தியானம் - 2035
இன்று பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகளும் போதகர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அதிசயம் செய்பவராகவும், நோய்களைக் குணமாக்குபவராகவும், தங்களுக்கான உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவுமே அறிந்துள்ளனர்; அப்படியே கிறிஸ்துவைப் பார்க்கின்றனர். ஆனால், கிறிஸ்தவம் என்பது செழிப்பின் மார்க்கமல்ல, அது சிலுவை சுமக்கும் அனுபவத்தையே நமக்கு அடையாளம் காட்டுகின்றதாக இருக்கின்றது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் மீட்பராக, நமது பாவங்களை மன்னிப்பவராக அறியவேண்டியது அவசியம். இதுவே ஆவிக்குரிய பார்வையாகும். மற்றபடி அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என அவரைத் தேடுவது கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிவதாகும். கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்தவன் ஆவிக்குரியவனல்ல. "ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 )
எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" என்கின்றார். கிறிஸ்து செய்த அற்புத அதிசயங்களை மேன்மைப்படுத்தி அதனையே சொல்லிக்கொண்டிருப்பதைவிட சிலுவையில் அறையப்பட்டவராக நாம் கிறிஸ்துவை பார்க்கவேண்டும். காரணம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) இதனையே நாம் அறியவேண்டும்.
எனவேதான் சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்கின்றார் பவுல். அதாவது, நமக்காக இரத்தம் சிந்தி, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் இந்தத் தியாக அன்பைத்தவிர இதற்குமேல் கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் எதனையும் அறிவதை நான் விரும்பவில்லை என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.
அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம். ஆசீர்வாதங்களைத் தருபவராக, நோய்களைக் குணமாக்குபவராக, அதிசயங்களை செய்பவராக மட்டுமே நாம் அவரைப் பார்ப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். காரணம், அப்படிப்பார்க்கும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது; நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடமுடியாது.
கிறிஸ்துவை நமக்காக, நமது பாவங்களுக்காக, சிலுவையில் அறையப்பட்டவராக பார்க்கப் பழகுவோம். அப்போது மட்டுமே நாம் நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மீட்பு அனுபவத்தைப் பெறமுடியும்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Meditation - 2035
"AATHAVAN" | September 04, Friday 2026
"For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified." (1 Corinthians 2:2)
Today, most Christian believers and pastors know the Lord Jesus Christ only as a miracle worker, a healer, and a giver of worldly blessings; that is how they view Him. However, Christianity is not a gospel of prosperity; rather, it reveals to us the experience of bearing the cross.
It is essential that we know the Lord Jesus Christ as our Redeemer who forgives our sins. This is the spiritual perspective. Seeking Him merely to receive something from Him is knowing Christ according to the flesh. Anyone who knows Christ according to the flesh is not spiritual.
"Therefore, from now on we recognize no one according to the flesh; even though we have known Christ according to the flesh, yet now we know Him in this way no longer." (2 Corinthians 5:16)
That is why the Apostle Paul states in today's meditation verse, "For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified." Rather than exalting and constantly speaking about the miracles and wonders Christ performed, we must look at Him as the One who was crucified. For,
"But He was pierced through for our transgressions, He was crushed for our iniquities; the chastisement for our well-being fell upon Him, and by His scourging we are healed." (Isaiah 53:5)
This is what we ought to know.
Therefore, Paul says that he determined to know nothing except Him crucified. In other words, the Apostle Paul is saying: beyond this sacrificial love of Christ—who shed His blood and accepted death on a cross for us—I do not wish for you to know anything else about Him.
Beloved, let us examine how we view Christ. If we view Him only as the giver of blessings, the healer of sicknesses, and the worker of miracles, we are to be pitied. Viewing Him only in that way means our sins cannot be forgiven, and we cannot be set free from our sinful life.
Let us learn to see Christ as the One who was crucified for us and for our sins. Only then can we be set free from a life of sin and receive the experience of salvation.
✍️ Bro. M. Geo Prakash

