Tuesday, July 14, 2026

🦋 Meditation verse - ஏசாயா 40 : 25 / Isaiah 40:25

"ஆதவன்" தியானம் - 1985 

ஜூலை 16 வியாழன் 2026     


"இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 40 : 25 )

தேவனை நாம் யாருக்கும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தமுடியாது. இதனால்தான் அவர்,   "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;."  யாத்திராகமம் 20 : 3, 4 ) என்று முதல் கட்டளையாகக் கூறினார். 

இன்றைய தியான வசனத்தை தேவன் சொல்கிறார் என்று கூறாமல்,  "பரிசுத்தர் சொல்லுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நமது தேவனுக்கு மறுபெயர், "பரிசுத்தர்". இந்த உலகத்தில் பல்வேறு தேவர்கள் இருக்கலாம்; அவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம். ஆனால், நமது தேவன் மட்டுமே பரிசுத்தர் என்று அழைக்கப்படுகின்றார். வேறு எந்த தெய்வத்துக்கும் இந்தப்பெயர் பொருந்தாது. 

ஆம், பல தெய்வங்களும், தேவர்கள் எனக் கூறப்படுபவர்களும் உலகினில் இருக்கலாம். ஆனால் நமக்குப் பரிசுத்தரான தேவன் ஒருவரே உண்டு. அவரே நம்மை உருவாக்கியவர்.  "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

சில மதங்களில் அறிவுக்கு ஒரு கடவுள், ஆற்றலுக்கு ஒரு கடவுள், செல்வதைக் கொடுக்க ஒரு கடவுள் என்று வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால் நமது தேவன் அனைத்தையும் கொடுக்கவல்லவர். மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தப்படுத்துபவர்.  "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." ( கொலோசெயர் 1 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, இந்த மகத்துவமுள்ள தேவன் நமது குரலுக்குச் செவிகொடுக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கின்றார் என்பதுதான் நமது பலம். அதுதான் நமது மிகப்பெரிய பாக்கியம். இதனால்தான் மோசே, "நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?" ( உபாகமம் 4 : 7 ) என்று கேட்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, பரிசுத்தமும் சர்வ வல்லமையும் வானங்களைவிட உயர்ந்தவருமான தேவனே நமது தேவன். இந்த "பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." ( எபிரெயர் 7 : 26 ) இப்படியிருக்க, அவரை நாம் வேறு யாருக்கு ஒப்பிடமுடியும்? அவருக்கு யாரை நிகராக்க முடியும்? எனவேதான், அவரைத்தவிர வேறு யாருக்கும் எந்த உலகப் பொருளுக்கும் நமது வாழ்வில் முன்னுரிமையோ ஆராதனையோ செலுத்தவேண்டாம் என்று வேதம் வலியுறுத்துகின்றது. 

தேவனது குரலுக்குச் செவிகொடுத்து,  அவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்தி வாழ்வோம். அப்போதுதான் நாம் அவருக்கேற்ற மக்களாக மெய்யான ஆசீர்வாதத்தினைப்  பெற்று மகிழமுடியும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1985

Thursday, July 16, 2026

"To whom then will you compare Me that I would be his equal?” says the Holy One. — Isaiah 40:25

We cannot compare God to anyone or identify Him with anything. That is why He gave as the first commandment:

"You shall have no other gods before Me. You shall not make for yourself an idol, or any likeness of what is in heaven above or on the earth beneath or in the water under the earth." — Exodus 20:3–4

Notice that today’s meditation verse does not simply state "God says," but rather, "says the Holy One." In other words, another name for our God is "The Holy One." There may be various gods in this world, and they may be called by many names, but our God alone is called the Holy One. This name fits no other deity.

Indeed, there may be many so-called gods and lords in the world. But for us, there is only one God, the Holy One. He is the One who created us. Scripture tells us:

"For even if there are so-called gods whether in heaven or on earth, as indeed there are many gods and many lords, yet for us there is only one God, the Father, from whom are all things, and we exist for Him; and one Lord, Jesus Christ, by whom are all things, and we exist through Him." — 1 Corinthians 8:5–6

In some religions, deities are categorized—one for knowledge, one for power, and another for bestowing wealth. But our God is able to grant all things. Furthermore, He is the One who sanctifies us. As it is written:

"For by Him all things were created, both in the heavens and on earth, visible and invisible, whether thrones or dominions or rulers or authorities—all things have been created through Him and for Him." — Colossians 1:16

Moreover, our strength and greatest privilege lie in the fact that this glorious God is always ready to listen to our voice. This is why Moses asked:

"For what great nation is there that has a god so near to it as is the LORD our God whenever we call on Him?" — Deuteronomy 4:7

Yes, dear ones, the God who is holy, almighty, and exalted above the heavens is our God.

"For it was fitting for us to have such a high priest, holy, innocent, undefiled, separated from sinners and exalted above the heavens." — Hebrews 7:26

Since this is who He is, to whom can we compare Him? Who can be made equal to Him? That is why Scripture emphasizes that we should give no priority or worship to anyone or anything in this world other than Him.

Let us listen to God’s voice and live giving worship to Him alone. Only then can we live as His people and rejoice in His true blessings.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          



No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 5 : 16 / 2 Corinthians 5:16

" ஆதவன் " தியானம் - 1986  ஜூலை 17 வெள்ளி 2026     " ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங...