ஆதவன் இணைய தளம் குறித்து



"நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்; நீங்கள் என் நாமத்தில்  பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை  அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும் உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன்" - யோவான் - 15:16   

"தவன்"; இணையதளம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகுக்கு    அறிவிக்கும்   நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. ஆறு   ஆண்டுகளாக பத்திரிகை ஊழியம்  நடைபெற்று வந்தது. தவிர்க்க முடியா காரணங்களால் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆதவன் ஊழியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 


ஒருவன் எந்த மார்க்கத்தானாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே  நீதிமானாகிறான். நீதிச் செயல்களோடு கிறிஸ்துவின் மேல் விசுவாசமும் முக்கியம். எனவேதான் வேதம் "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" (ரோமர் -1:17) என்று கூறுகிறது. மனிதர்கள் கிறிஸ்துவை அறியவேண்டும்; அவர் மேல் கொள்ளும்  விசுவாசத்தால் நீதிமானாகவேண்டும்; மேலான ஒரு ஆவிக்குரிய நிலையை அடையவேண்டும். "ஆதவன்" ஊழியங்கள் இதற்கு  வழி காட்டுகின்றது.  

"ஆதவன்"  கிறிஸ்தவ விசுவாசத்தில் மக்கள்  வாழவும் வளரவும் வழிகாட்டுகின்றது.  
       
இந்த இணையதள ஆசிரியர் சகோ. ஜியோ பிரகாஷ். கடவுள் மறுப்பு கொள்கை  கொண்ட இவர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிந்து கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு உலகப் பத்திரிகைகளுக்கு எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டார்.  தான் அனுபவத்தால் அறிந்து கொண்ட "இயேசு ஒருவரே வழியும் சத்தியமும் ஜீவனும்" எனும்  உண்மையை மக்களுக்கு அறிவிக்கும் நோக்கத்தில் நோக்கத்தில் பத்திரிகை மற்றும் இணையதள ஊழியத்தினை ஆரம்பித்தார். இந்த ஊழியத்தை நீதியின் சூரியனான (ஆதவன்)  இயேசு கிறிஸ்துவே துணையாக இருந்து நடத்தி வருகின்றார். 

" தேவன் பட்சபாதகம் உள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாவது அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்". (அப்போஸ்தலர் - 10:34, 35)

முகவரி:-                                                                                                                       

 M. ஜியோ பிரகாஷ்,   18E, சிறு மலர்,  புன்னை  நகர் ,                                 நாகர்கோயில் - 629 004                                   

Cell-96889 33712; 76390 22747. 


DONATIONS / CONTRIBUTIONS MAY BE SEND TO:

NAME;- M. GEO PRAGASH
BANK;- INDIAN BANK, NAGERCOIL 
A/C No. 742819436
IFSC Code:- IDIB000N006


UPI PAYMENTS 









<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5114613328844159"
     crossorigin="anonymous"></script>


googlec5a0582493f55087.htmlhttps://draft.blogger.com/blog/settings/7250370479564948277

No comments: