ஜீவபுத்தகத்தில் நமது பெயர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,181      💚 மே 04, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் ஆகும்போது நமது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதுகின்றார். இது மெய்யான ஒரு சத்தியமாகும்.   வேதாகம   பக்தர்கள்   பலரும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்

இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு  ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன.  உதாரணமாக,  பிறப்பு சான்றிதழ்,  ஆதார் கார்டு போன்றவைஆதார் அடையாள அட்டை  இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள  முடியாது எனும் நிலையே உள்ளதுஅரசாங்கத்திடம்  என்ன  காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு  முக்கியமாக  உள்ளது

எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே  பிறப்பு சான்றிதழைப்  பெற ஓடுகின்றனர்ஆதார் அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர்அன்பானவர்களேஇதுபோலவே  தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம்இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம்  உரிமையானவர்கள் எனும் பாஸ்போர்ட்இந்திய பாஸ்போர்ட்  உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால்  ஏற்றுக்கொள்வதைப்போலத்தான் இதுவும்.

இப்படித் தங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே  தேவனது பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்இதனை  வேதம் தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லைஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்  மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

மேலும், "மரித்தோராகிய     சிறியோரையும்   பெரியோரையும்  தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்அப்பொழுது  புஸ்தகங்கள் திறக்கப்பட்டனஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு  புஸ்தகமும்  திறக்கப்பட்டதுஅப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடுகின்றார். "அன்றியும்என் உத்தம கூட்டாளியேஅவர்களுக்கு  உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலை யாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட  மிகவும் பிரயாசப்பட்டார்கள்அவர்களுடைய நாமங்கள்  ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (  பிலிப்பியர் 4 : 3 )

பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை  அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை  செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார்அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார்அப்போது, "ஆகிலும்தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய  புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."(  யாத்திராகமம் 32 : 32 )

அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட  பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப்  பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கிஎனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோஅவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்." (  யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.

இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவாஅன்பானவர்களேதேவனிடம் நம்மைத் தாழ்த்தி  ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம்தேவன்தாமே நமது பெயரை  ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார்அந்த நிச்சயம் நம்மை  மகிழ்ச்சிப்படுத்தும். உலக அரசாங்க சட்டங்களுக்கு மதிப்பளித்து நமது பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்ற நாம் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டாமா? நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெற முயலுவோம். அப்போது கர்த்தர் நமது பெயரையும் ஜீவபுத்தகத்தில் எழுதுவார். 

ஆம் அன்பானவர்களே, ஜீவபுஸ்தகத்திலே  பெயர்  எழுதப்பட்டவனாகக்                 காணப்படாதவன்    நரக  அக்கினிக்கடலிலே  தள்ளப்படுவான் என்பதே வேதம் தெளிவாகக் கூறும் உண்மை. வெறுமனே கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டிராமல் நாம் கிறிஸ்தவர்கள்தான் என்பதனை தேவனுக்குமுன் பதிவுசெய்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்