Monday, October 26, 2026

🦋 Meditation verse - ரோமர் 14 : 17 / Romans 14:17

 🌅ஆதவன் தியானம்🌅

எண் :- 2089 - நாள் :- 28.10.2026


"தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

மேசியாவாகிய கிறிஸ்து இந்த உலகத்தில் இறை அரசை நிறுவுவதற்காக வருவார் என யூதர்கள் நம்பியிருந்தாலும் அவர்கள் அதனை உலக அரசாங்கம் போல ஒரு அரசாங்கமாக இருக்குமென்று எண்ணினர். எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், தேவனுடைய இராஜ்ஜியம் எப்போது வரும் என்று கேட்டனர். ஆம், இறை அரசு அல்லது தேவனுடைய இராஜ்ஜியம் என்ன என்பதை யூதர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. 

இயேசு கிறிஸ்து தன்னிடம் கேள்வி கேட்ட யூதர்களிடம், "தேவனுடைய இராஜ்ஜியம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 ) ஆம், தேவனுடைய இராஜ்ஜியம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது ஒருவரது உள்ளத்தில் உருவாகின்றது. 

அது நீதியுள்ள ஒரு வாழ்க்கை, சமாதானமுள்ள ஒரு வாழ்க்கை, ஒருவரது உள்ளத்தில் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் மகிழ்ச்சி. இவைகளை ஒருவன் அனுபவித்துக்கொண்டிருந்தால் அவன் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் இருக்கின்றான் என்று பொருள். இயேசு கிறிஸ்து இந்த தேவனுடைய இராஜ்ஜியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உருவாகவேண்டுமென்று கூறுகின்றார். 

இந்த தேவனுடைய இராஜ்ஜியம் நமக்குள் உருவாகவேண்டுமென்றால் நாம் குழந்தைகளாக மாறவேண்டியது அவசியம்.  அதாவது குழந்தையைப்போல கள்ளம் கபடமில்லாதவர்களாக மாறவேண்டும்.  சிறு குழந்தைகளை இயேசு கிறிஸ்துவிடம் மக்கள் கொண்டுவந்தபோது அவருடைய சீடர்கள் அவர்களைத் தடைசெய்தனர். அப்போது அவர்களைப் பார்த்து இயேசு, "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 ) என்று கூறினார்.  

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் அனுபவிப்பது. அது ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்களது இராஜ்ஜியம். ஆனால் பரலோக ராஜ்ஜியம் என்பது விண்ணக இராஜ்ஜியம். அது நாம் மரித்தபின்பு நாம் செய்த நன்மைகளுக்குப் பரிசாக அனுபவிக்கப்போவது. 

அன்பானவர்களே, நாம் பரலோக இராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் முதலில் இந்த உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல புசிப்பு, குடிப்பு (அதாவது உலக காரியங்கள்) போன்ற உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவைகளால் நாம் நிறைந்திருக்க முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம். அப்படி வாழ்வோமானால் நாம் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் இருக்கின்றோம் என்று பொருள். 

இன்று செழிப்பின் உபதேசத்தை பிரசித்திப்படுத்தும் பிரசங்கிகள் உலக செல்வத்தைப் பெறுவதுதான் ஆசீர்வாதம் என்று போதித்து மக்களைக் குழப்பி வைத்துள்ளனர். இது அப்போஸ்தலராகிய பவுலின் போதனைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்பும் சொத்து சுகங்களைச் சேர்ப்பதல்ல. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் தெளிவாக வாசிக்கின்றோம், தேவனுடைய இராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது என்று. உலக ஆசீர்வாதம் பெறும்போது அல்ல, மாறாக கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் தேவனுடைய இராஜ்யத்துக்குள் வருகின்றோம். இந்த இராஜ்யத்துக்குள் நாம் நுழைந்திட முதலில் நமது பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட அவரிடம் அவற்றை அறிக்கையிடுவோம்.  தொடர்ந்து ஆவியானவர் நம்மை வழிநடத்திட அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

🌅 AATHAVAN MEDITATION 🌅

No. 2089 – Date: 28.10.2026

“For the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit.” (Romans 14:17, NASB)

Although the Jews believed that Christ, the Messiah, would come into this world to establish God’s kingdom, they imagined that it would be a government like the kingdoms of this world. That is why they asked Jesus Christ when the kingdom of God would come. Yes, the Jews did not correctly understand what God’s kingdom really meant.

Jesus Christ answered the Jews who questioned Him, saying, “The kingdom of God is not coming with signs to be observed; nor will they say, ‘Look, here it is!’ or, ‘There it is!’ For behold, the kingdom of God is in your midst” (Luke 17:20–21, NASB). Yes, the kingdom of God takes shape in a person’s heart when that person believes in Jesus Christ and accepts Him as their Saviour.

It is a life of righteousness, a life of peace, and the joy that the Holy Spirit produces within a person’s heart. When someone experiences these things, it means that they are living in the kingdom of God. Jesus Christ teaches that this kingdom of God must be established within every person.

For the kingdom of God to be established within us, we must become like children. In other words, we must become innocent and free from deceit, like little children. When people brought little children to Jesus Christ, His disciples tried to stop them. Seeing this, Jesus said, “Permit the children to come to Me, and do not hinder them, for the kingdom of God belongs to such as these” (Luke 18:16, NASB).

There is a distinction between the kingdom of God and the kingdom of heaven. The kingdom of God refers to the spiritual life that people experience here in this world when they live according to God’s will. It is the realm of life experienced by those who live spiritually. The kingdom of heaven, on the other hand, refers to the heavenly kingdom, which, according to the understanding expressed here, we hope to experience after death as a reward for the good we have done.

Dearly beloved, if we are to become worthy of the kingdom of heaven, we must first learn to live as people of God’s kingdom here on earth. As the Apostle Paul teaches, instead of giving undue importance to worldly concerns such as eating and drinking—that is, the things of this world—we must give priority to being filled with righteousness, peace, and joy in the Holy Spirit. If we live this way, it means that we are living in the kingdom of God.

Today, preachers who popularise the prosperity gospel have confused people by teaching that receiving worldly wealth is the very definition of blessing. This teaching is completely contrary to the teaching of the Apostle Paul. The kingdom of God is not about eating and drinking or accumulating wealth and possessions.

We read this truth clearly in today’s meditation verse: “The kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit.” We enter the kingdom of God not by receiving worldly blessings, but when Christ comes to dwell within us.

To enter this kingdom, let us first confess our sins to Christ and seek His cleansing through His precious blood. Then, let us surrender ourselves to the Holy Spirit and live under His guidance continually.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...