ஆதவன் தியானம்
வாழ்க்கையில் நாம் எடுக்கும் முயற்சிகள், நமது பிரயாசங்கள் நமக்குச் சாதகமாக இருக்கவேண்டுமானால் கர்த்தர் நம்மோடு இருக்கவேண்டியது அவசியம். அவர் நம்மோடு இருப்பாரானால் நமது தேவையற்ற முயற்சிகளை ஆரம்பநிலையிலேயே நமக்குத் தெரிவித்து அவற்றிலிருந்து நம்மை மாறச்செய்வார்; அவருக்கு ஏற்புடையவைகளை நமக்கு அனுகூலமாகும்படிச் செய்வார்.
ஆம் அன்பானவர்களே, சில செயல்கள் நமது பார்வைக்கு நல்லவையாகத் தெரியும். நல்ல செயல்களாக இருந்தாலும் சிலவேளைகளில் நாம் மற்றவர்களைப்போல அந்தச் செயல்களைச் செய்ய தேவன் அனுமதிப்பதில்லை. அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு அதனைத் தடைசெய்வார். இது ஆவிக்குரிய வாழ்வின் ஒரு இரகசியம். தேவ வார்த்தைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது நல்ல காரியம்தான். ஆனால் சிலவேளைகளில் தேவன் அதனைத் தடைபண்ணுவார். "அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு," ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
ஆனால் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது அவர் நம்மோடுகூடவே இருப்பார். எசேக்கியா ராஜா கர்த்தருக்கு உகந்த செயல்களை செய்து கர்த்தரையே பற்றிக்கொண்டு வாழ்ந்ததால், கர்த்தர் அவரோடு இருந்தார். அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று. இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) என்று வாசிக்கின்றோம். இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.
எசேக்கியாவுக்குமுன் யூதாவை ஆட்சிசெய்த பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் இருபத்தைந்து வயதில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட எசேக்கியா கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
எனவேதான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு நமக்கு வெற்றியாகும். ஆவிக்குரிய கனிகள் நிறைந்தவர்களாகவும் இருப்போம்.
நாம் வெறுமனே ஒரு பக்தி வாழ்க்கை வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மாறாக, கனிகொடுக்கக்கூடிய வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நட்டு, நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்க்கும் மரமானது பல ஆண்டுகள் ஆகியும் கனிகொடுக்கவில்லையானால் அதனால் நமக்கு என்ன பலன்? கனியுள்ள வாழ்க்கை இல்லையானால் நாமும் அதுபோல பலனற்றவர்களாக மாறிவிடுவோம்.
மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார். எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார்.
எசேக்கியா ஜெபித்தபோது, தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது.
நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடிய துணிவுள்ளவர்களாக வாழ்வோமானால் கர்த்தர் நம்மோடு இருப்பார்; நாம் கனிகொடுப்பது மட்டுமல்ல, தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN MEDITATION
No. 2059 – September 28, 2026
“And the LORD was with him; wherever he went he prospered.” (2 Kings 18:7)
If the efforts we make and the struggles, we undertake in life are to work in our favour, it is essential that the Lord be with us. When He is with us, He will make us aware of unnecessary efforts at the very beginning and lead us away from them. At the same time, He will cause the things that are pleasing to Him to work for our good.
Yes, beloved, there are many things that appear good in our eyes. Yet, even when something is good in itself, there may be times when God does not permit us to do it in the same way others do. At times, He may even prevent us from doing certain things for a particular period. This is one of the mysteries of the spiritual life.
Sharing the Word of God with others is certainly a good thing. Yet, there were times when God Himself prevented His servants from doing so. We read:
“They passed through the Phrygian and Galatian region, having been forbidden by the Holy Spirit to speak the word in Asia.” (Acts 16:6, NASB)
However, when we live a life that is pleasing to the Lord, He will remain with us. King Hezekiah did what was pleasing in the sight of the Lord and held firmly to Him; therefore, the Lord was with him. Wherever he went, the Lord gave him success.
We read that Hezekiah “was twenty-five years old when he became king, and he reigned twenty-nine years in Jerusalem.” (2 Kings 18:2, NASB)
At the age of twenty-five, Hezekiah had come to know the Lord and had committed himself to living a life that was pleasing to Him.
Many of the kings who ruled Judah before Hezekiah had turned away from the Lord and lived lives of disobedience. But Hezekiah, who assumed the authority of kingship at the age of twenty-five, remained faithful to the Lord. We read:
“For he clung to the LORD; he did not depart from following Him, but kept His commandments, which the LORD had commanded Moses.” (2 Kings 18:6, NASB)
That is why our Lord Jesus Christ also said:
“Remain in Me, and I in you. As the branch cannot bear fruit of itself unless it remains in the vine, so neither can you unless you remain in Me.” (John 15:4, NASB)
When we remain in the Lord Jesus Christ, wherever we go, our spiritual lives will experience true success. We will also become people who are filled with spiritual fruit.
We have not been called merely to live a religious or devotional life. Rather, we have been called to live a fruit-bearing life. If a tree that we plant, water, fertilize and carefully nurture does not produce fruit even after many years, what benefit is there in it? In the same way, if our lives do not bear spiritual fruit, we too will become unfruitful.
Moreover, when we remain united with the Lord Jesus Christ and live a life that is pleasing to Him, He will graciously hear and answer our prayers.
Because the Lord was with Hezekiah, He heard his prayer and, through the prophet Isaiah, even changed the word He had previously spoken concerning him. Although Hezekiah had initially been told that he would die, the Lord graciously changed His decree and extended Hezekiah’s life by another fifteen years, bringing him joy.
When Hezekiah prayed, he reminded the Lord of the faithfulness with which he had lived before Him. We read:
“Remember now, LORD, I beseech You, how I have walked before You in truth and with a whole heart and have done what is good in Your sight.” And Hezekiah wept profusely. (2 Kings 20:3, NASB)
Beloved, let us live with the confidence to come before the Lord in prayer and speak of our testimony and faithful walk with Him. When we live such lives, the Lord will be with us. We will not only bear fruit, but we will also experience the goodness and blessings.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦






