"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1824
🔆 ஆதவன் 04.02.2026 புதன்
"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1)
நேற்றைய தியானத்தில் நாம் தேவாலயத்துக்கு எந்த மனநிலையுடன் ஆராதனை செய்யச்செல்லவேண்டும் என்று பார்த்தோம். இன்றைய தியான வசனம், எது புத்தியுள்ள தேவன் விரும்பும் ஆராதனை என்பதை விளக்குவதாக உள்ளது.
ஆலயத்தில் வந்து ஆர்ப்பரித்துப் பாடுவதும், கூக்குரலிட்டு ஜெபிப்பதும் பிரசங்கங்களைக் கேட்பதும்தான் தேவனை ஆராதிப்பது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். இன்று பல்வேறு திருச்சபைச் சபைப்பிரிவுகளும் பல்வேறு விதமாக தேவனை ஆராதிக்கின்றனர். இவற்றில் எது சரி, எது தவறு என்பதை நாம் பார்க்கப்போவதில்லை. மாறாக, எப்படி நாம் தேவனை ஆராதித்தாலும் ஆராதிக்கும் மனிதனிடம் அவர் முதலில் என்ன விரும்புகின்றார் என்பதையே நாம் பார்க்கப்போகின்றோம்.
நாம் எந்த முறையில் தேவனை ஆராதித்தாலும் முதலில் ஆராதிக்கும் நாம் தூயவர்களாக இருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அதாவது, நாம் நமது உடல் உறுப்புகளால் பாவம் செய்யாதவர்களாக இருந்துகொண்டு தேவனை ஆராதிக்கவேண்டும். இதனையே, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்" என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.
பலரும் உடல் தூய்மை என்றதும், ஆலயத்துக்குச் செல்லுமுன் குளித்து, சுத்தமாக இருப்பது என்று எண்ணுகின்றனர். குளிக்கவேண்டியது அவசியம்தான், ஆனால் நமது உடல் உறுப்புக்கள் பாவமற்றதாக இருக்கவேண்டியது அதனைவிட முக்கியம். கரங்களாலும், நாவினாலும் பல்வேறு பாவங்களைச் செய்துவிட்டு காலையில் ஆலயத்துக்குச் சென்று ஆராதிப்பதில் அர்த்தமில்லை. இரவு முழுவதும் திரைப்படங்களையும் ஆபாசப்படங்களையும் பார்த்து கண்களைப் பாவத்தில் வைத்துக்கொண்டு ஆலயங்களில் சென்று பரவசப்படுவதில் அர்த்தமில்லை.
எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" ( ரோமர் 12: 2) என்று. உலக மனிதர்கள் இப்படி வாழலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் அவனைப்போல வேஷம் போடக்கூடாது. தேவனை ஆராதிப்பவர்கள் தேவனுடைய சித்தம் அறிந்தவர்களாக, மனம் புதிதானவர்களாக மாறவேண்டியது அவசியம். அதன்பின்னரே நாம் தேவனை ஆராதிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம்.
"இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை" என்கின்றார் பவுல். அதாவது, இப்படி இல்லாத ஆராதனைகள் புத்தியில்லாத ஆராதனைகள் என்று பொருள். அன்பானவர்களே, நாம் ஒருவேளை இதுவரை புத்தியில்லாத ஆராதனை செய்தவர்களாக இருந்திருக்கலாம். அதற்காக தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம். நமது உடலால் செய்த பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம். இதுமுதல் புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக மாறுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
📖 Scripture
Meditation – No. 1824
🔆 AATHAVAN |
Wednesday, 04.02.2026
“Therefore, I urge
you, brothers and sisters, by the mercies of God, to present your bodies as a
living and holy sacrifice, acceptable to God, which is your spiritual service
of worship.” (Romans 12:1)
In yesterday’s meditation,
we reflected on the attitude of heart with which we should go to the house of
God to worship. Today’s meditation verse clearly explains what kind of worship
God considers reasonable and acceptable.
Many people assume that
worshiping God simply means coming to church, singing loudly, shouting in
praise, praying fervently, and listening to sermons. Today, different
denominations worship God in different ways. We are not going to debate which
form is right or wrong. Instead, we are going to look at what God desires first
from the person who worships Him, regardless of the form of worship.
Today’s meditation teaches
us that no matter how we worship God, the worshiper must first be holy. That
is, we must worship God while keeping our bodily members free from sin. This is
exactly what the Apostle Paul emphasizes when he says, “present your bodies
as a living and holy sacrifice, acceptable to God” (Romans 12:1, NASB).
Many people think that
bodily purity simply means bathing and being physically clean before going to
church. Bathing is certainly necessary, but it is far more important that our
bodies are not instruments of sin. There is no meaning in committing sins with
our hands and tongue and then going to the church in the morning to worship.
Likewise, there is no value in spending the night watching movies and obscene
content, allowing our eyes to dwell in sin, and then entering the house of God
seeking emotional excitement.
That is why, in the very
next verse, the Apostle Paul says:
“And do not be conformed to
this world, but be transformed by the renewing of your mind, so that you may
prove what the will of God is, that which is good and acceptable and perfect.” (Romans
12:2)
People of the world may live
this way, but a spiritual person must not imitate them. Those who worship God
must be people who understand God’s will and whose minds are renewed. Only then
do we become worthy to worship God.
Paul concludes by saying, “which
is your spiritual service of worship.” In other words, any worship that
does not meet this standard is unreasonable worship. Dearly beloved, perhaps we
may have practiced such unreasonable worship until now. Let us ask God for
forgiveness. Let us confess the sins committed through our bodies and seek His
mercy. Let us present our bodies as a living and holy sacrifice, pleasing to
God. From this day onward, let us become people who offer true and reasonable
worship.
God’s Message – Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment