Thursday, February 05, 2026

🦋 Meditation verse - யோபு 31: 1 / Job 31:1

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 வேதாகமத் தியானம் - எண் 1829
🔆 ஆதவன் 09.02.2026 திங்கள்      


"என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?"( யோபு 31: 1)

இன்று காதல் எனும் பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் இளைஞர்களும் இளம் பெண்களும் சீரழிந்துகொண்டிருக்கின்றனர். காரணம், அவர்கள் தங்கள் கண்களால் காண்பவை தங்களுக்கு பூரண நன்மைதரும் என்று மனதினில் எண்ணுகின்றனர். வெளி அழகினைப் பார்த்து தங்கள் உள்ளங்களை எதிர்பாலரிடம் பறிகொடுத்து பலவேளைகளில் அல்லல்படுகின்றனர். இன்றைய வசனம் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் சிந்தனைக்குரிய வசனம். 

பக்தனான யோபு  தன் கண்களால் அழகிய பெண்களையல்ல, தேவனைக் காண்பதிலேயே தனது ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அதனால் பரிசுத்தமான பார்வை தனக்கு வேண்டும்; தேவனைத் தவிர வேறு எதனையும் பார்க்கமாட்டேன்; எதன்மேலும் ஆசைகொள்ளமாட்டேன்  என உடன்படிக்கைப்  பண்ணிக்கொண்டார். இப்படி இருந்ததால் ஒருநாளில் தனது கண்களால் தேவனைப் பார்ப்பேன் என உறுதியாக நம்பினார். அவரது எண்ணமெல்லாம் அதுவாகவே இருந்தது. ஆம்,  இளைஞர்களும்  இளம் பெண்களும் காதலால் சோர்ந்துபோவதுபோல யோபு தேவனின் நினைவால் சோர்ந்துபோனார். 

எனவேதான் அவர் கூறுகின்றார், "அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது." ( யோபு 19: 27) என்கின்றார் அவர். இதுவே அவரது உடன்படிக்கை. அதாவது, என் கண்களை நான் பரிசுத்தமாகக் காத்துகொள்வேனென்றால் தேவன் எனக்குத் தரிசனமாவார் என்று நம்பினார். அவரது அந்த ஆசை வீணாகவில்லை. தேவன் அவருக்குத் தரிசனமானார். "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது." ( யோபு 42: 5) என்கின்றார் யோபு.

இளைஞர்களுக்கு மட்டுமல்ல,  பெரியோர்களுக்கும் இன்றைய தியான வசனம் பொருந்தும். இன்று ஆபாச படங்களும் வீடியோ காட்சிகளும் எளிதில் காணக்கிடைப்பதால் பெரியோர்களும்கூட இவற்றின் கவர்ச்சியில் கவரப்பட்டு கண்களின் பாவத்தில் விழுகின்றனர். அன்பானவர்களே, இப்படி உலகக் கவர்ச்சியில் மயங்கியும் உலக மனிதர்களிடம் காதல் கொண்டும்  அலைவோமானால், "அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?" ( யோபு 31: 2) கிடைக்காது. 

அன்பான இளம் வாலிபர்களே, வாலிபப் பெண்களே, யோபுவைப்போல கண்களை  பரிசுத்தத்தை மட்டுமே காணவேண்டுமென்று  தேவனோடு உடன்படிக்கைபண்ணி வாழும்போது மட்டுமே நாம் உலகக் கவர்ச்சிக்குத் தப்பிடமுடியும். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் மட்டுமே நமக்குக் கவர்ச்சியாகத் தெரிவார். என் கண்களோடே தேவனுடன் உடன்படிக்கைப்பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் அல்லது ஒரு இளைஞன்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? எனும் எண்ணம் வெளிப்படும். 

உன்னதப்பாடல் ஆசிரியர் தேவனை ரசித்து அவரது அழகால் கவரப்பட்டுப் பாடுகின்றார்:-  "அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்." ( உன்னதப்பாட்டு 5: 16) ஆம், நமது கண்களோடு தேவனுடன் உடன்படிக்கைச் செய்யும்போது மட்டுமே நாமும் இப்படிப் பாடிடவும்; பரிசுத்த வாழ்க்கைவாழவும்  பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                             

“Within the Seeds” 🌳

📖 Scripture Meditation – No. 1829
🔆
AATHAVAN – Monday, 09.02.2026

“I have made a covenant with my eyes; How then could I look at a virgin?” (Job 31:1)

Today, in the name of love, many young men and young women are being morally ruined by mere physical attraction. The reason is that they assume what they see with their eyes will bring them complete happiness. By being captivated by outward beauty, they surrender their hearts to the opposite gender and often end up in distress. Today’s verse is a thought-provoking Scripture for both young men and young women.

The godly Job was not interested in gazing at beautiful women with his eyes, but rather in seeing God. Therefore, he desired to maintain a pure vision and made a covenant saying that he would not set his eyes or desires upon anything other than God. Because of this, he firmly believed that one day he would see God with his own eyes. All his thoughts were cantered on that hope. Yes, just as many young men and women grow weary because of romantic love, Job grew faint because of his longing for God.

That is why he declared, “Whom I myself shall behold, and whom my eyes will see and not another. My heart faints within me!” (Job 19:27)

This was his covenant. He believed that if he preserved the purity of his eyes, God would grant him His divine vision. His desire did not go in vain. God revealed Himself to him. Job testified, “I have heard of You by the hearing of the ear; But now my eye sees You.” (Job 42:5)

This meditation verse is not only for the youth but also for adults. Today, obscene pictures and video content are easily accessible, and even adults are often drawn into their temptation, falling into the sin of the eyes. Beloved, if we wander in worldly attractions and develop love for worldly pleasures, can we receive God’s portion and inheritance? Certainly not. As Job asks, “And what is the portion of God from above or the inheritance of the Almighty from on high?” (Job 31:2)

Dear young men and young women, only when we make a covenant with God, like Job, to allow our eyes to behold purity alone, can we escape worldly temptations. When we surrender ourselves to God, He alone will become our true attraction. Then the thought will arise within us: “If I have made a covenant with my eyes before God, how could I look lustfully upon a young woman or a young man?”

The writer of the Song of Songs, being captivated by God’s beauty, sings:

“His mouth is full of sweetness. And he is wholly desirable. This is my beloved and this is my friend, O daughters of Jerusalem.” (Song of Songs 5:16)

Yes, only when we make a covenant with God concerning our eyes can we sing like this and live a holy life. The Holy Spirit will help us to live in purity.

Divine Message: Bro. M. Geo Prakash
      

No comments: