Friday, October 16, 2026

May the Eyes of Our Hearts Be Enlightened (Ephesians 1:17–18)


                                            - Sr. Amutha, ICM

In today’s passage, St. Paul prays that God may give us a spirit of wisdom and revelation so that we may truly know Him.. True wisdom is not merely knowing more about God, but allowing Him to transform the way we see and live our lives. That is why Paul prays that the eyes of our hearts may be enlightened. Our physical eyes see what happens around us, but the eyes of our hearts help us recognize God’s presence and purpose in our experiences. An enlightened heart does not mean that our problems disappear; it means that we learn to see them in the light of God’s faithfulness.

Paul invites us to discover the hope of God’s call and the riches of His glorious inheritance. Our true wealth is not measured by our possessions, achievements, or positions, but by belonging to God and living according to His purpose. Even when the future is uncertain, His call gives us hope and direction.

Therefore, let us ask ourselves: Are we seeking only God’s help to change our circumstances, or are we also allowing Him to change the way we see them? Perhaps God is inviting us to recognise His presence in our difficulties, listen to His voice through others, or let go of our fears and expectations.

When the eyes of our hearts are enlightened, we begin to see with faith, live with hope, and respond with love. We may not understand everything that happens in our lives, but we can trust the God who has called us.

Father of glory, enlighten the eyes of our hearts. Help us to know You more deeply, recognise the hope of Your call, and live faithfully according to Your purpose. May our lives reflect Your glory. Amen.

நம் உள்ளத்தின் கண்கள் ஒளிபெறட்டும்! (எபேசியர் 1:17–18)

இன்றைய வாசகத்தில், நாம் இறைவனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள ஞானத்தையும் வெளிப்பாட்டையும் தருமாறு புனித பவுல் இறைவனிடம் வேண்டுகிறார். இறைவனைப் பற்றித் தெரிந்துகொள்வது வேறு; இறைவனை நெருக்கமாக அனுபவித்து அறிந்துகொள்வது வேறு. நாம் இறைவனைப் பற்றி நிறைய அறிந்திருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அவர் நம்மோடு இருப்பதை உணராமல் இருக்கலாம். உண்மையான ஞானம் என்பது இறைவனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வது மட்டுமல்ல; அவர் நம்முடைய சிந்தனையையும் பார்வையையும் வாழ்க்கையையும் மாற்றுவதற்கு இடமளிப்பதாகும்.

அதனால்தான், நம் உள்ளத்தின் கண்கள் ஒளிபெற வேண்டும் என்று பவுல் வேண்டுகிறார். நம் கண்கள் வெளியில் நடப்பவற்றைப் பார்க்கின்றன; ஆனால் உள்ளத்தின் கண்கள்தான் நம் வாழ்க்கையில் இறைவன் செயல்படுவதை உணர உதவுகின்றன. பயம் நம் நம்பிக்கையை மறைக்கலாம்; ஏமாற்றம் நம்மை நம்பிக்கையிழக்கச் செய்யலாம்; துன்பங்கள் இறைவனின் உடனிருப்பையே கேள்விக் குறியாக்கலாம். உள்ளத்தின் கண்கள் ஒளிபெறுவது என்பது நம் பிரச்சினைகள் மறைந்துவிடுவது அல்ல; அவற்றின் நடுவிலும் இறைவனின் நம்பகத்தன்மையையும் உடனிருப்பையும் உணர்வதாகும்.

பவுல் நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை நினைவூட்டுகிறார்: இறைவனின் அழைப்பில் நமக்குக் கிடைக்கும் நம்பிக்கை, அவருடைய மாட்சிமை நிறைந்த உரிமைச் சொத்தில் நமக்குள்ள பங்கு. நம்முடைய உண்மையான செல்வம் பதவியோ, சொத்தோ, சாதனைகளோ அல்ல; நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதும், அவர் நமக்கென்று ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார் என்பதுமே நம் பெரும் செல்வம்.

எனவே, நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் மாற வேண்டும் என்று மட்டும் வேண்டாமல், “இறைவா, இந்தச் சூழ்நிலையின் வழியாக நீர் எனக்கு எதை உணர்த்த விரும்புகிறீர்?” என்று கேட்போம். நம் பயத்தையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட்டு, இறைவனின் வழிநடத்துதலை நம்பக் கற்றுக்கொள்வோம். நம் உள்ளத்தின் கண்கள் ஒளிபெறும்போது, நம்பிக்கையோடு பார்க்கவும், எதிர்நோக்கோடு வாழவும், அன்போடு செயல்படவும்கற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நம்மை அழைத்த இறைவனை நம்பி முன்னேற முடியும்.

மாட்சிமை நிறைந்த தந்தையே, எங்கள் உள்ளத்தின் கண்களை ஒளிரச் செய்யும். உம்மை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவும், உமது அழைப்பின் நம்பிக்கையை உணரவும், உமது திருவுளத்தின்படி வாழவும் எங்களுக்கு அருள்புரியும். எங்கள் வாழ்வு உமது மாட்சியை வெளிப்படுத்துவதாக. ஆமென்.

Sr அமுதா ICM

🦋 Meditation verse - വെളിപ്പാടു 20:15

 ആഥവൻ ധ്യാനം

നമ്പർ: 2079 — തീയതി: 18.10.2026

"ജീവപുസ്തകത്തിൽ പേരെഴുതപ്പെട്ടവനായി കാണപ്പെടാത്ത ഏവനെയും തീപ്പൊയ്കയിൽ തള്ളിക്കളഞ്ഞു." — വെളിപ്പാടു 20:15 (NIBV)

തങ്ങൾ ക്രിസ്ത്യാനികളാണെന്ന് അവകാശപ്പെടുമ്പോഴും പല ക്രിസ്ത്യാനികളും വ്യത്യസ്തമായ മനോഭാവവും ചിന്തകളും ബുദ്ധിയും ഉള്ളവരായി കാണപ്പെടുന്നു. അതായത്, വേദപുസ്തകം പറയുന്ന കാര്യങ്ങളിൽ തങ്ങൾക്ക് അനുയോജ്യമായതോ ഐഹിക ജീവിതത്തിന് ഉപകരിക്കുന്നതോ ആയ ചില സത്യങ്ങളെ ഇവർ അംഗീകരിക്കുന്നു. എന്നാൽ വിശ്വാസക്കണ്ണുകളോടെ നോക്കിക്കാണേണ്ട ഉയർന്ന ആത്മീയ സത്യങ്ങളെ പലതിനെയും ഇവർ അംഗീകരിക്കുന്നില്ല.

യേശു അനുഗ്രഹിക്കുന്നു, രോഗങ്ങളെ സൗഖ്യമാക്കുന്നു, ചോദിക്കുന്നത് നൽകുന്നു എന്ന് ഇവർ വിശ്വസിക്കും; അതിനായി പ്രാർത്ഥിക്കുകയും ചെയ്യും. എന്നാൽ ന്യായവിധി, സ്വർഗ്ഗം, നിത്യജീവൻ, മരിച്ചവരുടെ പുനരുത്ഥാനം തുടങ്ങിയ മഹത്തായ സത്യങ്ങളെ പൂർണ്ണമായി അംഗീകരിക്കുന്നുമില്ല. "ഇതൊക്കെ ആര് കണ്ടു? നാം മരിക്കുമ്പോൾ സത്യം അറിയാം" എന്ന് നിസ്സാരമായി പറഞ്ഞ് ഇവ മനസ്സിലാക്കാൻ താല്പര്യം കാണിക്കാതെ ഒഴിഞ്ഞുമാറും. ചിലരാകട്ടെ ഇവയെല്ലാം ചില വിഭാഗക്കാരുടെ പഠിപ്പിക്കലാണെന്ന് വാദിക്കുന്നു.

ഞാൻ ഒരിക്കൽ ഒരു ക്രിസ്ത്യാനിയോട് ജീവപുസ്തകത്തെക്കുറിച്ച് പറഞ്ഞപ്പോൾ അദ്ദേഹം ചിരിക്കുകയാണ് ചെയ്തത്. പോരാത്തതിന് അദ്ദേഹം വലിയൊരു ഭക്തനുമായിരുന്നു. അദ്ദേഹം എന്നോട് പറഞ്ഞു: "ജിയോ, നിനക്ക് കുറെയൊക്കെ വിവരമുണ്ടെന്നാണ് ഞാൻ കരുതിയിരുന്നത്, നീയാണോ ഇതെല്ലാം വിശ്വസിക്കുന്നത്?"

എന്നാൽ വേദപുസ്തകം വ്യക്തമായും കൃത്യമായും പറയുന്നു:

"മരിച്ചവരായ വലിയവരും ചെറിയവരും ദൈവസിംഹാസനത്തിനു മുൻപിൽ നിൽക്കുന്നതു ഞാൻ കണ്ടു. അപ്പോൾ പുസ്തകങ്ങൾ തുറക്കപ്പെട്ടു; ജീവന്റെ പുസ്തകമെന്ന വേറൊരു പുസ്തകവും തുറക്കപ്പെട്ടു; പുസ്തകങ്ങളിൽ എഴുതിയിരുന്നതിന് ഒത്തവണ്ണം മരിച്ചവർക്ക് അവരവരുടെ പ്രവൃത്തികൾക്കടുത്ത ന്യായവിധി ഉണ്ടായി." — വെളിപ്പാടു 20:12 (NIBV)

നമ്മുടെ കർത്താവായ യേശുക്രിസ്തുവും പറഞ്ഞു:

"എങ്കിലും ആത്മാക്കൾ നിങ്ങൾക്ക് കീഴ്പെടുന്നതിലല്ല, നിങ്ങളുടെ പേരുകൾ സ്വർഗ്ഗത്തിൽ എഴുതിയിരിക്കുന്നതിൽ സന്തോഷിപ്പിൻ." — ലൂക്കോസ് 10:20 (NIBV)

ഇത്തരം ക്രിസ്ത്യാനികൾ യേശുക്രിസ്തുവിൽ വിശ്വസിക്കുന്നുവെന്ന് പറയുമ്പോഴും അവിടുന്ന് അരുളിച്ചെയ്ത കാര്യങ്ങളെ വിശ്വസിക്കുന്നില്ല.

പല പരിശുദ്ധന്മാരും ജീവപുസ്തകത്തെക്കുറിച്ച് അറിവുള്ളവരായിരുന്നു. ഇസ്രായേൽ ജനത്തിന്റെ പാപമോചനത്തിനായി ദൈവത്തോട് അപേക്ഷിച്ചപ്പോൾ മോശെ ഇപ്രകാരം പ്രാർത്ഥിച്ചതായി നാം വായിക്കുന്നു:

"എങ്കിലും അങ്ങേക്ക് മനസ്സുണ്ടെങ്കിൽ അവരുടെ പാപം ക്ഷമിക്കേണമേ; അല്ലാത്തപക്ഷം അങ്ങ് എഴുതിയ പുസ്തകത്തിൽനിന്ന് എന്റെ പേര് മായിച്ചുകളയേണമേ." — പുറപ്പാടു 32:32 (NIBV)

അതായത്, എന്റെ പേര് ജീവപുസ്തകത്തിൽ നിന്ന് അവിടുന്ന് മായിച്ചുകളഞ്ഞാലും സാരമില്ല, അതിനുപകരമായി ഇവരുടെ പാപങ്ങൾ ക്ഷമിക്കേണമേ എന്നാണ് മോശെ അപേക്ഷിക്കുന്നത്.

അപ്പൊസ്തലനായ പൗലൊസ് തന്നോടൊപ്പം സുവിശേഷവേല ചെയ്തവരുടെ പേരുകൾ ജീവപുസ്തകത്തിൽ എഴുതപ്പെട്ടിട്ടുണ്ടെന്ന് വ്യക്തമാക്കുന്നു:

"അതേ, ഉത്തമ സഹകാരിയായുള്ളോവേ, സുവിശേഷഘോഷണത്തിൽ ക്ലെമന്തോടും എന്റെ മറ്റു സഹപ്രവർത്തകരോടുമൊപ്പം എന്നോട് കൂടെ അധ്വാനിച്ച ആ സ്ത്രീകൾക്ക് സഹായം ചെയ്യണമെന്ന് നിന്നോടും ഞാൻ അപേക്ഷിക്കുന്നു; അവരുടെ പേരുകൾ ജീവന്റെ പുസ്തകത്തിലുണ്ടല്ലോ." — ഫിലിപ്പിയർ 4:3 (NIBV)

വേദപുസ്തകസത്യങ്ങൾ മുഴുവനായും നാം വിശ്വസിച്ചംഗീകരിക്കേണ്ടത് അത്യന്താപേക്ഷിതമാണ്. നമുക്ക് ആവശ്യമുള്ളതും നമ്മുടെ ബുദ്ധിക്ക് നിരക്കുന്നതും മാത്രം സ്വീകരിച്ച് മറ്റു സത്യങ്ങളെ തള്ളിക്കളഞ്ഞാൽ ഒടുവിലത്തെ ന്യായവിധിയിൽ നാം തീപ്പൊയ്കയിൽ തള്ളപ്പെടാൻ ഇടയായേക്കാം. ജാഗ്രതയുള്ളവരായിരിക്കാം. നമ്മുടെ പേരുകൾ ജീവപുസ്തകത്തിൽ എഴുതപ്പെടുവാൻ പ്രയത്നിക്കാം.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

🦋 Meditation verse - வெளி. விசேஷம் 20 : 15 / Revelation 20:15

ஆதவன் தியானம்

எண் :- 2079 - நாள் :- 18.10.2026


"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பல கிறிஸ்தவர்கள் வித்தியாச மனநிலையும், புத்தியும், சிந்தனைகளும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதாவது, இவர்கள் வேதம் கூறும் தங்களுக்கு ஏற்புடைய அல்லது தங்களுக்கு உலக வாழ்கைக்குப் பயன்தரக்கூடிய சில உண்மைகளை ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், விசுவாசக்கண்கொண்டு பார்க்கவேண்டிய மேலான ஆவிக்குரிய பல உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை. 

இயேசு ஆசீர்வதிக்கின்றார், நோய்களைக் குணமாக்குகின்றார், கேட்பதைத் தருகின்றார் என்று நம்புவார்கள்; அதற்காக ஜெபிப்பார்கள். ஆனால் மேலான உண்மைகளான நியாயத்தீர்ப்பு, பரலோகம், நித்தியஜீவன், மரித்தோரின் உயிர்த்தெழுதல் போன்றவற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதில்லை. "இவற்றையெல்லாம் யார் கண்டது? நாம் செத்தால்தான் உண்மை தெரியும்" என்று சுலபமாகக் கூறி இவற்றை அறிவதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடுவார்கள். சிலர் இவையெல்லாம் பிரிவினை சபையினரின் போதனை என்கின்றனர். 

நான் ஒருமுறை ஜீவபுத்தகம் குறித்து ஒரு கிறிஸ்தவரிடம் கூறியபோது சிரித்துவிட்டார். இத்தனைக்கும் அவர் மிகப்பெரிய பக்திமான். அவர் என்னிடம், "ஜியோ, உன்னை நான் கொஞ்சம் விபரம் உள்ளவன் என எண்ணியிருந்தேன், ஆனால் நீ இவற்றையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறாயே?" என்றார். 

ஆனால் வேதாகமம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது, "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 ) என்று. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்." ( லுூக்கா 10 : 20 ) இத்தகைய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாலும் அவர் கூறுவதை  விசுவாசிப்பதில்லை. 

பல பரிசுத்தவான்களும் ஜீவபுத்தகத்தைக் குறித்து அறிந்திருந்தார்கள். இஸ்ரவேல் மக்களது பாவ மன்னிப்புக்காக தேவனிடம் வேண்டியபோது மோசே, "ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்." ( யாத்திராகமம் 32 : 32 ) என்று வேண்டியதை வாசிக்கின்றோம். அதாவது, எனது பெயரை ஜீவபுத்தகத்திலிருந்து நீர் அழித்துப்போட்டாலும் பரவாயில்லை, அதற்கு ஈடாக இவர்களது பாவங்களை மன்னித்தருளும் என்று வேண்டுகின்றார் மோசே. 

அப்போஸ்தலரான பவுல் தன்னோடு நற்செய்திப்பணியாற்றியவர்களின் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன என்று கூறுகின்றார்.  "அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது." ( பிலிப்பியர் 4 : 3 )

வேதாகம சத்தியங்கள் அனைத்தையுமே நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். நமக்குத் தேவையானவற்றையும் நமது அறிவுக்குப் புலப்படுவதையும் மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற சத்தியங்களைப் புறம்தள்ளினால் இறுதி நியாயத்தீர்ப்பில் நாம் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்ட நேரிடலாம். எச்சரிக்கையாக இருப்போம். நமது பெயர்கள் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட முயற்சியெடுப்போம்.   

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No: 2079 — Date: 18.10.2026

"And if anyone’s name was not found written in the book of life, he was thrown into the lake of fire." — Revelation 20:15 (NASB)

Even while calling themselves Christians, many believers possess different mindsets, thoughts, and reasoning. That is, they accept certain biblical truths that suit them or benefit their earthly lives, yet they reject many higher spiritual truths that must be viewed with eyes of faith.

They believe that Jesus blesses, heals diseases, and grants what is asked; they pray for these things. But they fail to fully accept higher spiritual truths such as judgment, heaven, eternal life, and the resurrection of the dead. They easily shrug it off by saying, "Who has seen all these? We will only know the truth after we die," staying indifferent without showing any desire to know these things. Some even claim these are teachings of secret/sectarian churches.

Once, when I spoke to a Christian about the Book of Life, he laughed. Mind you, he was considered a very pious man. He told me, "Geo, I thought you were someone with some understanding, but are you really believing in all this?"

However, the Bible speaks clearly and explicitly:

"And I saw the dead, the great and the small, standing before the throne, and books were opened; and another book was opened, which is the book of life; and the dead were judged from the things which were written in the books, according to their deeds." — Revelation 20:12 (NASB)

Our Lord Jesus Christ also said: "Nevertheless, do not rejoice in this, that the spirits are subject to you, but rejoice that your names are recorded in heaven." — Luke 10:20 (NASB) But, such Christians, though they believe in Jesus Christ, do not believe what He says.

Many saints were also aware of the Book of Life. When Moses pleaded with God for the forgiveness of Israel's sins, we read how he prayed:

"But now, if You will forgive their sin—and if not, please wipe me out from Your book which You have written!" — Exodus 32:32 (NASB)

In other words, Moses prayed: "Even if You erase my name from the Book of Life, forgive their sins in exchange."

The Apostle Paul states that the names of those who laboured with him in the gospel ministry are written in the Book of Life:

"Indeed, true companion, I ask you also to help these women who have shared my struggle in the cause of the gospel, together with Clement as well and the rest of my fellow workers, whose names are in the book of life." — Philippians 4:3 (NASB)

It is essential that we believe and accept all the truths of the Bible. If we accept only what is convenient for us or understandable to our human intellect while casting aside other spiritual truths, we may end up being thrown into the lake of fire at the final judgment. Let us be cautious. Let us strive to ensure our names are written in the Book of Life.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

Thursday, October 15, 2026

Sealed with the Holy Spirit (Ephesians 1:12–14) / தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்கள் (எபேசியர் 1:12–14)

Living for the Praise of His Glory

                                       -  Sr.  Amutha,  ICM

In today's reading, St Paul reminds us of three profound truths: we exist for the praise of God's glory, we are sealed with the promised Holy Spirit, and the Spirit is the first instalment of our inheritance. These truths reveal who we are, how we are called to live, and where our journey is leading us

1. We exist for the praise of His glory. What does it mean to live for the praise of God's glory? It means allowing our lives to reveal God's goodness. Our words, attitudes, relationships, and actions should make His love visible to others. We may speak about God and perform many good works, but the deeper question is: Can others experience God's love through the way we treat them? The greatest praise we offer God is not only through our words, but through the lives we live.

2. ⁠We are sealed with the promised Holy Spirit. Through Baptism, we belong to Christ, and the Holy Spirit dwells within us. We are precious because we belong to God. This gift also calls us to live according to the Spirit. Are our words guided by truth, our decisions shaped by love, and our relationships marked by peace? Being sealed with the Spirit means allowing Him to transform our lives from within.

3. ⁠The Holy Spirit is the first instalment of our inheritance. An instalment is the first part of something greater that is yet to come. The Holy Spirit is God's gift to us now, assuring us of the fullness of life promised in Christ. We have not yet experienced the fullness of God's Kingdom, but His presence is already at work within us, leading us towards eternal life.

4. To the praise of His glory. St Paul begins and ends this passage with the same words, reminding us of the purpose of our Christian life. This repetition reminds us that our entire Christian life should reveal God's goodness. Even in our service to God, we may seek recognition and appreciation. So we must ask ourselves: Am I living to make God known, or to make myself known? When we serve faithfully, forgive sincerely, and care for others without expecting anything in return, God's glory shines through us.

We belong to God, we are sealed with His Spirit, and we are journeying towards the fullness of His promise. Let us allow the Holy Spirit to guide our thoughts, words, actions, and relationships. May our lives become a living testimony to God's goodness, so that everything we do may be to the praise of His glory.

Loving Father, help us to live as people who belong to You, guided by Your Holy Spirit. May our words, actions, and relationships reveal Your goodness, so that everything we do may be to the praise of Your glory. Amen.

தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்கள்  நாம், இறைவனின் மாட்சிமைக்காக வாழ்வோம் (எபேசியர் 1:12–14)

இன்றைய வாசகத்தில் புனித பவுல் மூன்று உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார்: நாம் இறைவனின் மாட்சிமைக்காக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்; தூய ஆவியால் முத்திரையிடப் பட்டிருக்கிறோம்; இறைவன் வாக்களித்துள்ள நிறைவான வாழ்வின் முன் அடையாளமாகத் தூய ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம். இந்த உண்மைகள் நாம் யார், எப்படி வாழ வேண்டும், நம் வாழ்வின் பயணம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்துகின்றன.

1. இறைவனின் மாட்சிமைக்காக வாழ்வோம்.

இறைவனின் மாட்சிமைக்காக வாழ்வது என்றால், நம்முடைய வாழ்வின் வழியாக அவருடைய அன்பையும் நன்மையையும் வெளிப்படுத்துவதாகும். நம்முடைய பேச்சு, மனநிலை, உறவுகள், செயல்கள் அனைத்தும் இறைவனின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் இறைவனைப் பற்றிப் பேசலாம்; பல நல்ல செயல்களையும் செய்யலாம். ஆனால், நாம் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தின் வழியாக அவர்களால் இறைவனின் அன்பை உணர முடிகிறதா? என்பதே முக்கியம். நம்முடைய வாழ்வே இறைவனுக்குச் செலுத்தும் உண்மையான புகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

2. தூய ஆவியால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்.

திருமுழுக்கின் வழியாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகிறோம்; தூய ஆவியானவர் நமக்குள் குடிகொண்டிருக்கிறார். நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதால் அவருடைய பார்வையில் விலைமதிப்பற்றவர்கள். இந்தக் கொடை, தூய ஆவியின் வழிநடத்துதலின்படி வாழவும் நம்மை அழைக்கிறது. நம்முடைய வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்துகின்றனவா? நமது முடிவுகள் அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவா? உறவுகளில் அமைதியைக் கடைப்பிடிக்கிறோமா? தூய ஆவியால் முத்திரையிடப் பட்டிருப்பது என்பது, அவர் நமக்குள் இருந்து நம் வாழ்வை மாற்றுவதற்கு இடமளிப்பதாகும்.

3. தூய ஆவியானவர் நமது உரிமைப் பேற்றின் முன் அடையாளமாக இருக்கிறார்.

ஒரு பெரிய கொடையின் முதல் பகுதியைப் பெறுவதைப்போல, தூய ஆவியானவர் இறைவன் நமக்கு இப்போதே வழங்கியுள்ள கொடையாக இருக்கிறார். கிறிஸ்துவின் வழியாக இறைவன் வாக்களித்துள்ள நிறைவான வாழ்வை நாம் பெறுவோம் என்பதற்கு அவர் உறுதியளிக்கிறார். இறையாட்சியின் முழுமையை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை. ஆனால், இறைவன் நம்மோடு இருக்கிறார்; தூய ஆவியானவர் நமக்குள் செயல்பட்டு, நம்மை நிலைவாழ்வை நோக்கி வழிநடத்துகிறார்.

4. அனைத்தும் இறைவனின் மாட்சிமைக்காகவே!

வாசகத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் புனித பவுல் இறைவனின் மாட்சிமையை வலியுறுத்துகிறார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் நோக்கம் இறைவனின் நன்மையை உலகிற்கு வெளிப்படுத்துவதே. ஆனால், இறைவனுக்குச் செய்யும் பணியில்கூட சில நேரங்களில் பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறோம்.

எனவே, நாம் நம்மையே கேட்டுக் கொள்வோம்: என் வாழ்வின் வழியாக இறைவனை மற்றவர்கள் அறியச் செய்கிறேனா, அல்லது என்னைப் பற்றியே அவர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேனா?

நாம் உண்மையோடு செயலாற்றும் போதும், மனமார மன்னிக்கும்போதும், எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களைக் கவனித்துக்கொள்ளும் போதும், நம்முடைய வாழ்வின் வழியாக இறைவனின் மாட்சி வெளிப்படுகிறது.

நாம் இறைவனுக்குச் சொந்தமானவர்கள்; தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்கள்; அவர் வாக்களித்துள்ள நிறைவான வாழ்வை நோக்கிப் பயணம் செய்பவர்கள். எனவே, நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுகள் அனைத்தையும் தூய ஆவியானவர் வழிநடத்த அனுமதிப்போம். நம்முடைய வாழ்வு இறைவனின் அன்பையும் நன்மையையும் வெளிப்படுத்தும் சாட்சியாக அமையட்டும்.

அன்புத் தந்தையே, நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணர்ந்து, தூய ஆவியின் வழிநடத்துதலின்படி வாழ உதவியருளும். எங்கள் வார்த்தைகள், செயல்கள், உறவுகள் அனைத்தின் வழியாகவும் உமது அன்பையும் நன்மையையும் வெளிப்படுத்த அருள்தாரும். நாங்கள் செய்யும் அனைத்தும் உமது மாட்சிமைக்காகவே அமையட்டும். ஆமென்.

அமுதா ICM

🦋 Meditation verse - ലൂക്കൊസ് 11 : 52

 ആധവൻ ധ്യാനം

നമ്പർ :- 2078 — തീയതി :- 17.10.2026

"ന്യായോപദേഷ്ടാക്കന്മാരായ നിങ്ങൾക്കു ഹാ കഷ്ടം! നിങ്ങൾ അറിവിന്റെ താക്കോൽ എടുത്തുകളഞ്ഞു; നിങ്ങൾ തന്നേ പ്രവേശിച്ചതുമില്ല, പ്രവേശിക്കുന്നവരെ തടയുകയും ചെയ്തു." (ലൂക്കൊസ് 11 : 52, NIBV)

പൂർവ്വകാലത്ത് വേദപുസ്തക പണ്ഡിതന്മാരായിരുന്നു ന്യായോപദേഷ്ടാക്കന്മാർ (ശാസ്ത്രിമാർ). ഇന്നത്തെ ധ്യാനവചനം അവർക്കായി പറഞ്ഞതുപോലെ തോന്നാമെങ്കിലും, വെറും മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ട് വേദപുസ്തകം പഠിപ്പിക്കുന്ന ശുശ്രൂഷകന്മാർക്കും ഇത് ഒരുപോലെ ബാധകമാണ്.

ദൈവത്തെ അറിയുന്നതിന് പ്രധാന തടസ്സമായി നിൽക്കുന്നത് മനുഷ്യന്റെ ബുദ്ധിയാണ്. നമ്മുടെ മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ട് ചരിത്രം, ഭൂമിശാസ്ത്രം, ശാസ്ത്രം, രസതന്ത്രം, ഗണിതം എന്നിവയെല്ലാം മനസ്സിലാക്കാൻ നമുക്ക് സാധിക്കും. എന്നാൽ ദൈവത്തെ ഇപ്രകാരം മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ട് അറിയാൻ കഴിയില്ല. ഇന്ന് പലരും മറ്റു പുസ്തകങ്ങൾ വായിക്കുന്നതുപോലെ വേദപുസ്തകം വായിക്കുകയും, സ്വന്തം ബുദ്ധിയുടെ വ്യാഖ്യാനത്തിനനുസരിച്ച് ദൈവവചനത്തിന് അർത്ഥം നൽകുകയും ചെയ്യുന്നു.

വേദപുസ്തകം വായിക്കുന്നതിലൂടെ ദൈവത്തെ അറിയാൻ കഴിയുമെന്ന് പലരും കരുതുന്നു. എന്നാൽ, ആദ്യം നമ്മൾ ദൈവത്തെ അറിഞ്ഞതിനുശേഷം വേദപുസ്തകം വായിക്കുകയാണെങ്കിൽ, അതിൽ പറഞ്ഞിരിക്കുന്ന ദൈവവചനങ്ങൾക്കു പുതിയ വെളിപ്പാടുകളും വ്യക്തതയും ഉണ്ടാകും. അതേ പ്രിയമുള്ളവരേ, വേദപുസ്തകത്തിലുടനീളം "ദൈവത്തെക്കുറിച്ചുള്ള അറിവ്" എന്ന വാക്കുകൾ ഉപയോഗിച്ചിരിക്കുന്നത് നമുക്ക് കാണാൻ കഴിയും.

ദൈവത്തെ അറിയാത്ത ഒരുവന് വേദപുസ്തകം പറയുന്ന ആത്മീയ സത്യങ്ങൾ അറിയാൻ സാധിക്കില്ല. അങ്ങനെ അറിയാത്ത ഒരുവന് മറ്റുള്ളവർക്ക് വേദപുസ്തകം ശരിയായി ഉപദേശിക്കാനും കഴിയില്ല. കാരണം:

"ജഡസ്വഭാവമുള്ളവർ ജഡത്തിന്നടുത്തതും ആത്മാവുള്ളവർ ആത്മാവിന്നടുത്തതും ചിന്തിക്കുന്നു." (റോമർ 8 : 5, NIBV)

ആത്മീയ ജീവിത അനുഭവത്തിലേക്ക് വന്ന ഒരുവനു മാത്രമേ ആത്മീയ ചിന്തകൾ ഉള്ളവനായിരിക്കാൻ സാധിക്കൂ. മാത്രമല്ല:

"ദൈവാത്മാവു നിങ്ങളിൽ വസിക്കുന്നു എങ്കിൽ നിങ്ങൾ ജഡത്തിലല്ല, ആത്മാവിലത്രേ. ക്രിസ്തുവിന്റെ ആത്മാവില്ലാത്തവൻ അവനുള്ളവനല്ല." (റോമർ 8 : 9, NIBV)

അതെ പ്രിയമുള്ളവരേ, ദൈവത്തെ അറിയാൻ മസ്തിഷ്ക ബുദ്ധിയല്ല ആവശ്യം, മറിച്ച് കുഞ്ഞുങ്ങളെപ്പോലെയുള്ള ഹൃദയമാണ് ആവശ്യം. ഇതുതന്നെയാണ് കർത്താവായ യേശു ഇപ്രകാരം പറയുന്നത്:

"പിതാവേ, സ്വർഗ്ഗത്തിനും ഭൂമിക്കും നാഥനായുള്ളോവേ, നീ ഇവ ജ്ഞാനികൾക്കും ബുദ്ധിമാനികൾക്കും മറെച്ചു ശിശുക്കൾക്കു വെളിപ്പെടുത്തിയതുകൊണ്ടു ഞാൻ നിന്നെ വാഴ്ത്തുന്നു; അതേ, പിതാവേ, ഇങ്ങനെയല്ലോ നിനക്കു പ്രസാദം തോന്നിയതു." (ലൂക്കൊസ് 10 : 21, NIBV)

എന്നാൽ നിർഭാഗ്യവശാൽ, ഇന്ന് മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ട് വേദപുസ്തകം പഠിച്ചറിഞ്ഞവരാണ് ശുശ്രൂഷകന്മാരായും വൈദികരായും ഇരിക്കുന്നത്. ആരാധനാലയങ്ങളിൽ പ്രസംഗിക്കുന്ന പലരേക്കാളും ആരാധനയിൽ പങ്കെടുക്കുന്ന വിശ്വാസികൾ ദൈവത്തെ അറിഞ്ഞവരായിരിക്കുന്നു. പല വിശ്വാസികളെയും ഇവർ തങ്ങളുടെ ബുദ്ധിപരമായ ഉപദേശങ്ങൾ കൊണ്ട് കുഴപ്പത്തിലാക്കുകയും വഴിതെറ്റിക്കുകയും ചെയ്യുന്നു. അതെ, അവർ അറിവിന്റെ താക്കോൽ എടുത്തുകളഞ്ഞു; അവർ പ്രവേശിച്ചതുമില്ല, പ്രവേശിക്കുന്നവരെ തടയുകയും ചെയ്തു. ഇങ്ങനെയുള്ളവർക്ക് യേശുക്രിസ്തു "ഹാ കഷ്ടം" എന്ന് പറയുന്നു.

മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ടു മാത്രം വേദപുസ്തകം മനസ്സിലാക്കുകയും ദൈവത്തെ അറിയാതിരിക്കുകയും ചെയ്യുന്ന ഒരുവൻ വിശ്വാസികൾക്ക് ദൈവത്തെക്കുറിച്ച് ഉപദേശിക്കുന്നത്, "കഴുകൻ കുഞ്ഞുങ്ങൾക്ക് കുളക്കോഴി പറക്കാൻ പഠിപ്പിച്ചുകൊടുക്കുന്നതുപോലെയാണ്" എന്ന് പ്രസംഗകരുടെ പ്രഭു എന്നറിയപ്പെടുന്ന ചാർലസ് സ്പർജൻ പറയുന്നു.

പ്രിയമുള്ളവരേ, ഒരുപക്ഷേ നിർബന്ധിത സാഹചര്യങ്ങളാലോ മറ്റ് അവസരങ്ങൾ ഇല്ലാത്തതിനാലോ, ഇന്ന് മസ്തിഷ്ക ബുദ്ധികൊണ്ട് വേദപുസ്തകം പഠിപ്പിക്കുന്ന കുളക്കോഴികളെപ്പോലെയുള്ള ശുശ്രൂഷകന്മാരുടെ കീഴിൽ നമ്മൾ അകപ്പെട്ടിട്ടുണ്ടാകാം. അതിനെക്കുറിച്ച് വേവലാതിപ്പെടാതെ, ദൈവവുമായുള്ള നമ്മുടെ വ്യക്തിപരമായ കൂട്ടായ്മ ശക്തിപ്പെടുത്തി ജീവിക്കാം. അപ്പോൾ, ദൈവത്തിന്റെ ആത്മാവുതന്നെ നമ്മെ സകലതും പഠിപ്പിക്കുകയും സത്യത്തിന്റെ പാതയിൽ നമ്മെ നടത്തുകയും ചെയ്യും.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

🦋 Meditation verse - லுூக்கா 11 : 52 / Luke 11:52

ஆதவன் தியானம்

எண் :- 2078 - நாள் :- 17.10.2026


"நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள்" ( லுூக்கா 11 : 52 )

முற்காலத்தில் வேதாகம வல்லுநர்களே நியாயசாஸ்திரிகளாக இருந்தனர். இன்றைய தியான வசனம் அவர்களுக்குக் கூறப்பட்டதுபோலத் தெரிந்தாலும் அது மூளை அறிவால் வேதாகமத்தைப் போதிக்கும் போதகர்களுக்கும் பொருந்தும்.

தேவனை அறிவதற்கு முக்கியமான ஒரு  தடையாக இருப்பது மனித அறிவு. நாம் நமது மூளை அறிவால், சரித்திரம், புவியியல், அறிவியல், வேதியல், கணிதம்  இவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் தேவனை இப்படி நாம் மூளை அறிவால் அறிந்துகொள்ளமுடியாது. இன்று பலரும் புத்தகங்களைப் படிப்பதுபோல வேதாகமத்தைப் படித்து தங்களது மூளை அறிவு விளக்கும் வகையில் தேவ வார்த்தைகளின் பொருளைப் புரிந்துவைத்துள்ளனர்.  

பலரும் வேதாகமத்தை வாசிப்பதன்மூலம் தேவனை அறிந்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால், முதலில் தேவனை நாம் அறிந்துகொண்டபின்னர் வேதாகமத்தை வாசிப்போமானால் அதில் கூறப்பட்ட தேவ வார்த்தைகளுக்கு நமக்குப் புது விளக்கங்களும் தெளிவும் ஏற்படும். ஆம் அன்பானவர்களே, வேதாகமம் முழுவதும் நாம், "தேவனை அறியும் அறிவு" எனும் வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதைப்  பார்க்கமுடியும். 

தேவனை அறியாதவன் வேதாகமம் கூறும் ஆவிக்குரிய சத்தியங்களை அறியமுடியாது. அப்படி அறியாதவன் மற்றவர்களுக்கு வேதாகமத்தைச்  சரியாகப் போதிக்கவும் முடியாது. காரணம், "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்" ( ரோமர் 8 : 5 ) ஆவிக்குரிய வாழ்க்கை அனுபவத்துக்குள் வந்தவன்தான் ஆவிக்குரிய சிந்தனைகொண்டவனாக இருக்கமுடியும். மட்டுமல்ல, "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

ஆம் அன்பானவர்களே, தேவனை அறிய மூளை அறிவு தேவையில்லை, மாறாக குழந்தைகளைப்போன்ற உள்ளமே தேவை. இதனையே ஆண்டவராகிய இயேசு, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது" ( லுூக்கா 10 : 21 ) என்று கூறுகின்றார். 

ஆனால், துரதிஷ்டவசமாக இன்று மூளை அறிவால் வேதாகமத்தைப் படித்து அறிந்தவர்களே போதகர்களாகவும் குருக்களாகவும் இருக்கின்றனர். ஆலயங்களில் பிரசங்கிக்கும் பலரைவிட ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும் விசுவாசிகள் தேவனை அறிந்தவர்களாக இருக்கின்றனர். பல விசுவாசிகளை இவர்கள் தங்களது மூளை அறிவு போதனையால் குழப்பி வழிதவறச் செய்கின்றனர். ஆம் அவர்கள் அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டார்கள், அவர்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறார்கள். இத்தகையவர்களுக்கு ஐயோ என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.  

மூளை அறிவால் மட்டும் வேதாகமத்தை அறிந்து தேவனை அறியாத ஒருவன் விசுவாசிகளுக்குத் தேவனைப்பற்றிப் போதிப்பது, "கழுகுக்  குஞ்சுகளுக்கு குள்ளவாத்து பறப்பதற்கு கற்றுக்கொடுப்பதுபோல" இருக்கின்றது என்கின்றார் பிரசங்கிகள் பிரபு என அழைக்கப்படும் சார்லஸ் ஸ்பர்ஜன்.  

அன்பானவர்களே, ஒருவேளை கட்டாயத்தின் சூழ்நிலையாலும், வேறு வாய்ப்புகள் இல்லாததாலும் இன்று இப்படி மூளை அறிவால் வேதாகமத்தைக் கற்றுப் போதிக்கும் குள்ளவாத்து போன்ற போதகர்களிடம் நாம் சிக்கிக்கொண்டிருக்கலாம். அதற்காகக் கவலைப்படாமல் நமது தனிப்பட்ட தேவ ஐக்கியத்தை வலுப்படுத்தி வாழ்வோம். அப்போது, தேவனுடைய ஆவியானவரே நமக்கு அனைத்தையும் போதித்து நம்மைச் சத்திய வழியில் நடத்துவார். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No: 2078 — Date: 17.10.2026

"Woe to you lawyers! For you have taken away the key of knowledge; you yourselves did not enter, and you hindered those who were entering." (Luke 11:52, NASB)

In ancient times, Bible scholars were the scribes (lawyers). Although today’s meditation verse seems to be addressed to them, it equally applies to the pastors who teach the Bible relying merely on human intellect.

Human intellect stands as a major obstacle to truly knowing God. Through human intellect, we can comprehend history, geography, science, chemistry, and mathematics. However, God cannot be known through mere intellectual understanding. Today, many read the Bible just like any other book and interpret God’s Word based solely on the understanding of their human minds.

Many believe that reading the Bible is the way to know God. However, if we know God first and then read the Bible, new light and clarity will shine upon the words spoken within it. Yes, beloved, throughout the Scriptures, we can see the recurring phrase: "the knowledge of God."

One who does not know God cannot understand the spiritual truths taught in the Bible. And one who lacks this understanding cannot teach the Bible accurately to others. For:

"For those who are in accord with the flesh set their minds on the things of the flesh, but those who are in accord with the Spirit, the things of the Spirit." (Romans 8:5, NASB)

Only someone who has entered into a spiritual life experience can possess spiritual thoughts. Furthermore:

"However, you are not in the flesh but in the Spirit, if indeed the Spirit of God dwells in you. But if anyone does not have the Spirit of Christ, he does not belong to Him." (Romans 8:9, NASB)

Yes, beloved, knowing God does not require human intellect; rather, it requires a heart like a child. The Lord Jesus spoke of this when He said:

"I praise You, Father, Lord of heaven and earth, that You have hidden these things from the wise and intelligent and have revealed them to infants. Yes, Father, for this way was well-pleasing in Your sight." (Luke 10:21, NASB)

Unfortunately, today, those who have merely studied and comprehended the Bible through human intellect hold positions as pastors and priests. In many churches, the believers sitting in the congregation know God far better than those preaching from the pulpit. Yet, these leaders confuse believers and lead them astray with their intellectual teachings. Indeed, they have taken away the key of knowledge; they themselves do not enter, and they hinder those who are entering. To such people, Jesus Christ says: "Woe to you."

Charles Spurgeon, known as the Prince of Preachers, said that when a person knows the Bible only through human intellect without knowing God and tries to teach believers about Him, it is like a duck trying to teach young eagles how to fly.

Beloved, perhaps due to compelling circumstances or a lack of other choices, we may find ourselves stuck under pastors who teach the Bible solely through human intellect—much like those ducks. But do not be dismayed; let us strengthen our personal fellowship with God. When we do, the Holy Spirit Himself will teach us all things and lead us in the way of truth.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

When We Refuse to Listen to God's Voice (Luke 11:50–51)

                                                

                                                    - Sr. Amutha ICM

In today's Gospel, Jesus says that this generation will be held responsible for the blood of all the prophets, from Abel to Zechariah. What does He mean by these words? Why does He mention Abel and Zechariah, and what message does this have for us today?

From Abel to Zechariah, we see the tragic consequences of jealousy, injustice, resistance to truth, and the refusal to change. Jesus reminds us that we cannot escape responsibility by condemning the sins of previous generations while repeating their attitudes in our own lives.

The blood of Abel continues to cry out and calls us through those suffer injustice, abuse, exploitation, protect life and care for one another. The blood of Zechariah challenges those who honour the prophets of the past by building memorials while rejecting God's message in the present.  This can happend to us, too. We may honour the saints and celebrates their feasts yet become defensive when someone points out our mistakes. Both remind us that God sees the suffering of the innocent and calls His people to live with justice, and compassion.

Let us not be people who honour God's messengers but reject their message. Instead, let us become people who listen to God's voice, recognise the suffering of others, stand for justice, accept correction with humility, and keep the truth of the Gospel into practice. Every day, we have a choice: to silence the truth or listen to it; to ignore suffering or respond with compassion.

Lord Jesus, open our hearts to Your truth. Give us the humility to listen, the courage to speak the truth with love, and the compassion to stand with those who suffer. May our lives reflect your love, justice, and mercy. and compassion. Amen.

கடவுளின் குரலைப் புறக்கணிப்பதிலிருந்து, அவரது உண்மையின்படி வாழ்வது வரை (லூக்கா 11:50–51)

இன்றைய நற்செய்தியில், ஆபேலின் இரத்தம் முதல் செக்கரியாவின் இரத்தம் வரை இயேசு குறிப்பிடுகிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான் (தொடக்க நூல் 4:8–10). கடவுளிடம் திரும்பி வருமாறு மக்களை அழைத்ததால், செக்கரியா ஆலய முற்றத்தில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் (2 குறிப்பேடு 24:20–22).

இந்த நிகழ்வுகள் ஒரு வேதனையான உண்மையை நமக்குச் சொல்கின்றன: பல நேரங்களில், நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நம்மைக் குறைகளை எடுத்துச் சொல்லுகிறவர்களை நாம் எதிர்க்கிறோம். முற்கால இறைவாக்கினர்களைப் போற்றுகிறோம்; ஆனால் இன்று யாராவது நம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இது நம்முடைய வாழ்விலும் நடக்கலாம்.

ஆபேலின் இரத்தம் இன்றும் அநீதியாலும், துன்புறுத்தலாலும், சுரண்டலாலும் பாதிக்கப்படுகிறவர்களின் வழியாகக் குரல் எழுப்புகிறது. நாம் யாரையும் உடலளவில் காயப்படுத்தாவிட்டாலும், கடுமையான வார்த்தைகளாலும், அக்கறையின்மையாலும், அநீதியைக் கண்டும் காணாமல் இருப்பதாலும் மற்றவர்களைக் காயப்படுத்தலாம்.

அன்பான சகோதர சகோதரிகளே, யாராவது நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறோமா? துன்பப்படுகிறவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோமா? கடவுளின் தூதர்களைப் சொல்லும் உண்மையைப் புறக்கணிக்க வேண்டாம். கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, திருத்தத்தைத் தாழ்மையுடன் ஏற்று, நீதிக்காகத் துணிந்து நின்று, துன்பப்படுகிறவர்களிடம் இரக்கத்தோடு நடந்துகொள்வோம்.

அன்பு இயேசுவே, உமது உண்மையை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதை எங்களுக்குத் தாரும். எங்கள் தவறுகளைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளவும், நீதிக்காகத் துணிந்து நிற்கவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கத்தோடு நடந்துகொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். எங்கள் வாழ்வு உமது அன்பையும் உண்மையையும் வெளிப்படுத்துவதாக. ஆமென்.

Sr. அமுதா ICM

🦋 Meditation verse - യാക്കോബ് 1:23, 24

 ആഥവൻ ധ്യാനം

നമ്പർ: 2077 | തീയതി: 16.10.2026

"ഒരുത്തൻ വചനം കേൾക്കുന്നവനും അതിൻപ്രകാരം ചെയ്യാത്തവനും ആയാൽ അവൻ കണ്ണാടിയിൽ തന്റെ സ്വാഭാവികമുഖം നോക്കുന്ന ആളിനു തുല്യനാകുന്നു. അവൻ തന്നെത്താൻ നോക്കി അവിടുന്നു പുറപ്പെട്ടു താൻ ഇന്നരൂപം ആയിരുന്നു എന്നു ഉടനെ മറന്നുപോകുന്നു." — യാക്കോബ് 1:23, 24 (NIBV)

വിശുദ്ധ ബൈബിൾ ഒരു കണ്ണാടിപോലെയാകുന്നു. കണ്ണാടി നമ്മുടെ മുഖത്തുള്ള പോരായ്മകളെയും അഴുക്കുകളെയും നമുക്ക് കാണിച്ചുതരുന്നതുപോലെ, ദൈവവചനത്തിലെ ഓരോ വാക്കും നമ്മുടെ ആത്മാവിന്റെ പോരായ്മകളെയും മാലിന്യങ്ങളെയും നമുക്ക് വെളിപ്പെടുത്തിത്തരുന്നു.

നാം ബൈബിൾ ശ്രദ്ധയോടെ വായിക്കുമ്പോൾ നമ്മിലുള്ള പോരായ്മകൾ നമുക്ക് മനസ്സിലാകും. ഒരുത്തൻ വചനം കേൾക്കുകയും അതിൻപ്രകാരം ചെയ്യാതിരിക്കുകയും ചെയ്താൽ, അവൻ കണ്ണാടിയിൽ വെറുതെ തന്റെ മുഖം മാത്രം നോക്കുന്ന മനുഷ്യന് തുല്യനായിരിക്കും. അവൻ കണ്ണാടിയുടെ മുന്നിൽനിന്ന് മാറിപ്പോയ ഉടൻതന്നെ അത് മറന്നുപോകുന്നു.

കണ്ണാടിയിൽ മുഖം നോക്കി തങ്ങളെത്തന്നെ തിരുത്തി ഭംഗിയാക്കുന്നതിൽ സ്ത്രീകൾ പ്രശസ്തരാണ്. ഒരു കല്യാണവീട്ടിലോ മറ്റ് പരിപാടികൾക്കോ പോകണമെങ്കിൽ, അതിനുമുമ്പ് മണിക്കൂറുകളോളം കണ്ണാടിയുടെ മുന്നിൽ നിന്ന് തങ്ങളെ അലങ്കരിക്കാൻ സമയം ചെലവഴിക്കും. അതേ, പ്രിയമുള്ളവരേ, കണ്ണാടി നമ്മിലുള്ളത് എന്താണെന്ന് വ്യക്തമായി കാണിച്ചുതരും.

നാം വെറുതെ കണ്ണാടിയിൽ നോക്കി നടന്നുപോകുന്ന മനുഷ്യനെപ്പോലെയാകാതെ, തന്നെത്താൻ അലങ്കരിക്കുന്ന ഒരു സ്ത്രീ അതിലേക്ക് ഉറ്റുനോക്കി തന്നിലെ തെറ്റുകൾ തിരുത്തുന്നതുപോലെ നമ്മെത്തന്നെ തിരുത്തുന്നവരായിരിക്കണമെന്ന് അപ്പൊസ്തലനായ യാക്കോബ് പറയുന്നു. ഇതിനെത്തന്നെയാണ് ഇന്നത്തെ ധ്യാനവചനത്തെത്തുടർന്ന് അവൻ ഇപ്രകാരം പറയുന്നത്:

"പൂർണ്ണമായ സ്വാതന്ത്ര്യനിയമത്തിൽ ഉറ്റുനോക്കി അതിൽ നിലനിൽക്കുന്നവനോ കേട്ടു മറക്കുന്നവനകാതെ ക്രിയ ചെയ്യുന്നവനായി തന്റെ ക്രിയയിൽ ഭാഗ്യവാനായിരിക്കും." — യാക്കോബ് 1:25 (NIBV)

ബൈബിൾ വായിക്കുമ്പോൾ, കണ്ണാടിയിൽ തന്റെ മുഖം നോക്കി മാറിപ്പോകുന്ന മനുഷ്യനെപ്പോലെയാകാതെ, ബൈബിൾ പറയുന്ന പൂർണ്ണനിയമത്തിൽ ഉറ്റുനോക്കുകയും അതിൽ നിലനിൽക്കുകയും വേണം. അതുമാത്രമല്ല, അങ്ങനെ ഉറ്റുനോക്കുമ്പോൾ താൻ കണ്ട കാര്യങ്ങൾ മറന്നുപോകുന്നവനാകാതെ, അതിനനുസരിച്ച് പ്രവർത്തിക്കുന്നവനായിരിക്കണം. അങ്ങനെ ചെയ്യുന്നവൻ ഭാഗ്യവാനായിരിക്കും എന്ന് അവൻ പറയുന്നു.

നാം എങ്ങനെയാണ് ബൈബിൾ വായിക്കുന്നത് എന്ന് നമ്മെത്തന്നെ ഒന്ന് ശോധന ചെയ്തുനോക്കാം. കടമയ്ക്കുവേണ്ടിയാണോ വായിക്കുന്നത്? അതോ, ചെറുപ്പകാലത്ത് മാതാപിതാക്കൾ നമ്മെ പഠിപ്പിച്ചത് കൊണ്ടുള്ള ഒരു പതിവ് ശീലം കാരണം വായിക്കുകയാണോ? അതോ ജ്യോത്സ്യം നോക്കുന്നതുപോലെ ബൈബിൾ തുറന്ന് ആദ്യം കണ്ണിൽപെടുന്ന വചനം നമുക്കുള്ള ദൈവവചനമാണെന്ന് കരുതുന്ന മനുഷ്യരാണോ നാം?

ഇങ്ങനെയാണ് നാം ബൈബിൾ വായിക്കുന്നതെങ്കിൽ, കണ്ണാടിയിൽ തന്റെ സ്വാഭാവികമുഖം നോക്കുന്ന ഒരു സാധാരണ മനുഷ്യന് തുല്യരായിരിക്കും നാം. അവൻ കണ്ണാടിയിൽനിന്ന് മാറിപ്പോയ ഉടൻ തന്റെ രൂപം എങ്ങനെയുള്ളതായിരുന്നു എന്ന് മറന്നുപോകുന്നതുപോലെ, നാമും വായിച്ച കാര്യങ്ങൾ മറന്നുപോകും. അങ്ങനെയെങ്കിൽ ബൈബിൾ നമുക്ക് വെറുമൊരു കഥാപുസ്തകം പോലെയായി മാറും.

ബൈബിളിലേക്ക് ഉറ്റുനോക്കി വായിക്കുകയും അതിൽ നിലനിൽക്കുകയും ചെയ്യുമെങ്കിൽ, വായിച്ചതിനെ മറക്കുന്നവരാകാതെ അതിനനുസരിച്ച് പ്രവർത്തിക്കുന്നവരായിരിക്കും നാം. അതുമാത്രമല്ല, അപ്പോൾ നാം നമ്മുടെ പ്രവൃത്തികളിൽ ഭാഗ്യവാന്മാരായി തീരുകയും ചെയ്യും.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

Meditation verse - யாக்கோபு 1 : 23, 24 / James 1:23–24

 ஆதவன் தியானம்

எண் :- 2077 - நாள் :- 16.10.2026


"என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்." ( யாக்கோபு 1 : 23, 24 )

வேதாகமம் ஒரு கண்ணாடியைப்போல இருக்கின்றது. கண்ணாடி  நமது முகத்திலுள்ள குறைகளையும் அழுக்குகளையும் நமக்கு வெளிகாட்டித் தருவதுபோல் தேவ வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமது ஆத்துமாவின் குறைகளையும் அழுக்குகளையும் நமக்கு வெளிப்படுத்தித் தருகின்றன. 

நாம் வேதாகமத்தைக் கவனமாக  வாசிக்கும்போது நம்மிடமுள்ள குறைகள் நமக்குத் தெரியவரும். ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே வெறுமனே தனது முகத்தை மட்டும் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் கண்ணாடியைவிட்டு நகர்நது சென்றபின்னர் அதனை மறந்துவிடுவான். 

கண்ணாடியில் முகத்தைப்பார்த்துத் தங்களைத் திருத்தி அழகுபடுத்திக்கொள்வதில் பெண்கள் பெயர்பெற்றவர்கள். ஒரு திருமண வீட்டிற்கோ, இதர நிகழ்ச்சிகளுக்கோ செல்லவேண்டுமானால் அதற்குமுன் பலமணிநேரம் கண்ணாடிமுன்னின்று தங்களை அலங்கரித்துக்கொள்ள நேரத்தைச் செலவிடுவார்கள். ஆம் அன்பானவர்களே, கண்ணாடி நம்மிடம் இருப்பதைத் தெளிவாகக் காண்பித்துவிடும்.  

நாம் வெறுமனே கண்ணாடியைப்பார்த்து அப்புறமாகச் செல்லும் மனிதனைப்போலல்லாமல் தன்னை அலங்கரிக்கும் பெண் எப்படி அதனை உற்றுப்பார்த்துத் தன்னைத் திருத்திக்கொள்கின்றாளோ அப்படித் திருத்திக்கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்று அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார். இதனையே அவர் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்." ( யாக்கோபு 1 : 25 ) என்று கூறுகின்றார். 

வேதாகமத்தை வாசிக்கும்போது, கண்ணாடியில் தனது முகத்தைப்பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் மனிதனைப்போலல்லாமல் வேதாகமம் கூறும் பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்க்கவேண்டும். மட்டுமல்ல, அப்படி உற்றுப்பார்க்கும்போது தான் கண்டவற்றை  மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற  செயல்களைச் செய்கிறவனாயிருக்கவேண்டும். அப்படிச் செய்கின்றவன் பாக்கியவானாயிருப்பான் என்று கூறுகின்றார். 

நாம் எப்படி வேதாகமத்தை வாசிக்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம். கடமைக்காக வாசிக்கின்றோமா? இல்லை, சிறு பிள்ளைகளாக இருந்தபோது பெற்றோர் நமக்குக் கற்பித்துள்ளபடியால் அந்த வழக்கமான செயல்முறையினால் வாசிக்கின்றோமா? அல்லது ஜோசியம் பார்ப்பதுபோல வேதாகமத்தைத் திறந்து முதலில் கண்ணில்படும் வசனத்தை நமக்கான தேவ வார்த்தையாக எண்ணிக்கொள்ளும் மனிதர்களாக இருக்கின்றோமா? 

இப்படி நாம் வேதாகமத்தை வசித்துக்கொண்டிருப்போமானால் கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற சாதாரண மனுஷனுக்கு ஒப்பாயிருப்போம். அவன் கண்ணாடியைவிட்டு அப்புறம் சென்றவுடன் தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவதுபோல நாமும் வாசித்தவற்றையும் மறந்துவிடுவோம். அப்படியானால் வேதாகமம் நமக்கு சாதாரண ஒரு கதைப் புத்தகம்போலாகிவிடும். 

வேதாகமத்தை உற்றுப்பார்த்து வாசித்து  அதிலே நிலைத்திருப்போமானால் வாசித்ததை  மறக்கிறவர்களாயிராமல்  அதற்கேற்ற செயல்களைச் செய்கிறவர்களாக இருப்போம். மட்டுமல்ல, அப்போது நமது செய்கையில் பாக்கியவான்களாயிருப்போம்.

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

Number: 2077 | Date: 16.10.2026

"For if anyone is a hearer of the word and not a doer, he is like a man who looks at his natural face in a mirror; for once he has looked at himself and gone away, he has immediately forgotten what kind of person he was."— James 1:23–24

The Bible is like a mirror. Just as a mirror reveals the flaws and dirt on our face, every single word of God exposes the imperfections and uncleanness of our soul.

When we read the Bible attentively, our shortcomings become clear to us. If someone hears the word but does not do what it says, he is like a person who merely glances at his face in a mirror. As soon as he walks away from the mirror, he forgets all about it.

Women are well known for looking at themselves in the mirror to refine and beautify their appearance. Before going to a wedding or any other special function, they spend hours standing before a mirror to adorn themselves. Yes, dear friends, a mirror clearly shows us what is present on our face.

The Apostle James tells us that we should not be like the person who merely looks in the mirror and walks away; instead, we must be like a woman who examines herself carefully to correct and adorn her appearance. Continuing from today's meditation verse, he states:

"But one who has looked carefully at the perfect law, the law of freedom, and has continued in it, not having become a forgetful hearer but an active doer, this person will be blessed in what he does." — James 1:25 (NASB)

When reading the Bible, we must not be like the man who looks in the mirror and moves on; we ought to look intently into the perfect law spoken of in Scripture and remain in it. Furthermore, when we look into it carefully, we should not forget what we have seen, but put it into practice. The one who does so will be blessed in his actions.

Let us examine how we read the Bible. Do we read it merely out of obligation? Or do we read it out of routine habit simply because our parents taught us to do so in our childhood? Or are we like people who practice fortune-telling—opening the Bible at random and taking the first verse that catches our eye as God's word for us?

If this is how we read the Bible, we are like ordinary man looking at his natural face in a mirror. Just as he forgets what he looks like as soon as he steps away, we too will forget what we have read. If so, the Bible becomes nothing more than an ordinary storybook to us.

If we look intently into the Bible as we read and abide in it, we will not be forgetful hearers, but doers of the word. Moreover, we will then be blessed in all that we do.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

Wednesday, October 14, 2026

🦋 Meditation verse - സെഫന്യാവ് 3:15

 ആധവൻ ധ്യാനം

നമ്പർ: 2076 | തീയതി: 15.10.2026

"യഹോവ നിന്റെ ശിക്ഷാവിധികളെ നീക്കി, നിന്റെ ശത്രുക്കളെ മാറ്റിക്കളഞ്ഞിരിക്കുന്നു; ഇസ്രായേലിന്റെ രാജാവായ യഹോവ നിന്റെ മധ്യേ ഉണ്ട്; ഇനി നീ ഒരു അനർത്ഥവും കാണുകയില്ല." (സെഫന്യാവ് 3:15)

ക്രിസ്തുവിനായി സ്വയം സമർപ്പിക്കുകയും അവിടുത്തേക്ക് പ്രസാദകരമായ ജീവിതം നയിക്കുകയും ചെയ്യുന്ന ജനത്തെ ദൈവം ഒരുനാളും ഉപേക്ഷിക്കുകയില്ല. കഷ്ടതകൾ നമ്മെ ആക്രമിക്കുന്നതായി തോന്നിയാലും, അവ നമ്മെ പൂർണ്ണമായി കീഴടക്കുകയില്ല. അതെ, "മനുഷ്യർക്കു സാധാരണയായുള്ളതല്ലാതെ ഒരു പരീക്ഷണവും നിങ്ങൾക്ക് നേരിട്ടിട്ടില്ല; ദൈവം വിശ്വസ്തനാകുന്നു; നിങ്ങളുടെ പ്രാപ്തിക്കുമീതെ പരീക്ഷിക്കപ്പെടുവാൻ അവിടുന്ന് അനുവദിക്കുകയില്ല; പരീക്ഷ സഹിക്കുവാൻ തക്കവണ്ണം പരീക്ഷണത്തോടൊപ്പം പോക്കുവഴിയും അവിടുന്ന് ഉണ്ടാക്കിത്തരും." (1 കൊരിന്ത്യർ 10:13)

ഇന്നത്തെ ധ്യാന വാക്യത്തിൽ ദൈവമക്കൾക്കായി ദൈവം അരുളിച്ചെയ്യുന്ന പ്രധാനപ്പെട്ട മൂന്ന് കാര്യങ്ങൾ നാം കാണുന്നു. അവ:

  1. രാജാവായ യഹോവ നിന്റെ മധ്യേ ഉണ്ട്

  2. അവിടുന്ന് നിന്റെ ശിക്ഷാവിധികളെ നീക്കുന്നു

  3. ഇനി നീ ഒരു അനർത്ഥവും കാണുകയില്ല

അതായത്, നാം അവിടുത്തേക്ക് അനുയോജ്യമായ ജീവിതം നയിക്കുമ്പോൾ കർത്താവ് നമ്മോടുകൂടെയുണ്ട്. അവിടുന്ന് രാജാവായി നമ്മിൽ ഉള്ളതുകൊണ്ട് നമുക്ക് തികഞ്ഞ ആത്മവിശ്വാസത്തോടെ ഈ ലോകത്തിൽ ജീവിക്കുവാൻ സാധിക്കും. നമ്മുടെ രാജ്യത്തിന്റെ പ്രധാനമന്ത്രിയോ മുഖ്യമന്ത്രിയോ നമ്മോടുകൂടെയുണ്ടെങ്കിൽ അത് നമുക്ക് എത്ര വലിയ ശക്തിയാണ്!! അങ്ങനെയാണെങ്കിൽ, ഈ ലോകത്തിന്റെ മുഴുവൻ രാജാവായ ദൈവം നമ്മോടുകൂടെയിരിക്കുന്നത് നമുക്ക് എത്ര വലിയ ഭാഗ്യമാണ്!!!

തന്നെയുമല്ല, നമ്മിലുള്ള ക്രിസ്തു നിരന്തരം പ്രവർത്തിച്ചുകൊണ്ടിരിക്കുന്നു. അവിടുന്ന് നമ്മുടെ പാപ ശാപ കാര്യങ്ങളെ നമ്മിൽനിന്ന് നീക്കിക്കളയുന്നു. അതെ പ്രിയമുള്ളവരേ, ക്രിസ്തു നമ്മിലായിരിക്കുമ്പോൾ നാം പാപത്തിന് മരിച്ചവരായിത്തീരുന്നു. ഇതേക്കുറിച്ചാണ് അപ്പോസ്തലനായ പൗലൊസ്, "എന്നാൽ ക്രിസ്തു നിങ്ങളിലുണ്ടെങ്കിൽ, ശരീരം പാപം നിമിത്തം മരിച്ചതെങ്കിലും, ആത്മാവ് നീതി നിമിത്തം ജീവനുള്ളതാകുന്നു." (റോമർ 8:10) എന്ന് പ്രസ്താവിക്കുന്നത്.

അവസാനമായി ഇന്നത്തെ ധ്യാന വാക്യം പറയുന്നു: "ഇനി നീ ഒരു അനർത്ഥവും കാണുകയില്ല." അതായത്, ഇത്രയും നാൾ വിവിധ അനർത്ഥങ്ങൾ നമ്മെ പിന്തുടർന്നിരിക്കാം, എന്നാൽ ഇനി അത് തുടരുകയില്ല. കാരണം രാജാവ് നമ്മോടുകൂടെയുണ്ട്. "ഞാൻ നിന്നോടുകൂടെയുണ്ട്; നിനക്ക് കേടുവരുത്തുവാൻ ആരും നിന്റെമേൽ കൈവെക്കുകയില്ല; ഈ നഗരത്തിൽ എനിക്ക് വളരെ ജനമുണ്ട്" (അപ്പൊസ്തലപ്രവൃത്തികൾ 18:10) എന്ന് അപ്പോസ്തലനായ പൗലൊസിനോട് ദൈവം അരുളിച്ചെയ്തില്ലയോ? നമുക്ക് എതിരെയല്ല, മറിച്ച് നമുക്ക് അനുകൂലമായി പല മനുഷ്യരെയും ദൈവം എഴുന്നേൽപ്പിക്കും.

അപ്പോസ്തലനായ പത്രൊസും, "നന്മ ചെയ്യുന്നതിൽ നിങ്ങൾ ഉത്സാഹമുള്ളവരായാൽ നിങ്ങൾക്ക് ഉപദ്രവം ചെയ്യുന്നവൻ ആര്?" (1 പത്രൊസ് 3:13) എന്ന് ചോദിക്കുന്നു. ക്രിസ്തു നമ്മോടുകൂടെയിരിക്കുമ്പോൾ നാം പാപം ചെയ്യുകയില്ല, ദുഷ്ടപ്രവൃത്തികളിൽ ഏർപ്പെടുകയില്ല, നന്മയുടെ വഴിയിൽ മാത്രമേ നടക്കുകയുള്ളൂ. അതിനാൽ ആരും നമുക്ക് ഉപദ്രവം ചെയ്യുകയില്ല എന്നാണ് പത്രൊസ് പറയുന്നത്.

ക്രിസ്തുവിന് പ്രസാദമുള്ളവരായി ജീവിക്കുമ്പോൾ നമുക്ക് ലഭിക്കുന്ന അനുഗ്രഹങ്ങളാണ് ഇവ. ഈ ക്രിസ്തുവിനെ നമ്മിൽ സ്വീകരിച്ചു ജീവിക്കുവാൻ നാം പരിശ്രമിക്കാം; ദൈവാനുഗ്രഹങ്ങൾ പ്രാപിക്കാം.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

May the Eyes of Our Hearts Be Enlightened (Ephesians 1:17–18)

                                                       - Sr. Amutha, ICM I n today’s passage, St. Paul prays that God may give us a spirit o...