"ஆதவன்" தியானம் - 1986
ஜூலை 17 வெள்ளி 2026
"ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 )
மனிதர்களது பார்வைகள் வித்தியாசமானவை. எல்லோரும் தாங்கள் பார்ப்பதுதான் சரி என்று நிரூபிக்க முயல்கின்றனர். எனவேதான் உலகில் மனிதர்களிடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. ஒருவரை அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் விதத்தைப்பொறுத்துதான் நாம் அதனைக்குறித்து அறியமுடியும். ஆனால், எல்லாவற்றுக்கும் உண்மையான சரியான பார்வை ஒன்று உண்டு. அதனை அறிந்தவர்களே வெற்றியாளர்கள்.
இன்றைய தியான வசனம் மேலான ஆவிக்குரிய பார்வையினை நாம் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்; மரியாள் யோசேப்பு இவர்களின் மகன் என்று அறியப்பட்டார். இது கிறிஸ்துவைகுறித்த மனித பார்வை. ஆனால், நாங்கள் கிறிஸ்துவை இப்படி அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அவரை அப்படி அறியமாட்டோம். மாறாக, அவர் தேவனுடைய குமாரன் என்றுதான் நாங்கள் அறிவோம் என்கின்றார் பவுல்.
உலகத்தின் பார்வையில் அவர் மனிதன். ஆனால் "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." ( கொலோசெயர் 1 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம்.
இதுபோல, "இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நாம் உலகினில் பார்க்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தேவ சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் பவுல் அப்போஸ்தலர், நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டோமானால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களையும் நாம் வெறும் மனிதர்களாக மட்டும் பார்க்காமல் அவர்களிலிருக்கும் கிறிஸ்துவையே பார்ப்போம் என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, முதலில் நாம் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாகப் பார்க்கத் துவங்கினால்தான் நம்மால் மற்றவர்களை கிறிஸ்துவின் சாயலாகப் பார்க்கமுடியும். கிறிஸ்து வெறும் தாவீதின் மகனல்ல. அப்படிக் கூறுவதை அவரும் விரும்பவில்லை. தாவீதுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி? என்றுதான் அவர் யூதர்களிடம் தன்னைக்குறித்துக் கூறினார். "தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை." ( மத்தேயு 22 : 45, 46 ) என்று நாம் வாசிக்கவில்லையா?
கிறிஸ்துவைக் குறித்த நமது பார்வை மாறவேண்டியது அவசியம். அவரை நாம் தாவீதின் குமாரனென்றும் மரியாள் யோசேப்பின் மகன் என்றும் பார்க்கும் பார்வையினை மாற்றி "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்" என்று பார்க்கும்போதுதான் நமது ஆவிக்குரிய வாழ்க்கை மாறும். நாம் அப்போதுதான் மற்றவர்களையும் தேவ சாயலாக படைக்கப்பட்டவர்களாகப் பார்க்க முடியும். அதற்கு, "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." என்று உறுதியாகக் கூறிக்கொள்வோம் அப்படியே தேவனுடைய குமாரனாக மட்டுமே பார்ப்போம்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"AATHAVAN" Meditation – 1986
Friday, July 17, 2026
"Therefore, from now on we recognize no one according to the flesh; even though we have known Christ according to the flesh, yet now we know Him in this way no longer." — 2 Corinthians 5:16
Human perspectives vary. Everyone tries to prove that their own view is the correct one. This is precisely why so many conflicts of opinion arise among people in the world. How we know someone or something depends entirely on how we look at them. However, there is one truly correct perspective for everything—and those who come to know it are the conquerors.
Today's meditation verse admonishes us to possess a higher, spiritual perspective. Christ was called the Son of David; He was known as the son of Mary and Joseph. This was the human perspective regarding Christ. But Paul says that even if we once knew Christ in this manner, we know Him so no longer. Instead, we know Him as the Son of God.
In the world's view, He was just a man. Yet we read:
"He is the image of the invisible God, the firstborn of all creation. For by Him all things were created, both in the heavens and on earth, visible and invisible, whether thrones or dominions or rulers or authorities—all things have been created through Him and for Him." — Colossians 1:15–16
Similarly, today's verse states, "Therefore from now on we recognize no one according to the flesh." That is to say, every human being we see in this world was created in the image of God. As it is written:
"God created man in His own image, in the image of God He created him; male and female He created them." — Genesis 1:27
This is why the Apostle Paul teaches that if we have come to know Christ, we will no longer view the people He created merely as human beings, but will instead see Christ within them.
Yes, beloved, only when we first begin to view Christ as the Son of God can we see others as made in the image of Christ. Christ is not merely the son of David, nor did He desire to be described that way. He asked the Jews concerning Himself: How could He be David’s son?
"Therefore, if David calls Him 'Lord,' how is He his son?" No one was able to answer Him a word, nor did anyone dare from that day on to ask Him another question. — Matthew 22:45–46
It is essential that our perspective of Christ changes. When we shift our view of Him from being merely the son of David or the son of Mary and Joseph, and instead behold Him as "the image of the invisible God, the firstborn of all creation," our spiritual lives will be transformed. Only then will we be able to see others as those created in God’s image.
To that end, let us firmly declare: "Even though we have known Christ according to the flesh, yet now we know Him in this way no longer," and let us view Him solely as the Son of God.
✍️ Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment