ஆதவன் தியானம்
எண் :- 2080 - நாள் :- 19.10.2026
"நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 10 : 7 )
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களாகிய நாம்தான் அவரது ஆடுகள். இந்த ஆடுகளை நல்ல வழியில் மேய்க்கக்கூடியவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கின்றார். அதாவது, அவர்தான் நமக்கு வாசல். இதுபோல இன்று உலகினில் இந்த கிறிஸ்துவாகிய வாசலை அடையாளம்காட்டி, ஆண்டவர் இயேசு காட்டிய மெய்யான வழியில் மீட்கப்பட்ட மக்களை வழிநடத்துபவர்கள்தான் மெய்யான மேய்ப்பர்கள். காரணம், அத்தகையவர்கள் வாசல்வழியாக நுழைவதற்கு வழிகாட்டுகின்றார்கள். ஆம், "வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்." ( யோவான் 10 : 2 )
ஆனால் இன்று கிறிஸ்துவாகிய வாசலை விட்டு வேறுவழியாக மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களும் (ஊழியர்கள்) இருக்கின்றனர். இத்தகையவர்களை கள்வர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். ஆம், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10 : 1 )
அதாவது, கிறிஸ்து பிரசங்கிக்காத போதனைகளைப் போதிப்பவன் வேறு வழி காட்டுகின்றான் என்று பொருள். செழிப்பின் போதனை; காணிக்கை கொடுத்து தேவ ஆசீர்வாதம் பெறலாம் எனும் போதனை; கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உலகத்தில் துன்பங்கள் வராது எனும் போதனை, இவை போன்றவைகளைப் போதிப்பவன் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுவதற்கு வழிகாட்டுபவன் என்று பொருள். தங்களது சுய இலாபத்துக்காக இப்படிச் செய்வதால் இவர்களை கள்வர்கள், கொள்ளைக்காரர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துத் தொடர்ந்து கூறினார், "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 )
கிறிஸ்துவாகிய வாசல் வழியாக நுழைவதற்கு வழிகாட்டுபவனே நல்ல மேய்ப்பன். அத்தகைய மேய்ப்பன் கிறிஸ்துவைப்போல தன்னை நம்பி வரும் விசுவாசிகளது ஆவிக்குரிய வாழ்க்கை நிலையினை அறிந்தவனாகவும் அதற்கேற்ப அவர்களை வழிநடத்துபவனாகவும் இருப்பான். அந்த விசுவாசிகளும் அவனை அறிந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் கிறிஸ்து குறிப்பிடும் கள்வர்கள், ஒவ்வொரு விசுவாசியிடமிருந்தும் தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை மட்டும் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
தாவீது இராஜா சிறுவயதில் ஆடுமேய்த்த அனுபவத்தால் தன்னை ஒரு ஆடாகவும் கர்த்தரைத் தன்னை மேய்க்கும் மேய்ப்பனாகவும் உருவகித்து, ஒரு ஆடு கூறுவதுபோலக் கூறுகின்றார், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்." ( சங்கீதம் 23 : 1-3 )
ஆம் அன்பானவர்களே, இதுதான் நல்ல மேய்ப்பனுக்கு அடையாளமாகத் தாவீது கண்டுகொண்டது. கிறிஸ்துவுக்குமுன் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்குமுன்பே தாவீது இதனைக் கூறுகின்றார். அதாவது, நல்ல மேய்ப்பனை நம்புபவர்களுக்கு வாழ்வில் தாழ்ச்சி ஏற்படுவதில்லை, ஆடுகளின் தேவைகளை ஆயனே ஏற்றவேளையில் சந்திப்பார், ஆடுகளாகிய விசுவாசிகளின் ஆத்துமாவைத் தேற்றி நீதி வாழ்க்கை வாழ உதவுவார்.
வாசல் வழியாக நுழையாமல் குறுக்கு வழியில் நுழைந்திட முயலும்போது இவை எதுவுமே வாழ்வில் கிடைப்பதில்லை; இருப்பதில்லை. எனவே அன்பானவர்களே, வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுவதற்கு வழிகாட்டும் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறவர்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
நாம் மெய்யாகவே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சியை விரும்புகின்றோமென்றால், நல்லாயனாம் கிறிஸ்து காட்டிய வழியில் நடக்கவேண்டியது அவசியம். அதற்கு முதல்படியாக நம்மை வழிநடத்திட அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்போது கிறிஸ்துவின் சத்திய ஆவியானவரே நம்மை வழிநடத்துவார். அப்போது நாம் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டோம், அவரது கோலும் தடியும் நம்மைத் தேற்றும். ( சங்கீதம் 23 : 4 )
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN
MEDITATION
No.: 2080 | Date: 19.10.2026
"So,
Jesus said to them again, 'Truly, truly I say to you, I am the door of the
sheep.'" (John 10:7)
We,
as people redeemed by Christ, are His sheep. The Lord Jesus Christ is the Good
Shepherd who leads these sheep in the right path. That is to say, He Himself is
our door. Similarly, today, true shepherds in this world are those who point to
Christ—the Door—and guide the redeemed people along the true path shown by the
Lord Jesus. This is because such shepherds guide the sheep to enter through the
door. Indeed, "But the one who enters through the door is a shepherd of
the sheep." (John 10:2)
However,
today there are also shepherds (ministers) who lead people away from Christ,
the Door, and onto other paths. Jesus Christ refers to such individuals as
thieves and robbers. Indeed, "Truly, truly I say to you, the one who
does not enter the sheepfold through the door, but climbs up some other way, he
is a thief and a robber." (John 10:1)
This
means that anyone who preaches doctrines not taught by Christ is showing
another path. Preaching the prosperity gospel, teaching that one can receive
God’s blessings by giving monetary offerings, or claiming that accepting Christ
means no troubles will come in this worldly life—those who teach such things
are guiding people to climb up another way instead of entering through the
door. Because they do this for their own personal gain, they are called thieves
and robbers.
Furthermore,
Jesus Christ continued, "I am the good shepherd, and I know My own, and
My own know Me, just as the Father knows Me and I know the Father; and I lay
down My life for the sheep." (John 10:14-15)
A
good shepherd is one who guides others to enter through the door, which is
Christ. Like Christ, such a shepherd knows the spiritual condition of the
believers who trust in him and leads them accordingly. Those believers, in
turn, know him. But the thieves referred to by Christ only care about how much
they can extract from each believer.
King
David, drawing from his childhood experience as a shepherd, envisioned himself
as a sheep and the Lord as his shepherd, speaking from the perspective of a
sheep: "The Lord is my shepherd, I will not be in need. He lets me lie
down in green pastures; He leads me beside quiet waters. He restores my soul;
He guides me in the paths of righteousness For His name’s sake."
(Psalm 23:1-3)
Yes,
dear ones, this is what David identified as the hallmark of a good shepherd.
David proclaimed this nearly 2,500 years before Christ. Namely, those who trust
in the Good Shepherd do not suffer lack in life; the Shepherd meets the needs
of His sheep in due season, restores the souls of His believers, and helps them
live righteous lives.
When
one tries to enter through shortcut methods instead of entering through the
door, none of these blessings are realized or retained in life. Therefore, dear
ones, it is vital that we remain vigilant against thieves and robbers who guide
people to climb up another way rather than entering through the door.
If
we genuinely desire spiritual growth in our lives, we must walk in the path
demonstrated by Christ, the Good Shepherd. As a first step, we must yield
ourselves completely to Him to lead us. Then, the Spirit of Truth from Christ
Himself will guide us. Even though we walk through the valley of the shadow of
death, we will fear no evil, for His rod and His staff, they comfort us. (Psalm
23:4)
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦
No comments:
Post a Comment