- Sr. Amutha, ICM
In today’s passage, St Paul appreciates the Thessalonians because their faith was not merely professed; but it became a way of life that inspired others. This passage invites us to reflect on six aspects of our Christian life.
Receiving the Word with joy
The Thessalonians welcomed God’s Word even amid suffering. Christian joy comes from the Holy Spirit, not from favorable circumstances. Do I remain joyful and faithful when things do not go according to my expectations?
Becoming imitators of Christ
The Thessalonians imitated Paul and the Lord by putting the Gospel into practice. Our faith must be reflected in our patience, kindness, forgiveness, and concern for others. Can people recognise Christ through my life.
Becoming witnesses to others
Their faith became known beyond their community. Through small acts of kindness,, honesty and a word of encouragement, we too can inspire others to bring them closer to God.
Practising genuine hospitality
People remembered how the Thessalonians welcomed Paul. True hospitality means more than offering food or shelter; it means making room for others in our hearts. Do people feel accepted and valued in my presence?.
Turning from idols to the Lord
The Thessalonians turned away from idols to serve the true living God. Today our idols may be pride, wealth, personal preferences, or the desire for recognition. Conversion means allowing God, rather than our ego or attachments, to guide our lives. What occupies the centre of my heart?
Waiting for the Lord with hope
The Thessalians waited for God's son to come from heaven. Christian waiting is not passive; it means living each day faithfulness, readiness, and hope. Even when our efforts seem fruitless, we continue trusting that our life is in God's hands.
The Thessalonians’ faith was visible in their joy, hospitality, conversion, and hope. Let us ask ourselves: Will people recognise Christ through the way we live, welcome, serve, and relate to one another?
Lord Jesus, help us to live Your Word with joy, reflect Your love in our lives, welcome others with open hearts, turn away from whatever separates us from You, and remain faithful in hope. May our lives become a living witness to Your love. Amen.
நம் வாழ்வின் வழியாக வெளிப்படும் நம்பிக்கை (1 தெசலோனிக்கர் 1:6–10)
இன்றைய வாசகத்தில், புனித பவுல் தெசலோனிக்க மக்களைப் பாராட்டுகிறார். ஏனென்றால், அவர்களுடைய நம்பிக்கை வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடவில்லை; அது அவர்களுடைய வாழ்க்கையாக மாறி, மற்றவர்களுக்கும் நல்ல முன்மாதிரியாக அமைந்தது. இந்த வாசகம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் ஆறு அம்சங்களைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது.
1. மகிழ்ச்சியோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வது.
துன்பங்கள் வந்தபோதும், தெசலோனிக்க மக்கள் இறை வார்த்தையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். உண்மையான கிறிஸ்தவ மகிழ்ச்சி நமக்குச் சாதகமான சூழ்நிலைகளிலிருந்து வருவதில்லை; அது தூய ஆவியிடமிருந்து வருகிறது. நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் சூழ்நிலைகள் அமைந்தாலும், நாம் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் இருக்கிறோமா?
2. கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்வது
தெசலோனிக்க மக்கள் புனித பவுலையும் ஆண்டவராகிய இயேசுவையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார்கள். நாமும் நற்செய்தியை நம் வாழ்வில் செயல்படுத்த வேண்டும். நம்முடைய பொறுமை, அன்பு, மன்னிக்கும் மனப்பான்மை, பிறர்மீது காட்டும் அக்கறை ஆகியவற்றின் வழியாக நம்மால் கிறிஸ்துவை வெளிப்படுத்த முடிகிறதா? நம்மைப் பார்க்கும்போது மற்றவர்கள் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்கிறார்களா?
3. மற்றவர்களுக்கு நம்பிக்கையின் சாட்சிகளாக வாழ்வது
தெசலோனிக்க மக்களின் நம்பிக்கை பல இடங்களிலும் பேசப்பட்டது. நாமும் சிறிய அன்புச் செயல்கள், நேர்மை, ஊக்கமளிக்கும் வார்த்தைகள் ஆகியவற்றின் வழியாக மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க முடியும். நம்முடைய வாழ்வு மற்றவர்களை இறைவனுக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறதா?
4. உண்மையான விருந்தோம்பலைக் கடைப்பிடிப்பது
தெசலோனிக்க மக்கள் புனித பவுலையும் அவருடைய தோழர்களையும் அன்போடு வரவேற்றதை மற்றவர்கள் நினைவுகூர்ந்தார்கள். விருந்தோம்பல் என்பது உணவோ தங்குவதற்கு இடமோ கொடுப்பது மட்டுமல்ல; மற்றவர்களுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுப்பதும் ஆகும். நம்மோடு இருக்கும்போது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மதிக்கப்படுவதாகவும் உணர்கிறார்களா?
5. சிலைகளை விட்டுவிட்டு வாழும் இறைவனிடம் திரும்புவது
தெசலோனிக்க மக்கள் சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான வாழும் இறைவனுக்குப் பணிபுரியத் திரும்பினார்கள். இன்று நமக்குச் சிலைகளாக இருப்பவை நம்முடைய பெருமை, பணம், சொந்த விருப்பங்கள், மற்றவர்களிடமிருந்து பாராட்டைப் பெற வேண்டும் என்ற ஆசை ஆகியவையாக இருக்கலாம். உண்மையான மனமாற்றம் என்பது நம்முடைய அகந்தைக்கும் பற்றுதல்களுக்கும் இடம் கொடுக்காமல், இறைவன் நம் வாழ்வை வழிநடத்த அனுமதிப்பதாகும். நம்முடைய உள்ளத்தின் மையத்தில் இருப்பது யார்? இறைவனா, அல்லது நம்முடைய விருப்பங்களா?
6. நம்பிக்கையோடு ஆண்டவருக்காகக் காத்திருப்பது
தெசலோனிக்க மக்கள் இறைவனின் மகன் விண்ணகத்திலிருந்து வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். கிறிஸ்தவ வாழ்வில் காத்திருப்பது என்பது சும்மா இருப்பதல்ல. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடும், விழிப்போடும், உண்மையோடும் வாழ்வதாகும். நம்முடைய முயற்சிகள் பலனளிக்காததுபோல் தோன்றினாலும், நம் வாழ்வு இறைவனுடைய கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
தெசலோனிக்க மக்களின் நம்பிக்கை அவர்களுடைய மகிழ்ச்சி, விருந்தோம்பல், மனமாற்றம், எதிர் நோக்கு ஆகியவற்றின் வழியாக வெளிப்பட்டது.
நாமும் நம்மையே கேட்டுக்கொள்வோம்: நம்முடைய வாழ்வு, பிறரை வரவேற்கும் விதம், நாம் செய்யும் சேவை, மற்றவர்களோடு நாம் உறவாடும் முறை ஆகியவற்றின் வழியாக, மக்கள் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்கிறார்களா?
ஆண்டவராகிய இயேசுவே, உமது வார்த்தையை மகிழ்ச்சியோடு வாழ எங்களுக்கு உதவும். எங்கள் வாழ்வின் வழியாக உமது அன்பை வெளிப்படுத்தவும், திறந்த உள்ளத்தோடு மற்றவர்களை வரவேற்கவும், உம்மிடமிருந்து எங்களைப் பிரிக்கும் அனைத்தையும் விட்டுவிடவும், நம்பிக்கையோடு உண்மையாக வாழவும் எங்களுக்கு அருள் தாரும். எங்கள் வாழ்வு உமது அன்புக்குச் சாட்சியாக அமையட்டும். ஆமென்.
Sr.அமுதா ICM

No comments:
Post a Comment