'ஆதவன்' 💚அக்டோபர் 26, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,357
"அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4 : 19) / "We love him, because he first loved us." (1 John 4: 19) தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747. 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India
Monday, October 21, 2024
தேவ சித்தம்.
Sunday, October 20, 2024
ஆமென் (Amen)
'ஆதவன்' 💚அக்டோபர் 25, 2024. வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,356
வாழ்வின் நிகழ்வுகளுக்கு நமது செயல்பாடுகளே காரணம்
'ஆதவன்' அக்டோபர் 24, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,355
Saturday, October 19, 2024
எல்லோருக்குள்ளும் ஒரே பிதா
'ஆதவன்' 💚அக்டோபர் 23, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,354
"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது". (எபேசியர் 4: 5 - 7 )
தங்களுக்குச் சொந்த விசுவாசமில்லாமல் எதெற்கெடுத்தாலும் ஊழியர்களைத் தேடி ஓடும் பல கிறிஸ்தவர்களை நாம் உலகில் பார்க்கின்றோம். இந்தக் கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற ஊழியர்களை வானத்திலிருந்து வந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தங்களுக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளை மதிப்பதில்லை. இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுவது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது.
ஊழியர்களுக்கென்றும் விசுவாசிகளுக்கென்றும் தனித்தனி பிரிவான கர்த்தரும், விசுவாசமும், ஞானஸ்நானமும் இல்லை. மாறாக, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். அதாவது, ஒரே தேவன்தான் நம் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்புரிகின்றார்.
ஆனால் அடுத்ததாக பவுல் அப்போஸ்தலர் இந்த வசனத்தில் கூறுகின்றார், "கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று. அதாவது தேவ கிருபை ஆளாளுக்கு வித்தியாசமாகச் செயல்படும். அது கிறிஸ்து பகிர்ந்து கொடுப்பது. மற்ற ஊழியர்களைப்போலவோ மற்ற விசுவாசிகளைப்போலவோ நாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டாத தேவன் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் ஏற்ற கிருபையளிப்பார்.
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூற விரும்பும் காரியங்கள்:-
வெவ்வேறு கர்த்தரல்ல ஒரே கர்த்தர்தான் உண்டு. எனவே இங்கு அங்கு என அலையவேண்டாம். விசுவாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; வேதம் கூறுவதை விசுவாசிக்கவேண்டும். ஒரே தேவன் எல்லோருக்குள்ளும் இருப்பதால் எல்லோரையும் மதிக்கவேண்டும். கிறிஸ்துவினுடைய விருப்பப்படி அவர் அவனவனுக்குக் கிருபை அளிக்கின்றார்.
இப்படியிருப்பதால் "மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்." ( எபேசியர் 4 : 2, 3 ) என்று இன்றைய தியான வசனத்தின் முன் குறிப்பிடுகின்றார்.
கிறிஸ்துவின் முன்பு நாம் அனைவரும் ஒன்றுதான். விசுவாசி, ஊழியன் என்று இல்லை. எனவே குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் அன்பு செய்யாமல் நமக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளையும் அன்புசெய்து சமாதானத்தோடு ஒருமைப்பாட்டுடன் நாம் வாழவேண்டும். ஆனால் இந்த உணர்வில்லாததால் அடுத்த வீட்டில் உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் இருந்தாலும் ஐந்துகாசுகூட உதவி செய்யாத பலர் தொலைவிலிருக்கும் ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை அனுப்பிவைக்கின்றனர்.
அன்பானவர்களே, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் தான் உண்டு; அவரே எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்ற உணர்வோடு வாழ்வோம்.
Friday, October 18, 2024
ஆகாயத்தில் சிலம்படித்தல்
'ஆதவன்' அக்டோபர் 22, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,353
"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26 )
ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.நமது நோக்கத்தைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்வு அமையும். அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு நிச்சயம் வேண்டும். இந்த வாழ்க்கைக்குப் பின்னர் முடிவில்லாத நித்திய ஜீவன் உள்ளது. அதனைப் பெறுவதே நமது இலக்காக இருக்கவேண்டும்.
இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் இதுகுறித்து எந்த நிச்சயமும் கிடையாது. ஆவிக்குரிய காரியங்கள் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பக்தி முயற்சிகளைச் செய்கின்றனர். பல்வேறு பக்தி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய எண்ணமோ ஆவிக்குரிய அறிவோ இவர்களுக்கு இருப்பதில்லை.
இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." என்று. அதாவது மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறார்.
ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதல் பரிசைப்பெறவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். அதுபோலவே சிலம்பம் பண்ணும்போது வெறுமனே ஆகாயத்தில் சிலம்பக்கம்பைச் சுழற்றிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எதிலும் ஒரு நோக்கம் வேண்டும்.
அந்த நோக்கம் நமக்கு இருக்குமானால் நாம் அதற்காக சில முயற்சிகளும் பயிற்சிகளும் எடுத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பயிற்சியில்லாமல் திடீரென்று மைதானத்தில் ஓடி பரிசுபெற முடியாது. அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற சில பயிற்சிகள் நமக்குத் தேவை, சில ஒறுத்தல்கள் தேவை.
"பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 )
ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்யும் செயல்கள், நமது எண்ணங்கள் எதனை இலக்காகக் கொண்டு செய்யப்படுகின்றன என்று சிந்திப்போம். நிச்சயமில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை அர்த்தமில்லாதது. நான் நிச்சயமில்லாதவனாக இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை. ஆகாயத்தில் சிலம்படிப்பவனாக வாழவில்லை மாறாக, மேலான மறுவுலக வாழ்க்கை எனக்கு உண்டு எனும் நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடருகின்றேன் என்று அப்போஸ்தலரான பவுலைப்போல தெளிவோடு வாழ்வோம்.
லீதியாள் கற்றுத்தரும் பாடம்
'ஆதவன்' 💚அக்டோபர் 21, 2024. திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,352
Thursday, October 17, 2024
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக
'ஆதவன்' அக்டோபர் 20, 2024. ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,351
மீன் வயிற்றிலே யோனா
'ஆதவன்' 💚அக்டோபர் 19, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,350
Wednesday, October 16, 2024
தேவனுடைய ராஜ்யம்
'ஆதவன்' அக்டோபர் 18, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,349
நித்திய வழியிலே என்னை நடத்தும்
'ஆதவன்' 💚அக்டோபர் 17, 2024. வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,347
Tuesday, October 15, 2024
கட்டளைகளைக் கடைபிடிப்பது எப்படி?
'ஆதவன்' 💚அக்டோபர் 16, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,346
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Monday, October 14, 2024
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு
'ஆதவன்' அக்டோபர் 15, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,345
"உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )
நமது தேவன் உன்னதமான பரலோகத்தில் இருக்கின்றார் என்பதனை நாம் அறிவோம். இந்த தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்கள் மத்தியில் குடியிருந்து மோசேயிடமும் இதர ஆசாரியார்களிடமும் பேசி வழிநடத்தினார். இதே பரிசுத்த தேவன் கூறுகின்றார், "நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்று.
இயேசு கிறிஸ்து கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) அதாவது நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக, பணித்த இதயம் உள்ளவர்களாக வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தில் வந்து குடியிருப்பார். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்று கூறுகின்றார். அதாவது, பணிந்த உள்ளம் தேவனது ஆலயம்.
இப்படி அவர் வந்து மனிதர்கள் இதயத்தில் குடியிருக்கும் காரணத்தையே இன்றைய தியான வசனத்தில் ஏசாயா, "பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்" என்று கூறுகின்றார். பணிந்த இதயமுள்ளவர்கள் பணிந்தவர்களாகவே இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பவில்லை. அதுபோல நொறுங்கிய இதயம் எப்போதும் நொறுங்கியே இருக்கவேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை. அவை புத்துயிர் பெறவேண்டுமென்று தேவன் விரும்புவதால் அப்படி வந்து குடியிருக்கிறார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Friday, October 11, 2024
கிறிஸ்துவின் கிருபை
அக்டோபர் 14, 2024 , திங்கள்கிழமை. 💚 வேதாகமத் தியானம் - எண்: 1344
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 )
தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர்; கடுமையாக உழைக்கின்றனர். ஒருமுறை 80 வயதில் பனையேறும் ஒரு முதியவரைச் சந்தித்தேன். இந்தத் தள்ளாடும் வயதிலும் அவர் தனது குடும்பத்துக்காக உழைக்கின்றார். இதுவரைத் திருமணமாகாத தனது மகளை நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமெல்லாம். இதுபோலவே கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காக தியாகம் செய்கின்றனர் பல பெற்றோர்கள்.
இதுபோலவே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். எப்படி ஒரு தாய் தனது பிள்ளைக்காக தியாகம் செய்வாளோ அதுபோல அவர் மிகப்பெரிய தியாகம் செய்தார்.
"அவர் தேவனுடைய* ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்* சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 )
அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் அந்த முதியவர் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உழைத்தார். ஆனால் கிறிஸ்து இயேசுவோ எல்லாம் இருந்தும் நமக்காகத் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றினார். இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?
வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப் பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன் வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்?
அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவே வேதனைப்படுவார். நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.
அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன். என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்