people of Israel made was abandoning the Lord. That
is, they left His commandments and their love for Him. Secondly, they created
other gods for themselves. It is regarding this that God says with sorrow: "They
have abandoned Me, the fountain of living waters, to carve out for themselves
cisterns, broken cisterns that can hold no water."
Two
verses prior to today’s meditation passage, we read:
"Has
a nation changed gods when they were not gods? But My people have exchanged
their glory for that which does not profit." — Jeremiah 2:11 (NASB)
Yes,
they exchanged the glory of the Lord for worthless gods.
Our
Lord Jesus Christ Himself is the fountain who gives us true living water. Did
He not say this Himself?
"The
one who believes in Me, as the Scripture said, 'From his innermost being will
flow rivers of living water.'" —
John 7:38 (NASB)
Yes,
beloved, today we are spiritual Israel. Even today, many who call themselves
Christians are committing the very same mistake that ancient Israel committed.
Today, we may not worship other physical deities, but if we give the priority
that belongs to God to money, possessions, status, authority, or pride, it
means that we too are worshipping foreign gods and building broken cisterns.
Indeed, many Christians build broken cisterns without giving Christ the honour
due to Him.
Just
as water stored in a broken cistern cannot be used, such gods are of no benefit
whatsoever. Beloved, it is not right for us to be like the Israelites who
worshipped worthless gods. Chasing after worldly needs and pride as if they
were gods, and abandoning Christ and the principles He showed, is like the
foolishness of building broken cisterns.
The
reason why the Israelites were led into captivity multiple times was because
they left God and built such broken cisterns. Today, abandoning God for
fleeting pleasures will only lead our lives into various forms of bondage.
Let
us protect ourselves so that we do not make the same mistake earthly Israel
made. Let us not abandon Christ, the fountain of living water; let us not build
for ourselves broken cisterns that hold no water.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦
No comments:
Post a Comment