Wednesday, July 29, 2026

🦋 Meditation verse - 1 தீமோத்தேயு 4 : 8 / 1 Timothy 4:8

"ஆதவன்" தியானம் - 2000 

ஜூலை 30 வியாழன் 2026  


"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )

உடல் முயற்சியால் பலர் இந்த உலகத்தில் அரிய பல காரியங்களைச் செய்கின்றனர். விளையாட்டுகளிலும் உடல் வலிமையை மெய்ப்பிக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பதக்கங்களையும் பெறுகின்றனர். இந்த உலகம் அவர்களைப் பாராட்டி பெருமைப்படுத்துகின்றது. ஆனால் இத்தகைய சரீரமுயற்சிகள் அற்பமான பலனையேக் கொடுக்கவல்லவை. 

இதுபோல இந்த உலகத்தில் பலரும் பல்வேறு கடினமான உடல் முயற்சிகளால் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள முயல்வதையும்  நாம் பார்க்கின்றோம். ஆனால் இத்தகைய சரீர முயற்சிகள் அற்பமான பலனைத்தான் கொடுக்குமென்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் நமது உடலை வருத்தும் செயல்களைச் செய்வதால் உலகத்துக்கு ஏற்புடையவர்கள் ஆனாலும் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகிவிடுவதில்லை.  

நாம் உடல் முயற்சிகளை விட்டு நமது உள்ளத்தை தேவனை நோக்கித் திருப்பவேண்டியது அவசியம். இத்தகைய தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் ஏற்புடையதாக இருப்பதால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. முதலில் கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது முக்கியமேத்தவிர நமது உடல் முயற்சிகளல்ல. காரணம், அப்படிக்  கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்தவர்களாகின்றோம். ஆம்,  "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) இதுவே மேலான வெற்றி.

சரீர முயற்சிகள் மூலம் நாம் ஒருவேளை மனிதர்களது பார்வைக்கு மேலானவர்களாக, பக்தியுள்ளவர்களாகத் தெரியலாம். ஆனால் வெறுமனே உடல் சார்ந்த முயற்சிகளான உபவாசம், உடலை வருத்தும் இதரச் செயல்பாடுகள் தேவனை நம்மை நோக்கித் திருப்ப தேவையாயிருப்பதில்லை. சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி அது உடலைப் பேணுவதற்கேப்  பயன்படும். 

சிலர் கடுமையான உபவாசம் மூலம் தேவனது அன்பைப் பெறுவதற்கு முயல்கின்றனர். நமது இருதயத்தைத் தேவனை நோக்கித் திருப்பாமல் இப்படி உபவாசிப்பதும் தேவையற்றதே. காரணம்,  "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 8 )

தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. எனவே நாம் உடல் சார்ந்த முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தேவபக்திக்கேதுவான காரியங்களில் ஈடுபடவேண்டியது அவசியம். அதாவது தேவனது ஆவி நம்மில் குடிகொள்ள ஆர்வமுள்ளவர்களாக அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியது அவசியம். 

காரணம், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்காகச் செய்யும் சரீர முயற்சிகளைத்  தேவனுக்கேற்ற முயற்சிகள் என்று தவறாக எண்ணாமல் தேவ பக்திக்குரிய ஆவிக்குரிய முயற்சிகளில் ஈடுபடுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக மாறமுடியும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல்  ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) 

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும்போது அது மட்டுமே இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்  எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும். எனவே உடல் சார்ந்த முயற்சிகளைவிட்டு ஆவியானவரை அடைந்துகொள்ள வாஞ்சிப்போம். அதற்கான தேவ பக்திக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுவோம். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"AATHAVAN" Meditation – 2000

July 30, Thursday, 2026

"For bodily exercise profiteth little: but godliness is profitable unto all things, having promise of the life that now is, and of that which is to come." — 1 Timothy 4:8

Through physical effort, many people accomplish various remarkable things in this world. They participate in sports and physical competitions, winning prizes and medals. The world praises and honours them. However, such bodily exercises are capable of yielding only a small benefit.

Similarly, we see many in this world attempting to receive God’s blessings through various strenuous physical efforts. But today’s meditation verse tells us that such bodily exercise profits very little. Even if we make ourselves acceptable to the world through self-afflicting physical acts, we do not thereby become acceptable to God.

It is essential that we move away from mere bodily effort and turn our hearts toward God. Such godliness is profitable for all things, as it holds value both for this life and the life to come. First and foremost, Christ coming into us is what matters, not our physical exertions. This is because when Christ enters into us, we die to sin and live unto righteousness.

"And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness." — Romans 8:10

This is the ultimate victory.

Through physical effort, we may perhaps appear superior and devout in the eyes of men. However, purely body-centric efforts—such as fasting and other acts of self-mortification—are not what draw God toward us. As today’s scripture reminds us, bodily exercise profiteth little; it is useful mainly for the care of the physical body.

Some attempt to gain God’s love through extreme fasting. Fasting without turning our hearts toward God is unnecessary.

"But meat commendeth us not to God: for neither, if we eat, are we the better; neither, if we eat not, are we the worse." — 1 Corinthians 8:8

Godliness is profitable unto all things because it holds promise for both this present life and the life to come. Therefore, instead of prioritizing physical exertions, we must engage in things pertaining to godliness. That is, we must earnestly desire God's Spirit to dwell within us and engage in pursuits that foster His presence.

For the Apostle Paul says:

"But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you." — Romans 8:11

Yes, beloved, let us not mistake physical efforts done for God as divine righteousness. Instead, let us devote ourselves to spiritual efforts rooted in godliness. Only then can we truly belong to Christ.

"But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his." — Romans 8:9

When the Spirit of Christ comes into us, that alone will be profitable unto all things—both for this present life and the life to come. Therefore, let us move beyond mere physical exertions and yearn to receive the Holy Spirit, engaging ourselves in acts of true godliness.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          
  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - சங்கீதம் 43 : 3 / Psalm 43:3

  தியானம் - 2001 " ஆதவன் "    ஜூலை 31 வெள்ளி 2026    " உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும் ; அவைகள் ...