கடவுள் எழுதும் புதிய வரலாறு (மத்தேயு 9:9)
Sr Amutha ICM
இயேசு சுங்கச்சாவடியில் இருந்த மத்தேயுவைப் பார்த்து, "என்னை பின்செல்லும்" அப்படின்னு கூப்பிட்டாரு. மத்தேயுவும் உடனே எழுந்து அவரு பின்னாடி போனாரு. அவரு சுங்கச்சாவடியை விட்டு வந்தாரேத் தவிர, தன்னோட பேனாவையோ, கணக்கு வழக்கு பார்க்குற திறமையையோ தூக்கி எறியல. இயேசுவை பின் செல்லுறதுனா பாவத்தையும், உலக ஆசைகளையும் விட்டு விலகுறதுதானே தவிர, கடவுள் தந்த அறிவையோ திறமையையோ தொலைக்குறது இல்ல.
மத்தேயுவோட பேனா ஒரு அழகான மனமாற்றத்தின் அடையாளம். இயேசுவை சந்திக்கிறதுக்கு முன்னாடி, அந்தப் பேனா வரியையும், கடனையும், பொய் கணக்கையும்தான் எழுதுச்சு. ஆனா இயேசுவை சந்தித்த பிறகு, அதே பேனா இயேசுவோட வாழ்க்கையையும், போதனைகளையும், நற்செய்தியையும் எழுத ஆரம்பிச்சது. கை மாறல, பேனா மாறல; ஆனா அதை பிடிச்சிருந்த கரங்களும், அதோட நோக்கமும் மாறிடுச்சு.
இது நம்ம வாழ்க்கையிலும் உண்மைதான். இயேசுவை பின்பற்ற நம்ம திறமைகளையோ, அனுபவங்களையோ தூக்கிப் போட வேண்டியது இல்ல. அதை இயேசுவின் பாதத்தில் ஒப்படைச்சா போதும், அவரு அதுக்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருவாரு.
இன்னைக்கு நாம யோசித்துப் பார்ப்போம்: நம்ம கையில இருக்குற "பேனா" எது? நம்ம படிப்போ, வேலையோ, திறமையோ—எதை இன்னும் இயேசுவின் கரங்களில் கொடுக்காம வச்சிருக்கோம்? அதை தூக்கி எறிய வேண்டியதில்லை, ஒப்படைச்சா போதும். நம்ம "பேனாவை" இயேசுவிடம் கொடுக்கும்போது, நம்மால எழுத முடியாத ஒரு அழகான வரலாற்றை அவரு நம்ம வாழ்க்கை மூலமா எழுதுவாரு.
ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் வாழ்க்கையாகிய பேனாவை உம் திருக்கரங்களில் ஒப்படைக்கின்றோம். உமக்கு பிடிக்காத காரியங்களை அழித்து, எங்களை புதுப்பித்து, உம்முடைய அன்பின் வரலாற்றை எங்கள் வாழ்வின் வழியாக எழுதியருளும். ஆமென்.
Matthew’s Pen — When God Writes a New Story (Matthew 9:9)
Jesus saw Matthew sitting at the tax booth and said, “Follow me.”Matthew got up and followed Him. He left behind his tax booth, but he did not leave behind his pen—his ability to count, record, write, and organize. Leaving "everything" to follow Christ means abandoning sin, status, and worldly security, not discarding our God-given mind, talents, or acquired skills.
Matthew’s pen is a beautiful symbol of conversion. Before meeting Jesus, it recorded taxes, debts, and transactions. After meeting Jesus, that same pen recorded the life, words, and mission of Christ. The pen did not change; the purpose changed. The hand did not change; the One guiding it changed.
This is also our story. Following Jesus does not mean abandoning everything we have learned or are capable of doing. It means surrendering them to Christ so that He can give them a new purpose. Our knowledge, experience, and abilities become instruments of God’s mission when placed in His hands.
What is the “pen” you are holding? What gift or experience have you not yet fully placed in Jesus’ hands? We do not need to throw it away—we need to surrender it. When we give our “pen” to Jesus, He writes through our lives a story we could never write ourselves.
Lord Jesus, take the pen of our lives into Your hands. Erase what does not belong to You, transform what needs to be transformed, and write through us a story that brings others closer to You. Amen.
Sr.Amutha ICM

No comments:
Post a Comment