Thursday, October 01, 2026

🦋 Meditation verse - 1 யோவான் 3 : 24 / 1 John 3:24

ஆதவன் தியானம்

எண் :- 2065 - நாள் :- 04.10.2026


"அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 )

விஞ்ஞானத்தில் ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் அதனை நிரூபிக்கும் செய்முறைகள் (experiments), விதிமுறைகள் உண்டு. அதன்மூலமே விஞ்ஞான கோட்பாடுகள் உண்மையானவையா என்பது உறுதிசெய்யப்படுகின்றன. இதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் இருக்கின்றது. கிறிஸ்துவைத் தன்னுள் கொண்டிருப்பவனே உண்மையான கிறிஸ்தவன். அப்படியானால், கிறிஸ்து ஒருவருக்குள் இருக்கின்றார் என்பதனை எப்படிக் கண்டுகொள்வது?

கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதை இன்றைய தியான வசனம் விஞ்ஞான விதிபோலக்  கூறுகின்றது, "அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்" என்று. இப்படித் தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருக்கின்றார் என்பதை உறுதி செய்யும்போது அவர் நம்மில் நிலைத்திருக்கின்றதையும்  நாம் அறிந்துகொள்ளலாம். 

தங்களில் தேவனின் ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை வெளிக்காட்டிக்கொள்ள பல கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் அலறி ஆர்ப்பரிக்கின்றனர்; துள்ளிக் குதிக்கின்றனர். ஆனால், ஆலயத்தைவிட்டு வெளிவந்தபின்னர் இவர்களில் பெரும்பாலானவர்களிடம் எந்த நற்குணமும் இருப்பதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் இருக்கின்றார் என்பதனை நாம் ஒருவர் துள்ளிக்குதித்து ஆர்ப்பரிப்பதினாலல்ல, மாறாக அவர்களது  கனியுள்ள வாழ்க்கையினால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும். தேவனுடைய ஆவியானவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் ஆவிக்குரிய கனிகளின்மூலமே அறியமுடியும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23)

சுருக்கமாகச் சொல்வதானால், ஆவிக்குரிய கனிகள் உள்ளவன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டிருந்து ஜீவனுள்ளவனாக இருப்பான், ஆவிக்குரிய கனியற்றவனோ கிறிஸ்து இல்லாத ஜீவனற்றவனாக இருப்பான். ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதை அவனது நாடித்துடிப்பினால் அறியலாம், சுவாசம் இருக்கின்றதா இல்லையா என்பதைக்கொண்டு அறியலாம். இதுபோலவே ஒரு மனிதனுக்குள் கிறிஸ்து இருப்பதை அவருக்குள்ளிருக்கும் ஆவியினால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும். 

மட்டுமல்ல, அவர் நம்மில் நிலைத்திருக்கிறரென்றால் அவர் நமக்குத் தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவதன் *மூலமும் அறிந்துகொள்ளலாம். வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக நாம் வாழ்வோமானால் இதனை நாம் கண்டுணரமுடியாது. எனவே அன்பானவர்களே, வெறும் ஆராதனையோடு நின்றுவிடாமல் கிறிஸ்து நமக்குள் நிலைத்திருக்கும் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம், அப்போதுதான் நாம் ஜீவனுள்ளவர்களாகவும்  கிறிஸ்துவுக்குச் சாட்சிபகர்பவர்களாகவும் வாழமுடியும்.  

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No.: 2065 | Date: 04.10.2026

"The one who keeps His commandments abides in Him, and He in him. We know by this that He abides in us, by the Spirit whom He has given us." (1 John 3:24)

In science, every theory has experiments and rules that prove it. It is through these that scientific theories are verified as true. The same principle applies to the spiritual life. A true Christian is one who has Christ within them. So, how can we discern whether Christ is in someone?

Today’s meditation verse explains this like a scientific rule, stating, "We know by this that He abides in us, by the Spirit whom He has given us" (1 John 3:24). When we are assured that God's Spirit abides in us, we can also know that He abides in us.

To show that the Spirit of God is within them, many Christians shout aloud and leap with excitement in churches. However, once they step outside the church, most of them display no good character at all.

Yes, beloved, the presence of the Holy Spirit in a person is not known by someone shouting and leaping in excitement, but solely by a life that bears fruit. We can know that God's Spirit abides in us only through spiritual fruit. "But the fruit of the Spirit is love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, self-control; against such things there is no law" (Galatians 5:22–23).

In short, a person who bears spiritual fruit possesses the Son, Jesus Christ, and lives, while one who lacks spiritual fruit is devoid of Christ and has no life. Whether a person has life or not can be known by their pulse or by whether they are breathing. In the same way, the presence of Christ within a person can be known only by the Spirit who is in them.

Furthermore, if He abides in us, we can also know it through the guidance of the Holy Spirit whom He has given to us. If we live merely as nominal, worship-service Christians, we cannot perceive this. Therefore, beloved ones, let us not stop merely at worship; rather, let us yield ourselves to live a true spiritual life where Christ abides in us. Only then can we live as living beings and bear witness for Christ.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...