Friday, July 10, 2026

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

"ஆதவன்" தியானம் - 1982

ஜூலை 12, ஞாயிறு 2026     



"துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்." ( 2 கொரிந்தியர் 6 : 10 )

இந்த உலகம் நம்மைப் பார்க்கும் விதம் வேறு,  தேவன் நம்மைப்பார்க்கும் பார்வை வேறு. நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது உலகுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு, இடைவெளி இவற்றை இன்றைய தியான வசனம் விளக்குகின்றது. இதனை நான் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகாலத்திலேயே கண்டுகொள்ள தேவன் உதவிசெய்தார்.   

நான் ஆரம்ப காலங்களில் ஆராதனைக்குச் சென்ற ஆலயத்தில் வரும் பெரும்பாலான மக்கள் ஏழை எளியவர்கள்தான். வெளிப்பார்வைக்கு  எந்தப் பகட்டும் அவர்களிடம்  இருக்காது. அவர்கள் பெரும்பாலும் தினக்கூலி தொழிலாளர்களாகவும் வீட்டுவேலை செய்யும் பெண்களாகவும் இருந்தனர். தினசரி வேலைவாய்ப்புக்கள் இவர்களுக்கு இல்லை, வருமானம் மிகவும் குறைவு, இவர்களது வீடுகள்கூட ஓடு அல்லது தென்னை ஓலைக்  கூரைகளால்  கட்டப்பட்டவைதான்.

ஆனால் அவர்களிடம் பேசிப் பார்த்தால் பெரிய இறையியல் கல்லூரியில் படித்தவர்களிடம் அறியமுடியாத ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஆம்  அன்பானவர்களே, இத்தகைய மனிதர்களிடம் பகட்டான உலக மனிதர்கள் பேசுவதற்கும் தயங்குவதுண்டு; இவர்களைத்  தீண்டத்தகாதவர்கள்போல  பார்ப்பதுண்டு. ஆனால், இத்தகைய ஆவிக்குரிய மனிதர்களைக்குறித்தே இன்றைய தியான வசனத்தில்,  துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் இருப்பவர்களாகக் கூறப்பட்டுள்ளது. 

இவர்கள் பொருளாதார நெருக்கடியில் துக்கப்படுபவர்கள்தான் ஆனால் எப்பொழுதும் ஆவியில் சந்தோஷப்படுகிறவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தரித்திரர்கள்தான் ஆனால் அநேகரை ஆவிக்குரிய வாழ்வில் ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒன்றுமில்லாதவர்கள்தான் ஆனால் கிறிஸ்துவைத் தங்களுக்குள் தாங்கியவர்களாக இருப்பதால்  சகலத்தையும் உடையவர்களாக இருக்கின்றனர்.  

அன்பானவர்களே, நாம் பெரிய பெரிய ஆலயங்களில் பகட்டாக உடையணிந்து நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இப்படிப் பகட்டாக ஆலயங்களுக்கு வரும் பலரும் தனிப்பட்ட விதத்தில் தேவனை அறிந்தவர்களோ ஆவிக்குரிய மேலான அனுபவங்கள் பெற்றவர்களோ அல்ல. இவர்களில் பலரது குடும்ப வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருக்கின்றது. 

ஆம், இவர்கள் தேவனுடைய பார்வையில் இன்றைய தியான வசனத்துக்கு நேர் மாறானவர்களாக இருக்கின்றனர்.  சந்தோஷப்படுகிறவர்களாக காணப்பட்டாலும்   துக்கப்படுகிறவர்ளாகவும்,              ஐசுவரியவான்கள்  எனப்பட்டாலும்  தரித்திரர்களாகவும்,  சகலத்தையும் உடையவர்களாக இருந்தாலும் ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர். 

இத்தகைய மிகப்பெரிய மாற்றத்துக்குக் காரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதால் ஏற்படுவதுதான்.  அப்போஸ்தலரான பவுல் தனது சொந்த அனுபவத்தில் கண்டுகொண்ட இந்த ஆவிக்குரியச் சத்தியத்தை நமக்கு இன்றைய தியான வானம் மூலம் விளக்குகின்றார்.  

கிறிஸ்துவை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரோடு தனிப்பட்ட உறவில் வளரும்போது தேவன் நம்மையும் இதுபோல மாற்றுவார். அப்போது நாமும், இந்த உலக வாழ்க்கையில் பிரச்சனைகளால் துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் எனப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்கள் ஆக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாகவும் விளங்குவோம்.  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

"AATHAVAN" Meditation - 1982

July 12, Sunday 2026

"as sorrowful yet always rejoicing, as poor yet making many rich, as having nothing yet possessing all things." — 2 Corinthians 6:10 (NASB)

The way the world sees us is different from the way God sees us. When we live a spiritual life, today’s meditation verse illustrates the contrast and gap between us and the world. God helped me discern this very early in my spiritual journey.

In the early days, most of the people attending the church I went to were poor and lowly. There was no outward grandeur or pretension in them. They were mostly daily wage labourers and women who worked as domestic helps. They did not have guaranteed daily work, and their income was very low; even their homes were built with tiled or coconut-thatch roofs.

However, when you spoke with them, you could learn spiritual truths that could not be grasped even from those who studied in major theological colleges. Yes, dear ones—unworldly, flashy people might hesitate even to speak to such individuals and often look down on them as if they were untouchables. Yet, it is precisely concerning such spiritual people that today’s meditation verse speaks, describing them as those who are: as sorrowful yet always rejoicing, as poor yet making many rich, as having nothing yet possessing all things.

They may be sorrowful due to financial distress, but they are always rejoicing in the Spirit. They may be poor, but they are making many rich in the spiritual life. They may have nothing, but because they carry Christ within themselves, they possess all things.

Dearly beloved, we often assume that those who wear grand clothing and arrive at massive churches in four-wheeled vehicles are the blessed ones. However, many who come to church in such grand display do not personally know God, nor do they possess higher spiritual experiences. For many of them, family life remains filled with sorrow.

Indeed, in God's eyes, they are the exact opposite of today’s meditation verse: though appearing to be rejoicing, they are sorrowful; though considered rich, they are poor; and though having everything, they have nothing.

The cause of such a massive transformation is receiving the Lord Jesus Christ into one's heart. The Apostle Paul explains this spiritual truth to us through today's verse from his own personal experience.

When we receive Christ into our hearts and grow in a personal relationship with Him, God will transform us in the same way. Then we, too—even if considered sorrowful due to the troubles of this worldly life—will be always rejoicing; though considered poor, we will make many rich; and though considered to have nothing, we will prove to possess all things.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          
                       

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 6 : 10 / 2 Corinthians 6:10

" ஆதவன் " தியானம் - 1982 ஜூலை 12, ஞாயிறு 2026       "துக்கப்படுகிறவர்கள் எனப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும...