Saturday, October 24, 2026

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 5 : 20 / 2 Corinthians 5:20

 🌅ஆதவன் தியானம்🌅

எண் :- 2086 - நாள் :- 25.10.2026


"ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 20 ) 

ஸ்தானாதிபதி என்பது பிரதிநிதி என்று பொருள்படும். ஆங்கிலத்தில், Representative அல்லது Ambassador என்று கூறலாம். இந்த ஸ்தானாதிபதி என்பவர் தன்னை அனுப்பியவர் எதற்காகத் தன்னை  அனுப்பினாரோ அந்தப் பணியினை செய்துமுடிக்கக் கடமைப்பட்டவர்.  இப்படியே, தாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் (பாவ மன்னிப்புப்பெறுங்கள்) என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம் என்கின்றார் பவுல். அதாவது,  கிறிஸ்து பாவமன்னிப்பைப்பற்றியே முக்கியமாக மக்களுக்குப் போதிக்கக் கட்டளையிட்டார், அதனையே நாங்கள் செய்கின்றோம் என்கின்றார்.

இதனையே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்களும் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டு "தேவனோடு ஒப்புரவாகுங்கள்" என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றோம் என்கின்றார் அவர்.  நாம் தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாக மாறவேண்டுமானால் முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்துவும் பல இடங்களில் நோயுற்றோரைக் குணமாக்குமுன் அவர்களது பாவங்களை மன்னித்ததை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.  

இதனை இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களுக்கும் கட்டளையாகக் கொடுத்தார். எனவேதான், "தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்."( 2 கொரிந்தியர் 5 : 19 ) என்று கூறுகின்றார் பவுல் அப்போஸ்தலர்.  

தேவன் அப்போஸ்தலரான பவுலை முதல்முதல் சந்தித்தபோது மக்களிடம் பாவ மன்னிப்பைப் போதிக்கவே கட்டளைக்கொடுத்தார். "அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

தேவனுடைய கட்டளைப்படி அப்போஸ்தலரான பவுல் இதனையே முக்கிய போதனையாகப் போதித்து வந்தார். "ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் (பாவ மன்னிப்பு பெறுங்கள்) என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 20 ) என்கின்றார்.  

ஆனால் இந்த ஒப்புரவின் உபதேசம் இன்று மறைக்கப்பட்டு செழிப்பின் உபதேசம் அல்லது ஆசீர்வாத உபதேசம் மேலோங்கியுள்ளது. உலக ஆசீர்வாதங்களைக் கொடுப்பதற்கு இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரிக்கத் தேவையில்லை எனும் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இன்று ஊழியர்கள் பலரும் மக்களை இருளிலே நடமாடவைத்துள்ளனர். 

இன்று உலகினில் கிறிஸ்துவை அறிந்தவர்களையும் அவரை ஆராதிப்பவர்களையும், உண்மையான கிறிஸ்தவர்களையும்விட பிற தெய்வங்களை வழிபடுபவர்கள் மிகுந்த செல்வச்செழிப்புடன் வாழ்வதை நாம் பார்க்கின்றோம். இதுவே, கிறிஸ்து மக்களின் உலகச் செழிப்புக்காக உலகினில் வரவில்லை என்பதற்குச் சாட்சி. 

ஒப்புரவின் போதனைத்தான் மெய்யான கிறிஸ்தவ போதனை. நாமும் அவரைப்போல நிந்தைகளையும் நமது பாவங்களையும், பாடுகளையும்  சுமந்து நகர வாசலுக்குப் புறம்பே கொல்லப்பட்ட பலியாடாகிய அவரிடம் செல்லவேண்டியதே நாம் செய்யவேண்டியது. "ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 13 ) 

கிறிஸ்துவுக்குள் நம்மைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை ஒப்படைத்த கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம். பாவ மன்னிப்பைப் பெற்று அவரை மகிமைப்படுத்தி வாழ்வோம். நமது பாவங்களே தேவனை விட்டு நம்மைப் பிரிக்கும் தடுப்புச் சுவராக இருக்கின்றன. இந்தத் தடுப்புச் சுவர் தகர்க்கப்படவேண்டியது அவசியம். எனவே, நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் அவை கழுவப்பட மன்றாடுவோம். ஏனெனில் அவரால் மட்டுமே நமக்கு மீட்பு உண்டு. 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

🌅 AATHAVAN MEDITATION 🌅

No. 2086 – Date: 25.10.2026

“Therefore, we are ambassadors for Christ, as though God were making an appeal through us; we beg you on behalf of Christ, be reconciled to God.” (2 Corinthians 5:20, NASB)

An ambassador is a representative. An ambassador is someone who is entrusted with a mission by the person who sends him and is responsible for carrying out that mission. In the same way, Paul says, “We are ambassadors for Christ … we beg you on behalf of Christ, be reconciled to God.” In other words, Christ commissioned His messengers to proclaim the forgiveness of sins, and that is the very message they were called to preach.

Paul further explains that God makes His appeal through His servants. As those sent by Christ, they proclaim the message, “Be reconciled to God.” If we are to enter into fellowship with God, our sins must first be forgiven. That is why we read in the Bible that Jesus Christ, on several occasions, forgave people’s sins before healing them of their illnesses.

Jesus Christ also entrusted this message to His disciples as a command. Therefore, the apostle Paul declares, “namely, that God was in Christ reconciling the world to Himself, not counting their wrongdoings against them, and He has committed to us the word of reconciliation” (2 Corinthians 5:19, NASB).

When God first encountered the apostle Paul, He commissioned him to proclaim the forgiveness of sins to the people. The Lord said:

“to open their eyes so that they may turn from darkness to light and from the power of Satan to God, and receive forgiveness of sins and an inheritance among those who have been sanctified by faith in Me.” (Acts 26:18, NASB)

In obedience to God's command, the apostle Paul continued to proclaim this as his central message. He says:

“Therefore, we are ambassadors for Christ, as though God were making an appeal through us; we beg you on behalf of Christ, be reconciled to God.” (2 Corinthians 5:20, NASB)

Sadly, the message of reconciliation is being concealed today, while the teachings of prosperity and worldly blessings are gaining prominence. Many ministers are leading people to walk in darkness, failing even to understand this fundamental truth: Jesus Christ did not come into this world to suffer and die merely to provide people with worldly prosperity and material blessings.

Today, we see that many who worship other gods live in greater material prosperity than those who know Christ, worship Him, and profess to be true Christians. This itself demonstrates that Christ did not come into this world for the purpose of making people prosperous in worldly terms.

The message of reconciliation is the true message of Christianity. Our responsibility is to go to Christ, the sacrificial Lamb who was rejected, who bore our sins and suffered for us, and who was put to death outside the city gate. As the Scripture says:

“So, let’s go out to Him outside the camp, bearing His reproach.” (Hebrews 13:13, NASB)

Let us live with gratitude to Christ, who reconciled us to God through Himself and entrusted us with the message of reconciliation. Let us receive forgiveness for our sins and live lives that glorify Him.

Our sins stand as a dividing wall between God and us. This wall must be broken down. Therefore, let us confess our sins to Him and earnestly pray that they may be washed away by His blood. For He alone is able to redeem us and grant us salvation.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

 

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 3 : 15 -16 / 2 Corinthians 3:15–16

🌅 ஆதவன் தியானம் 🌅 எண் :- 2090 - நாள் :- 29.10.2026 "மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தி...