Saturday, November 19, 2022

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகை

 ஆதவன் 🖋️ 662 ⛪ நவம்பர் 20,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிரியமானவர்களேகர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும்ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்." (  2 பேதுரு 3 : 8 )

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையைப் பற்றிக் கூறும்போது அப்போஸ்தலரான பேதுரு மேற்படி வசனத்தைக் கூறுகின்றார்இந்த வசனம் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான விதியான 'காலமும் இடமும்என்பதை தன்னுள் கொண்டுள்ளது.

காலமும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைநாம் இருக்கும் இடத்தின் அடிப்படையிலேயே காலம் செயல்படும்நமது பூமியில் நாம் கணக்கிடும் நாள்ஆண்டு இவை சூரியனை அடிப்படையாகக் கொண்டவைஅதாவது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஓர் ஆண்டு எனக் கணக்கிடுகின்றோம்நமது வயதும் அதனடிப்படையில் மாறுகின்றதுஆனால் நாம் இருக்கும் இந்த இடத்தினை மாற்றும்போது காலக் கணக்கும் மாறிவிடுகின்றது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த கோட்பாடு நேரமும் இடமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறதுஐன்ஸ்டீன் மேலும் கூறினார்நமது பிரபஞ்சத்திற்கு வேக வரம்பு உள்ளதுஒளியின் வேகத்தை விட வேறு எதுவும் வேகமாக பயணிக்க முடியாது (வினாடிக்கு 186,000 மைல்கள்). அப்படி நாம் பயணித்தோமானால் என்ன நடக்கும்உதாரணமாக அப்படி ஒருவர் விண்வெளியில் ஓர் ஆண்டு பயணித்து ஓர் ஆண்டு கழித்து திரும்பி வருவாரென்றால் அவரது வயது ஒரு ஆண்டுதான் கூடியிருக்கும்ஆனால் அவர் அப்படித் திரும்பி வரும்போது பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்அவர் பயணத்தைக் துவங்கியபோது பூமியில் இருந்த மக்கள் அழிந்து பல தலைமுறை மாறியிருக்கும்.

இதுதான் கர்த்தரது கணக்கும் மனிதர்கள் நமது கணக்கும்பேதுருவுக்குத் தேவன் இந்த சத்தியத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி பலரும் பலவிதங்களில் கேள்வி கேட்டனர்இதனைப் பேதுரு பின்வருமாறு கூறுகின்றார்: "அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கேபிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே". ( 2 பேதுரு 3 : 4 )

தன்னிடம் கேள்வி எழுப்பிய மக்களுக்குப் பேதுரு இந்த வசனங்கள் மூலம் பதிலளிக்கிறார்தேவனது காலக் கணிப்பு ஒருபுறம்மறுபுறம் தேவனது பொறுமைஅதாவது ஒருவரும் அழிந்து கெட்டுபோய்விடக்கூடாது எனும் எண்ணம்எனவே தேவன் தனது வருகையைத் தாமதப்படுத்துகின்றார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பிநம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

அன்பானவர்களேகிறிஸ்துவின் வருகை உண்மை என்பதற்கு பேதுரு குறிப்பிட்டுள்ள நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞானபூர்வமான வசனமே சாட்சி.

கிறிஸ்து நமது காலத்தில் வந்து நம்மை சந்திக்கலாம் அல்லது நாம் மரித்து அவர்முன் போய் நிற்கலாம்எனவே அவரை சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்நமது வாழ்வை சீர்தூக்கிப் பாப்போம்கிறிஸ்துவை சந்திக்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: