Monday, July 27, 2026

🦋 Meditation verse - யோவான் 1 : 12 / John 1:12

"ஆதவன்" தியானம் - 1999

ஜூலை 29 புதன் 2026  


"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )

அப்போஸ்தலரான யோவான் கூறும் இன்றைய தியான வசனத்தினை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். ஆனால் இந்த வசனம் வெறும் வார்தைகளாகவே நம்மில் பலருக்குள்ளும் இருக்கின்றது. இதனைச் செயல்படுத்தும்போது மட்டுமே நாம் இந்த வசனத்தின் உண்மையினை வாழ்வில் உணர்ந்துகொள்ள முடியும். 

கிறிஸ்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள்தான். ஆனால் எல்லோரும் இந்த வசனம் கூறுவதன்படி தேவனுடைய பிள்ளைகளா என்பதுதான் கேள்வி. ஆலயங்களில் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்கள்தான். ஆனால் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளா? 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 )  என்று வேதாகமம் கூறுகின்றது. அதாவது ஒன்றை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம். தேவனிடம் ஏதாவது ஒன்றினை எதிர்பார்த்து வேண்டுதல் செய்வதும், அதற்காகவே ஆலயங்களுக்குச் செல்வதும் முழுமையான தேவன்மேல் கொள்ளும் விசுவாசம் என்று கூறிட முடியாது. இன்றைய வசனத்தின்படி, தேவன் அப்படிச் செல்பவர்கள்  அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. 

தேவன்மேல் விசுவாசமுள்ள ஆவிக்குரிய மனிதன் அவரையே வாழ்வில் அடைந்துகொள்ள நாடுவான். மட்டுமல்ல, அத்தகைய மனிதன் தனது சுய சித்தத்தை மறந்து தேவனையுடைய சித்தத்துக்கும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பான். இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8 : 14 ) என்று கூறுகின்றார். 

நூறு சதவிகிதம் உலக ஆசையினையும் உலகத் தேவைகளையும் உள்ளத்தில் சுமந்துகொண்டு ஆலயங்களில் வந்து கைகளைத்தட்டிப் பாடுவது தேவனைத் தேடுவது ஆகாது. வாழ்வின் முழு நேரத்தையும் உலகத்தோடு ஒத்து வாழ்ந்துவிட்டு ஒரு சில மணிநேரம் ஆராதனை எனும் பெயரில் பாடல்பாடி, ஆர்ப்பரிப்பது தேவனைத் தேடுவது ஆகாது. இத்தகைய செயல்பாடுகள் இன்றைய வசனம் கூறும் அவருடைய நாமத்தின்மேல் உள்ள  விசுவாசமல்ல; இப்படிச் செய்வது அவரை நாம் ஏற்றுக்கொண்டோம் என்பதாகாது.  

இஸ்ரவேலில் நிக்கொதேமு எனும் போதகன் இப்படித்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ மக்களைப்போல இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் இருந்தது. அவன் யூதர்களுக்குப் பயப்பட்டதால் இரவுவேளையில் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தான். "அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 2, 3 )

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது, அவரைத்தேடி வருவது மட்டும் போதாது. இயேசு கிறிஸ்து குறிப்பிடுவதுபோல நாம் மறுபடி பிறக்கவேண்டும். பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவமன்னிப்பைப் பெறவேண்டும். அப்போது மட்டுமே நாம் அவரது பிள்ளைகளாக முடியும். இப்படி  பாவமன்னிப்பைப்பெற்று அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு தேவன் அதிகாரங்கொடுத்துள்ளார்.  இந்த அதிகாரத்தை பெறுவதற்கு இன்றே முயற்சியெடுப்போம்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

"AATHAVAN" Meditation – 1999

July 29, Wednesday, 2026

"But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:" — John 1:12

We have read today’s meditation verse, spoken by the Apostle John, many times. However, for many of us, this verse remains merely words. Only when we put it into practice can we experience the truth of this verse in our lives.

All Christians are believers in Christ. But the question is whether everyone is a child of God according to what this verse says. Those who participate in church services and those who attend prayer meetings are all people who believe in the name of Christ. But is everyone a child of God?

The Bible says:

"Now faith is the substance of things hoped for, the evidence of things not seen." — Hebrews 11:1

That is to say, if we believe in something, it is necessary to stand firm in that faith. Expecting something from God, making supplications for it, and going to church solely for that purpose cannot be called complete faith in God. According to today’s verse, God has not given power to all who go in such a manner to become the children of God.

A spiritual person who has faith in God will seek to possess Him alone in life. Furthermore, such a person will forget their self-will and yield themselves to the will of God and the guidance of His Spirit. It is regarding this that the Apostle Paul says:

"For as many as are led by the Spirit of God, they are the sons of God." — Romans 8:14

Carrying a hundred percent worldly desires and worldly needs in one's heart, coming to church, clapping hands, and singing is not truly seeking God. Living in conformity with the world all through life and then singing songs and shouting under the name of worship for a few hours is not seeking God. Such actions are not faith in His name as spoken of in today’s verse; doing this does not mean we have received Him.

In Israel, a teacher named Nicodemus was just like this. However, like most Christian people today, he had faith in Jesus Christ. Because he feared the Jews, he came seeking Jesus Christ at night.

"The same came to Jesus by night, and said unto him, Rabbi, we know that thou art a teacher come from God: for no man can do these miracles that thou doest, except God be with him. Jesus answered and said unto him, Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God." — John 3:2–3

Yes, dearly beloved, having faith in Jesus Christ and seeking Him out is not enough. As Jesus Christ points out, we must be born again. We must die to sin and live unto righteousness. We must yield ourselves completely to Christ and receive the forgiveness of sins. Only then can we become His children. To all who have received forgiveness of sins, believed on His name, and received Him, God has given power to become the children of God. Let us make every effort today to receive this power.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யோவான் 1 : 12 / John 1:12

" ஆதவன் " தியானம் - 1999 ஜூலை 29 புதன் 2026    "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை ப...