Sunday, February 01, 2026

🦋 Meditation verse - பிரசங்கி 5: 1 / Ecclesiastes 5:1

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1823
🔆 ஆதவன் 03.02.2026 செவ்வாய் 


"நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்." ( பிரசங்கி 5: 1)

நம்மில் பெரும்பாலானவர்கள் "ஞாயிறு கிறிஸ்தவர்களாக" இருக்கின்றோம். மட்டுமல்ல, ஆலய வழிபாடுகளுக்கு முன்னுரிமைகொடுத்து அதுவே கிறிஸ்தவவாழ்வு என நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம். இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  

ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளுமுன் நமது நடைமுறைகள் தேவனுக்கு ஏற்புடையவைகளாக மாறவேண்டியது அவசியம். அதனையே, "நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, அப்படித்  தேவனுக்கு  ஏற்புடையவர்களாக வாழாமல் வெறுமனே ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வது மூடத்தனம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.

இதனையே, "மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, மூடனைப்போல பலிசெலுத்த ஓடாதே முதலில் தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடு என்று இந்த வசனம் கூறுகின்றது. 

கர்த்தருக்கு எதிரானச்  செயல்பாடுகளில் ஈடுபட்டுக்  கர்த்தருக்குப் பலி செலுத்திய சவுலைபார்த்து சாமுவேல் கூறினார், "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." (1 சாமுவேல் 15: 22) ஆம் அன்பானவர்களே, ஆலயங்களுக்குச் சென்று பலியிடுவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிதலும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படிவதும்தான் முக்கியம். 

இன்றைய தியான வசனம் இறுதியாகச் சொல்கின்றது, "தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்" என்று. அதாவது மனிதர்கள் இப்படித் தேவனது வார்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்துகொண்டு ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வது   தீமையென்று அறியாதிருக்கிறார்கள். இன்று ஆலயத் திருவிழாக்கள், ஆசனப்பண்டிகைகள், ஆலயப்  பிரதிஷ்டைப் பண்டிகைகள்  நடைபெறும் விதத்தையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் பணபலம் படைத்தவர்களது செயல்பாடுகளையும் பார்க்கும்போது இது விளங்கும். ஆம், இவர்கள் தாங்கள் செய்கிறது தேவனுக்கு எதிரான தீமையான காரியம் என்று அறியாதிருக்கிறார்கள்; மட்டுமல்ல, தேவானையும் தங்களைப்போன்ற ஒருவராக எண்ணிக்கொள்கின்றனர் என்பது விளங்கும்.

"ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச்  செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து." (மத்தேயு 5;23,24) காணிக்கை மட்டுமல்ல, தேவனுக்குமுன் வரும்போது இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்வூட்டுவதாக இருக்கவேண்டும்; தேவனுக்குமுன் மனத்தாழ்மை அவசியம்.  எனவே அன்பானவர்களே, தேவாலயத்துக்குப் போகுமுன் முதலில் நமது நடைமுறைகளை அவருக்கு ஏற்றதாக மாற்றுவோம். மூடர்களைப்போல அல்லாமல் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பவர்களாக இருந்துகொண்டு ஆராதனைகளிலும் ஆலய காரியங்களிலும் கலந்துகொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      

“Within the Seeds” 🌳

📖 Scripture Meditation – No. 1823
🔆
AATHAVAN – Tuesday, 03.02.2026

“Guard your steps as you go to the house of God and draw near to listen rather than to offer the sacrifice of fools; for they do not know they are doing evil.” (Ecclesiastes 5:1)

Most of us have become what can be called “Sunday Christians.” We give priority to church attendance and deceive ourselves into thinking that this alone constitutes the Christian life. Today’s meditation verse clearly teaches us that such practices are not pleasing to God.

Before participating in church worship, our daily conduct and lifestyle must become acceptable to God. That is precisely why the verse says, “Guard your steps as you go to the house of God.” Merely attending worship services without living a God-pleasing life is described in this verse as foolishness.

Therefore, Scripture declares:

“Draw near to listen rather than to offer the sacrifice of fools.” (Ecclesiastes 5:1b)

In other words, do not rush to offer sacrifices like a fool; instead, first listen attentively to the Word of God. This verse emphasizes obedience over outward religious acts.

When Saul offered sacrifices while engaging in actions contrary to the will of the Lord, the prophet Samuel rebuked him, saying:

“Has the LORD as much delight in burnt offerings and sacrifices. As in obeying the voice of the LORD? Behold, to obey is better than sacrifice, And to heed than the fat of rams.” (1 Samuel 15:22)

Yes, beloved, obedience to God and submission to His Word are far more important than merely going to the temple and offering sacrifices.

Finally, today’s meditation verse concludes by saying:

“For they do not know they are doing evil.” (Ecclesiastes 5:1c)

This means that people often do not realize that participating in religious activities while disobeying God’s Word is itself an evil act. When we observe the manner in which temple festivals, Asanam Festivals, and church dedication ceremonies are conducted today—especially the dominance of those wielding financial power—this truth becomes evident. Such people fail to recognize that what they are doing is contrary to God’s will. Worse still, they assume that God is just like one of them.

Jesus warns us clearly:

“Therefore, if you are presenting your offering at the altar, and there remember that your brother has something against you, leave your offering there before the altar and go; first be reconciled to your brother, and then come and present your offering.” (Matthew 5:23–24)

These words of Jesus should deeply convict us—not only regarding offerings, but about how we approach God. Humility before God is essential.

Therefore, beloved, before going to the house of God, let us first align our conduct with His will. Let us not be like fools, but instead be those who listen to His Word, and then participate meaningfully in worship and church activities.

God’s Message: - Bro. M. Geo Prakash

No comments: