Tuesday, November 24, 2026

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026

"ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) 

போராட்டமில்லாத வாழ்க்கை இல்லை. இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் வாழ்வில் பல்வேறு போராட்டங்கள் உண்டு. போராட்டங்களை மேற்கொண்டு வெற்றிபெறும்போதுதான் நாம் வாழ்வில் சிறக்கமுடியும். 

உலக வாழ்க்கையில் மனிதர்கள் போராடுவதைவிட ஆவிக்குரிய வாழ்வில் நாம் அதிகம் போராடவேண்டியுள்ளது. நமது போராட்டம், நமது உடலை அடக்கி பாவத்தை மேற்கொள்வது துவங்கி இந்த உலக மக்கள், ஆசைகள்,  அதிகாரங்கள், துரைத்தனங்கள் இவர்களோடும்  வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் இருக்கின்றது. 

தங்களது கீழ்ப்படியாமையால் நரகத்துக்குத் தள்ளப்பட்டவைதான் அசுத்த ஆவிகள். நம்மைப் பயமுறுத்துவதோ, இருளில் நம்மைத் துரட்டுவதோ பிசாசு எனும் சாத்தான்களின் நோக்கமல்ல; மாறாக நமது ஆத்துமாவை அழிப்பதே அவைகளின் நோக்கம். எனவே நம்மைப் பாவத்துக்கு நேராக நடத்தி நமது ஆத்துமாவை அழிக்க அவை முயலுகின்றன. அவை இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் நாம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக நம்மோடு போராடுகின்றன. 

இந்தப் பிசாசுகளை எதிர்த்துநிற்க சிலர் செய்வதுபோல தாயத்துகளையும் மணிக்கட்டில் பல்வேறு மந்திரித்தக் கயிறுகளையும் கட்டுவது கிறிஸ்தவ போதனையல்ல. நாம் தேவனுக்கு முற்றிலுமாகக் கீழ்படியும்போது அவை நம்மைவிட்டு ஓடிப்போகும். "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 ) என்று கூறுகின்றார் யாக்கோபு.

மேலும், ஒரு எதிரியை நாம் எதிர்த்துச் சமாளிக்க வேண்டுமானால் நம்மிடம் அதற்கான தகுந்த ஆயுதங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் அவன் நம்மைக் கண்டு பயந்து ஓடுவான். எதிரியான அவன் சாதாரண துப்பாக்கியினைக் கொண்டுவந்தால் நாம் AK-47 துப்பாக்கியைத் தூக்கவேண்டும். 

இதனையே கிறிஸ்தவ பார்வையில், "சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6 : 14 - 17 ) என்று கூறுகின்றார் பவுல் அப்போஸ்தலர்.


நமது வாழ்வில் மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள ஆவிகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்பதால் தேவனுக்குக் கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கை வாழ்ந்து, அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆயுதங்களைத் தரித்துக்கொள்வதே நாம் செய்யவேண்டியது.

அப்படி நாம் அந்தகார லோகாதிபதிகள், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடி எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்; நாமும் விசுவாசவாழ்வில் வலுப்பெற்றவர்களாக முடியும். மட்டுமல்ல, "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." ( 2 தீமோத்தேயு 4 : 7 ) என்று பவுல் அப்போஸ்த்தலரைப்போல அறிக்கையிடவும் முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

AATHAVAN MEDITATION

No. 2117 – Date: 25.11.2026

“For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places.” (Ephesians 6:12 – KJV)

There is no life without struggles. Everyone living in this world faces various struggles in life. Only when we overcome these struggles and emerge victorious can we excel in life.

Rather than struggling in our worldly life, we have to struggle much more in our spiritual life. Our struggle begins with disciplining our bodies and overcoming sin. It extends to the people of this world, their desires, powers, principalities, and the spiritual forces of wickedness in heavenly places.

Unclean spirits are those who were cast into hell because of their disobedience. The purpose of the devil, Satan and his evil forces, is not merely to frighten us; rather, their intention is to destroy our souls. Therefore, they try to lead us into sin and thereby destroy our souls. They wage war against us so that we, as human beings, may not obtain the heavenly joy that they themselves have lost.

It is not Christian teaching to wear amulets or various enchanted threads around our wrists, as some people do, in order to resist these evil spirits. When we completely submit ourselves to God, they will flee from us. James says, “Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you.” (James 4:7 – KJV)

Furthermore, if we are to confront and overcome an enemy, we must possess appropriate weapons to fight against him. Only then will he be afraid of us and flee. If our enemy comes with an ordinary gun, we must take up an AK-47 rifle!

From a Christian perspective, this is precisely what the Apostle Paul teaches:

“Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness; And your feet shod with the preparation of the gospel of peace; Above all, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked. And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God.” (Ephesians 6:14–17 – KJV)

Since we have a struggle in our lives, not against flesh and blood, but against principalities, powers, the rulers of the darkness of this world, and spiritual forces in heavenly places, what we must do is live a life of obedience to God and put on the spiritual armour described by the Apostle Paul.

When we stand firm and fight against the rulers of darkness and the spiritual forces of wickedness in heavenly places, resisting them, they will flee from us. We too will become stronger in our life of faith. Moreover, like the Apostle Paul, we will be able to declare:

“I have fought a good fight, I have finished my course, I have kept the faith.” (2 Timothy 4:7 – KJV)

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எபேசியர் 6 : 12 / Ephesians 6:12

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2117 - நாள் :- 25.11.2026 "ஏனெனில், மாம்சத்தோ...