Tuesday, July 07, 2026

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

"ஆதவன்" தியானம் - 1978


ஜூலை 08, புதன் 2026     


"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

குழந்தைகளைத் தண்டித்துக் கண்டித்து வளர்க்கவேண்டியது அவசியம். இன்று பெரும்பாலும் பெற்றோர்கள் அப்படிக் குழந்தைகளைத் தண்டிப்பதில்லை. முன்பு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களைக் கண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் இன்று அப்படியல்ல, குழந்தைகளைத் தண்டிக்கும் ஆசிரியர் நீதிமன்றங்களில் தண்டனை பெறுகின்றார். இதன் விளைவே இன்று நாம் காணும் சமூக சீர்கேடுகள்.  ஆம், பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவே வேதம் அறிவுறுத்துகின்றது. "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்." ( நீதிமொழிகள் 23 : 13 )

குழந்தைகள் தவறு செய்யும்போது நல்ல  தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. சில வேளைகளில் தாய் தனது குழந்தையைப் பலமாக அடித்துவிட்டால், பின்னர் அவளே அந்தக் குழந்தையைக் கொஞ்சுவாள். இதுபோலவே தேவன் நம்மையும் நடத்துகின்றார். தண்டனையைத் தரும் அவரே நமக்கு ஆறுதலையும் அளிக்கின்றார். 

சிலவேளைகளில் நாம் சோதனை, துன்பங்களில் அகப்படுவதற்கு  நமது தவறுகளும் பாவங்களும் காரணமாக இருக்கலாம்; அவை தேவன் தரும் தண்டனையாக இருக்கலாம்.  ஆனால் நமது தேவன் இரக்கமும் கிருபையும் உள்ளவராக இருப்பதால் நாம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும்போது நம்மை அணைத்துக்கொள்கின்றார். இதனையே யோபுவும், "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது" ( யோபு 5 : 18 ) என்று கூறுகின்றார். 

இப்படித் தேவன் நம்மைத் தண்டிப்பதற்குக் காரணம் அவர் நம்மைத் தனது பிள்ளைகளாக எண்ணி நடத்துவதால்தான். ஆம்,  "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) நாம் நமது பிள்ளைகளைத்தான் தண்டிக்கமுடியும், அடுத்தவர்களது பிள்ளைகளையல்ல. ஆம் அன்பானவர்களே, நாம் அவரது பிள்ளைகளாக இருப்பதால் தேவன் நாம் தவறுசெய்யும்போது நம்மைத் தண்டிக்கின்றார். "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" ( யோபு 5 : 17 ) என ஆலோசனைத் தருகின்றார் யோபு. 

நமது தாய்தந்தையர்கள் நம்மை எப்போதும் தண்டிப்பதில்லை. எது நமக்கு நல்லது என்று அவர்கள் கருத்தினார்களோ அவற்றை நாம் செய்யாதபோது நம்மைத் தண்டித்தார்கள். நாம் குறிப்பிட்டப் பருவவயதை அடைந்தபின்னர் அவர்கள் நம்மைத் தண்டிப்பதில்லை. ஆனால் தேவனோ நாம் அவரது பரிசுத்த இராஜ்ஜியத்துக்குத்  தகுதியுள்ளவர்கள் ஆகும்படி நம்மை நமது வாழ்வின் இறுதிவரைத் தண்டித்து நடத்துகின்றார். இதனையே நாம் எபிரெயர் நிருபத்தில், "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

நமது எல்லாத் துன்பங்களுக்கும் தேவனது தண்டனையே காரணமாக இருக்கமுடியாது. எனினும் நாம் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்போது நாம் நம்மையே நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம். ஆம் அன்பானவர்களே, துன்பங்களால்  அவதிப்படும்போது நாம் கலக்கமடையத் தேவையில்லை. தேவன் துன்பங்கள் வழியாக நமக்கு நன்மையே செய்கின்றார். காரணம், அவரைவிட்டு நாம் விலகிப்போகாமல் இருப்பது துன்பங்களால்தான். 

மனிதர்களது வாழ்வு  பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல் ஒரே மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்குமானால் யாரும் தேவனைத் தேடப்போவதில்லை. துன்பங்களால் அவதிப்படுவோர்களைப் பார்த்துக் கூறப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  எனவே, துன்பநேரங்களில் நமது வாழ்வை ஆராய்ந்துபார்த்துக்  கர்த்தரிடத்தில் திரும்புவோம். ஆம், நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார் எனும் வார்த்தைகளின்படி கிருபையின் தேவன் நம்மை ஆறுதல்படுத்துவார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

"AATHAVAN" Meditation – 1978

July 08, Wednesday 2026

"Come, let us return to the Lord. For He has torn us, but He will heal us; He has wounded us, but He will bandage us." — Hosea 6:1

It is essential to raise children with discipline and correction. Today, most parents do not discipline their children in this manner. In the past, teachers in schools corrected and reformed students who made mistakes. But today, that is not the case; a teacher who disciplines a child faces punishment in court. The social degradation we see today is the result of this. Yes, the Scripture advises us to raise children with correction:

"Do not hold back discipline from the child; although you strike him with the rod, he will not die." — Proverbs 23:13

When children do wrong, good mothers and fathers discipline them. Sometimes, if a mother strikes her child severely, she is the very one who later comforts and fondles that child. God leads us in the same way. The very One who brings discipline also provides us comfort.

Sometimes, our own mistakes and sins may be the cause of our trials and sufferings; they may be the discipline that God sends. However, because our God is merciful and gracious, He embraces us when we repent and seek forgiveness. Job expresses this beautifully:

"For He inflicts pain, and gives relief; He wounds, and His hands also heal." — Job 5:18

The reason God disciplines us like this is because He treats us as His own children. Yes,

"It is for discipline that you endure; God deals with you as with sons; for what son is there whom his father does not discipline?" — Hebrews 12:7

We can only discipline our own children, not the children of others. Yes, dearly beloved, because we are His children, God corrects us when we stray. Job counsels us:

"Behold, how happy is the man whom God reproves, so do not reject the discipline of the Almighty." — Job 5:17

Our parents do not discipline us forever. They corrected us when we failed to do what they considered good for us. Once we reached a certain age, they stopped disciplining us. But God corrects and guides us until the very end of our lives so that we may be worthy of His holy kingdom. We read of this in the Epistle to the Hebrews:

"For they disciplined us for a short time as seemed best to them, but He disciplines us for our good, so that we may share His holiness." — Hebrews 12:10

Not all of our sufferings are caused by God's discipline. Nevertheless, when we face crises, it is essential to examine ourselves and correct our ways. Yes, dearly beloved, we do not need to be troubled when we suffer through afflictions. God works for our good through these trials. Indeed, it is often through suffering that we are kept from wandering away from Him.

If human life were filled only with joy and happiness, free from problems and trials, no one would seek God. Today’s meditation verse is spoken directly to those who are suffering from afflictions. Therefore, in times of trouble, let us examine our lives and return to the Lord. Yes, according to the words—He has torn us, but He will heal us; He has wounded us, but He will bandage us—the God of grace will comfort us.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

" ஆதவன் " தியானம் - 1978 ஜூலை 08, புதன் 2026       "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் ...