🌅ஆதவன் தியானம்🌅
எண் :- 2088 - நாள் :- 27.10.2026
"தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி? என்றார்." ( லுூக்கா 20: 44)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் எப்படிப்பார்க்கின்றோம் என்பதனைப் பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்க்கை அமையும். இயேசு கிறிஸ்து தாவீதின் சந்ததியில் பிறந்தார் என்பது உண்மை. ஆனால், அது அவரது மனிதத்தன்மையைக் குறிக்கும் அடையாளம். அவர் உண்மையில் தாவீதின் மகனல்ல, அவர் சர்வ வல்லவரான பிதாவாகிய தேவனின் குமாரன். இதனையே இன்றைய தியான வசனத்தில், "எப்படித் தான் தாவீதுக்கு மகனாக இருக்கமுடியும்" என்று கேட்கின்றார் இயேசு கிறிஸ்து.
இதனையே அப்போஸ்தலரான பவுலும், "இயேசுகிறிஸ்துவைக் குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்." ( ரோமர் 1: 4, 5) என்று கூறுகின்றார்.
மீட்பின் திட்டம் நிறைவேற அவர் இந்த உலகினில் மனிதனாகப் பிறக்கவேண்டியது அவசியமாய் இருந்தது. எனவே அவர் தாவீதின் சந்ததியில் பிறந்தாரேத் தவிர அவர் உண்மையில் தாவீதின் மகனல்ல.
கிறிஸ்துவின் இறைத்தன்மையை அக்காலத்து மக்கள் உணரவில்லை. எனவே, அவரை அவரது குடும்பத்துப் பின்னணியோடு எண்ணிப்பார்த்து, "இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?" ( மத்தேயு 13: 55) என்று கூறிக்கொண்டிருந்தனர். இன்று நாம் கிறிஸ்துவை யாராகப் பார்க்கின்றோம்? அவரது உலக உறவுகளின் பின்னணியிலா இல்லை சர்வ வல்லவரான பிதாவின் குமாரனாகவா?
அன்பானவர்களே, நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவின் மீப்பு அனுபவத்தைப் பெறவேண்டுமானால் கிறிஸ்துவை பிதாவின் குமாரனாகப் பார்க்கவேண்டியது அவசியம். உலக உறவுகளின் அடிப்படையில் கிறிஸ்துவைப் பார்ப்போமானால் அன்று யூதர்கள் அவரைப் பார்த்தது போலவே நாமும் இருப்போம். மட்டுமல்ல, இந்த உலகத்தில் வாழ்ந்து மறைந்த மகாத்மா காந்தி, புத்தர் அல்லது ஒரு மகான் போன்றவர்களைப்போல ஒரு மனிதனாக அவரைப் பார்க்கின்றோம் என்றுதான் பொருள். இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தோமானால் நாம் அவரையும் அவரது தெய்வீகத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது, நமது பாவங்களிலிருந்து மீட்படையவும் முடியாது.
இதனையே, வேதாகமம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3: 16) என்று. ஆம், நாம் ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்குப் பிதாவாகிய தேவன் தனது ஒரேபேறான குமாரனை இந்த உலகிற்கு அனுப்பினார். அவரை பிதாவின் மகனாக முற்றிலும் பார்க்காமல், வேறு உலக உறவுகளின் அடிப்படையில் மட்டும் பார்த்து அவர்களின் மகனாக எண்ணிக்கொண்டிருப்போமானால் நாம் பாவ மன்னிப்பையும் அதனால் கிடைக்கப்போகும் நித்தியஜீவனையும் இழந்துவிடுவோம்.
"உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." (1 யோவான் 5 : 13)
இயேசு கிறிஸ்துவை வெறும் பூமிக்குரிய குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு மனிதராக மட்டுமே நாம் பார்க்கிறோமா, அல்லது அவர் இறைவனின் குமாரன் மற்றும் நம்முடைய இரட்சகர் என்று உண்மையாகவே நம்புகிறோமா? வேதவசனங்களில் அவர் தன்னை வெளிப்படுத்தியபடியே, அவர் மீது நம்பிக்கை வைப்பதில்தான் நம்முடைய பாவமன்னிப்பும் நித்திய ஜீவனும் அடங்கியுள்ளன.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
🌅 AATHAVAN
MEDITATION 🌅
No.
2088 – Date: 27.10.2026
“David therefore calls Him ‘Lord,’ and how is He, his son?”
(Luke 20:44, NASB)
Our spiritual life depends on how we view the Lord Jesus
Christ. It is true that Jesus Christ was born in the lineage of David. However,
this identifies His human ancestry. He is not merely David’s son; He is the Son
of God the Almighty Father. This is precisely what Jesus Christ asks in today’s
meditation verse: “How, then, can He be David’s son?”
The Apostle Paul also explains this truth: “concerning His
Son, who was born of a descendant of David according to the flesh, who was
declared the Son of God with power by the resurrection from the dead, according
to the Spirit of holiness, Jesus Christ our Lord” (Romans 1:3–4, NASB).
For the plan of redemption to be fulfilled, it was necessary
for Him to be born as a human being in this world. Therefore, He was born in
the lineage of David, but He is far more than merely David’s son.
The people of those days did not recognize the divine nature
of Christ. Instead, they viewed Him in the light of His family background,
saying, “Is this not the carpenter’s son? Is His mother not called Mary, and
His brothers James, Joseph, Simon, and Judas?” (Matthew 13:55, NASB).
How do we view Christ today? Do we see Him merely in the
context of His earthly family relationships, or do we recognize Him as the Son
of God, the Almighty Father?
Dearly beloved, if we are to receive forgiveness for our sins
and experience the redemption offered through Christ, we must recognize Him as
the Son of the Father. If we view Christ merely in terms of His earthly
relationships, we will be no different from the Jews who viewed Him that way in
those days. Moreover, regarding Him merely as a human being, like Mahatma
Gandhi, Buddha, or another great spiritual figure who lived and died in this
world, means that we fail to recognize His divine identity. If we continue to
view Him in this manner, we will neither understand who He truly is nor receive
redemption from our sins.
The Bible declares this truth very clearly: “For God so loved
the world, that He gave His only Son, so that everyone who believes in Him will
not perish, but have eternal life” (John 3:16, NASB).
Yes, God the Father sent His only Son into this world so that
none of us should perish, but that we might receive eternal life. If we fail to
recognize Him fully as the Son of the Father and regard Him only in terms of
earthly family relationships, we risk losing the forgiveness of our sins and
the eternal life that comes through Him.
The Bible assures us: “These things I have written to you who
believe in the name of the Son of God, so that you may know that you have
eternal life” (1 John 5:13, NASB).
Do we recognize Jesus Christ merely as a man with an earthly
family background, or do we truly believe that He is the Son of God and our
Saviour? Our forgiveness and eternal life depend on placing our faith in Him as
He has revealed Himself in Scripture.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦
கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்? அவரது உலக உறவுகளின் பின்னணியிலா, இல்லை பிதாவின் குமாரனாகவா?
No comments:
Post a Comment