"ஆதவன்" தியானம் - 1979
"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )
கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்கு மனிதர்கள் பல்வேறு கடினமான முயற்சிகளைச் செய்வதை நாம் பார்க்கின்றோம். இதற்காகப் பல்வேறு ஆலயங்களில் கடினமானச் செயல்களை மனிதர்கள் செய்கின்றனர். கம்பியால் கன்னத்தில் துளையிட்டுக்கொள்கின்றனர், நாக்கில் துவாரமிட்டு கம்பிகளைச் சொருகிக்கொள்கின்றனர், அங்கப்பிரதட்சணம் எனக் கூறித் தரையில் உருள்கின்றனர், நெருப்பின்மேல் நடக்கின்றனர், தட்டுகள் இல்லாமல் தரையில் உணவை வைத்து மண்சோறு உண்கின்றனர், இன்னும் இதுபோலப் பல்வேறு முறைகளில் தங்களது உடலை வருத்திக்கொள்கின்றனர்.
ஆனால் இத்தகைய கடின முயற்சி எதுவும் இல்லாமலேயே தேவனது இரக்கத்தை நாம் பெறமுடியும். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது" என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, கடினமான முயற்சிகளல்ல தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலே போதும், நாம் அவரது இரகத்தைப் பெறமுடியும்.
நமது அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அவரது சுமை மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்று கூறவில்லையா? ஆம், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது" ( மத்தேயு 11 : 28-30 ) என்கின்றார் கிறிஸ்து.
தேவனுக்குப் பயந்து வாழ்வதுதான் அவர் கூறும் எளிதான வழி. தேவனுக்குப் பயப்படுதல் என்பது அவர் வெறுக்கும் தீமையான காரியங்களைச் செய்யாமல் இருப்பதுதான். "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
மேலும், பெருமையை விட்டு மனத் தாழ்மையோடு நாம் நடக்கும்போது தேவன் தனது கிருபையினை அளிப்பதால் நமது சுமை எளிதாகின்றது. "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )
இன்று பல கிறிஸ்தவர்களும்கூட பிற மத நண்பர்கள் செய்வதைப்பார்த்துத் தாங்களும் சில கடினமான உடலை வருத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மனிதர்கள் வேண்டுமானால் இத்தகைய செயல்களைப்பார்த்து பரிதாபம்கொண்டு இரங்கலாம், ஆனால் தேவனோ மனம்திரும்பிய தாழ்மையான உள்ளத்தைக்கண்டு மட்டுமே பரிதாபம் கொண்டு இரக்கம் காட்டுவார்.
நமது உடலை வருத்தாமல் ஆத்துமாவில் நமது செயல்களுக்காக வருந்துவோம். தேவனுக்குப் பயந்த ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"AATHAVAN" Meditation - 1979
July 09, Thursday, 2026
"AND HIS MERCY IS UPON
GENERATION AFTER GENERATION TOWARD THOSE WHO FEAR HIM." (Luke 1:50, NASB)
We often observe people
undergoing various arduous efforts to obtain the mercy of God. In various
temples, people perform difficult acts of penance: they pierce their cheeks
with metal rods, insert skewers through their tongues, perform angapradakshinam
(rolling their bodies on the ground around the temple), walk on fire, or eat
food directly off the ground without plates. In these ways and many others,
they inflict suffering upon their own bodies.
However, we can receive the
mercy of God without any such rigorous efforts. Today’s meditation verse tells
us exactly this: "And His mercy is upon generation after generation toward
those who fear Him." Yes, beloved, it is not through difficult physical labours,
but by living a life that fears God, that we receive His mercy.
Did our precious Lord Jesus
Christ not say that His burden is gentle and light? Indeed, Christ declares:
"Come to Me, all who
are weary and heavy-laden, and I will give you rest. Take My yoke upon you and
learn from Me, for I am gentle and humble in heart, and YOU WILL FIND REST FOR
YOUR SOULS. For My yoke is easy and My burden is light." (Matthew
11:28-30, NASB)
Living in the fear of God is
the simple path He prescribes. Fearing God means abstaining from the evil
things He hates. The Lord God says:
"The fear of the LORD
is to hate evil; Pride and arrogance and the evil way and the perverted mouth,
I hate." (Proverbs 8:13, NASB)
Furthermore, when we abandon
pride and walk with humility, God grants us His grace, making our burden light.
"You younger men,
likewise, be subject to your elders; and all of you, clothe yourselves with
humility toward one another, for GOD IS OPPOSED TO THE PROUD, BUT GIVES GRACE
TO THE HUMBLE." (1 Peter 5:5, NASB)
Today, even many Christians,
seeing the actions of friends from other religions, engage in similar
body-mortifying rituals. Human beings might look upon such actions with pity,
but God shows mercy only when He sees a repentant, humble heart.
Instead of afflicting our
bodies, let us afflict our souls with sorrow for our sins. Let us commit
ourselves to living a spiritual life that fears God. His mercy is not only for
those who fear Him, but it extends to their generation after generation.
✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment