Thursday, May 02, 2024

ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பலவீனமுள்ளது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,180       💚 மே 03, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚 


"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்ஆவி உற்சாகமுள்ளதுதான்மாம்சமோ பலவீனமுள்ளது ." (  மத்தேயு 26 : 41 )  

கெத்சமனே தோட்டத்தில் தான் காட்டிக்கொடுக்கப்படுமுன்  இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தைகள் இவைதான்  படப்போகும் பாடுகளும் மரணமும் இயேசுவின் கண்முன்  இருந்தனஅவரது மனம் மிகுந்த துக்கத்துக்குள்ளாக இருந்ததுஆனால் அவரது ஆவி சோர்ந்துபோகவில்லைசீடர்கள்  சோர்ந்துபோய் தூக்கக்கலக்கத்தில் இருந்தனர்.  அவர்களை  இயேசு உற்சாகப்படுத்தி ஜெபிக்கச்சொல்கின்றார்.  

இது மேலான ஆவிக்குரிய ஒரு அனுபவத்துக்காக இயேசு கிறிஸ்து காட்டும் ஒரு வழிநாம் உடலளவிலும் மனதளவிலும்  சோர்ந்துபோகும்போது பலவேளைகளில் நம்மால்  ஜெபிக்க முடியவதில்லை. ஜெபிக்கவேண்டுமென்ற எண்ணம் நமக்கு இருந்தாலும் நம்மால் ஜெபிக்கமுடியாத வேளைகள் வருவதுண்டு. காரணம், நமது உடல் பலவீனம். இதனையே இயேசு கிறிஸ்து,"ஆவி உற்சாகமுள்ளதுதான்மாம்சமோ பலவீனமுள்ளது" என்று கூறுகின்றார். நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அத்தகைய சோர்வு நமக்கு வரும்போது அந்த சோர்வுக்கு மத்தியிலும் நாம்  தேவனைத் தேடும் ஆவலோடு  இருப்போமானால் தேவனுடைய  ஆவியானவர்  நமக்காக வேண்டுதல் செய்வார்.

அப்போஸ்தலரான பவுலும் இதுபற்றிக் கூறுகின்றார். "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு  உதவிசெய்கிறார்நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய  தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்." (  ரோமர் 8 : 26 ) 

வெறும் உலக ஆசீர்வாதத்துக்காக மட்டுமே நாம் ஜெபித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தை நாம் பெற  முடியாதுநோய்களுக்காகவும்பொருளாதார  ஆசீர்வாதத்துக்காகவும்,   கடன் பிரச்சனை தீரவும்நம் பிள்ளைகளுடைய வேலைக்காகவும்திருமணத்துக்காகவும் மட்டுமே நாம் ஜெபித்துக் கொண்டிருந்தால் இந்த அனுபவத்தைப்  பெற முடியாதுஆனால் ஆவிக்குரிய வாஞ்சையோடு ஆதாவது நான் இன்னும்  பரிசுத்தமாகவேண்டுமென்டும் ஆவலோடுதேவனை இன்னும்  கிட்டிச் சேரவேண்டுமெனும் ஆவலோடு  விண்ணப்பம் செய்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறலாம்

அதாவது ஆவியின் சிந்தனையோடு ஜெபித்தால் தேவனுடைய  ஆவியானவர் நமக்காக விண்ணப்பம்செய்வார். அதனை நமது வாழ்வில் நாம் கண்டுணரலாம். "ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால் ,  இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை  இன்னதென்று அறிவார்." (  ரோமர் 8 : 27 )     

இயேசு கிறிஸ்து இத்தகைய ஆவிக்குரிய மேலான எண்ணமுடன் இருந்ததால் அவரது பாடுகளைத் தாங்கத்தக்கப் பலத்தை  ஆவியானவரின் மன்றாட்டினால் பெற்றுக்கொண்டார்

அன்பானவர்களேஆவிக்குரிய சோர்வோஉடல்சோர்வோ  நம்மைத் தாக்கும்போது அப்படியே இருக்குமிடத்திலிருந்து நமக்குமுடிந்தமட்டும் ஜெபித்தால் போதும்நமது உள்ளத்தின்  ஆழத்தினை அறிந்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பம்  செய்வார்நமது உள்ளம் தேவனை நேசிக்கும் உற்சாக்கத்துடன்  இருந்தால் போதும்ஆவிக்குரிய வாழ்வில் எந்த சோர்வும் நம்மை தேவனைவிட்டு விலக்கிட முடியாது

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: