Thursday, October 27, 2022

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

 ஆதவன் 🖋️ 639 ⛪ அக்டோபர் 28,  2022 வெள்ளிக்கிழமை

"சிலர் இரதங்களைக்குறித்தும்சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." (  சங்கீதம் 20 : 7 )

பெருமை பாராட்டுவது பலருக்கு அல்வா சாப்பிடுவதுபோல அவ்வளவு இன்பமாய் இருக்கின்றது. தங்களது சொத்து, பதவி, அழகு அந்தஸ்து இவைகளைக்குறித்து பெருமைகளைப் பேசுவதும் இவை எதுவும்  தற்போது இல்லாதவர்கள் தங்களது பூர்வீக பெருமைகளைப்  பேசி  "எங்க தாத்தா நூறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார், மோட்டார் கிணறு, கார், ஆடு, மாடு, வேலைக்காரர்கள்  இவைகளுடன் குட்டி ராஜா போல வாழ்ந்தார்"  என்று கூறுவதிலும் அற்ப பெருமை காண்கின்றனர். இவர்கள் பேசுவதில் பாதியும் பொய்யாக இருந்தாலும் அப்படிப் பேசுவதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

வேதாகமம் எழுதப்பட்டக் காலங்களில் இப்போதுள்ளதுபோல வாகனங்கள் கிடையாதுபோக்குவரத்துக்கு  மிருகங்களையே அவர்கள் நம்பி இருந்தனர்ஏழைகள் வசதி குறைந்தவர்கள் கழுதைகளைப் பயன்படுத்தினர்கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒட்டகங்களையும்குதிரைகளையும் பயன்படுத்தினர்பிரபுக்களும் அரச குடும்பத்தினரும் ரதங்களைப் பயன்படுத்தினர்இப்போது சொந்தக் கார் வைத்திருப்பவர்களைப்  போல குதிரைகளையும் ரதங்களையும் வைத்திருப்பவர்கள் இருந்தனர்வசதி படைத்தவர்கள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்டக் குதிரைகளும் ரதங்களும் இருந்தனஅது அவர்களுக்குப் பெருமைக்குரிய காரியமாக இருந்தது.

தேவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தாவீது ராஜா இத்தகைய மனிதர்களது பெருமைப் பேச்சுக்களைக் கேட்டுள்ளதால் இப்படிக் கூறுகின்றார்நீங்கள் உங்களது செல்வச் சிறப்புகளை எண்ணிப் பெருமை பாராட்டுங்கள்நாங்களோ தேவனை அறிந்திருப்பதை நினைத்தே பெருமைப்படுவோம்.

ஆம், தேவனை அறியும் அனுபவம் மிக உன்னதமான அனுபவம்அது வெறும் ஜெபத்தினாலோவேதம் படிப்பதாலோஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதாலோஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலேயோ கிடைத்திடாதுஒருவர் வேதாகமக் கல்லூரியில் பல ஆண்டுகள் படித்துக் குருவாக ஆகிவிட்டதால் அவர் தேவனை அறியும் அறிவினைப் பெற முடியாதுஅவர்கள் தேவனைப் பற்றி வேண்டுமானால் அறியலாம்.

வேதாகமம் முழுவதும் படித்துப் பார்த்தால் அனைத்து இடங்களிலுமே "தேவனை அறியும் அறிவுஎனும் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்குமே தவிர "தேவனைப் பற்றி அறியும் அறிவுஎன்று குறிப்பிடப்பட்டிருக்காது.

அன்பானவர்களே ! நாம் ஒருவேளை இன்று வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் இருக்கலாம்ஆனால்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் உடையவர்களாகி ,  மீட்பின் அனுபவம் பெற்றிருந்தோமானால் அந்தத் தேவனை அறியும் அறிவு,  செல்வங்கள் தரும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை நமக்குக் கொண்டு வரும்எனவேதான் தாவீது கூறுகிறார், " அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும்அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்."( சங்கீதம்4:7)

ஆம்மீட்பு அனுபவத்தைப் பெற்றிருப்பவர்கள் உலக செல்வதில் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்ஆனால் தங்களிடம் அதிக பொருள் இருப்பதால் பெருமை அடைந்து தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வோர் பரிதபிக்கத்தக்கவர்கள்.  எனவேதான் ஏசாயா தீர்க்கதரிசி,

"
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும்கர்த்தரைத் தேடாமலும்எகிப்துக்குப்போய்குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்துஇரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடிகுதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா31:1) என்று குறிப்பிடுகிறார்

செல்வங்கள், சொத்துக்கள் நமது பெருமைக்குரிய காரியங்கள் அனைத்தையும் பெருமையாக எண்ணாமல் இஸ்ரவேலின் பரிசுத்தரான கர்த்தரை அறியும் அறிவையே மேன்மையாகப் எண்ணுவோம். அந்த அறிவு இல்லாதவர்கள் எவ்வளவு உலகச் செல்வங்களைப் பெற்றிருந்தாலும் ஒன்றுமில்லாதவர்களே. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

No comments: