"விதைகளின் உள்ளே" 🌳
ஆதியில் ஏதேன் தோட்டத்தில் பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் தனது தந்திரமான வார்த்தைகளினால் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசித் தான் சொல்லுவதுதான் சரி என்று அவளை நம்பச் செய்தது. இதுபோல, கிறிஸ்துவின் உண்மையான சுவிசேஷத்துக்கு முரணாக போதிக்கும் உபதேசங்களைப் பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார்.
கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான். மேலும், வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம்.
ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள் கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே, "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்", (2 கொரிந்தியர் 11: 4) அது சாத்தானின் உபதேசம்.
புதிய ஏற்பாட்டின்படி நமது உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாகப் பாதுகாத்து உயிருள்ள ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல்படி. ஆனால், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம். உலகப் பொருள் ஆசீர்வாதத்தையே தேவ ஆசீர்வாதம் எனப் போதிப்பது சாத்தானின் உபதேசம்.
இதுபோலவே, "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே." (1 தீமோத்தேயு 2: 5) என்று வேதம் கூறியிருக்க, வேதம் கூறாத மத்தியஸ்தர்களாக புனிதர்களைக் காண்பிப்பது சாத்தானின் உபதேசம்.
ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள். "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்த்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.
தேவன் கூறியதற்கு முரணாக சாத்தான் போதித்தது. இதனை, "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3: 4, 5) என்று வாசிக்கின்றோம்.
இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.
அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள் இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பணத்தால் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான்.
தேவனுடனான நமது தனிப்பட்ட உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும். ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும்.
“Within the Seeds” 🌳
📖 Scripture
Meditation – No. 1842
🔆AATHAVAN - Sunday
– 22.02.2026
“But I am afraid that, as
the serpent deceived Eve by his craftiness, your minds will be led astray from
the simplicity and purity of devotion to Christ.” — 2 Corinthians 11:3
In the beginning, in the
Garden of Eden, Satan came in the form of a serpent and deceived Eve through
his crafty words. He twisted the Word of God and made her believe that what he
said was right.
In the same way, the Apostle
Paul compares teachings that contradict the true Gospel of Christ to Satan’s
deceptive doctrine.
Any teaching that becomes a
hindrance to faith in Christ, or that prevents believers from developing
genuine love for Christ, is a deceptive doctrine of Satan. Furthermore,
preaching a Christ who is not revealed in Scripture is also Satan’s deception.
At times, such teachings may
attract large crowds. Yet, they proclaim another Christ. As Scripture says:
“For if one comes and
preaches another Jesus whom we have not preached, or you receive a different
spirit which you have not received, or a different gospel which you have not
accepted—you bear this beautifully.” — 2 Corinthians 11:4
According to the New
Testament, true and rational worship is to keep our bodies and hearts holy and
offer ourselves as living sacrifices to God:
“Therefore, I urge you,
brothers and sisters, by the mercies of God, to present your bodies as a living
and holy sacrifice, acceptable to God, which is your spiritual service of
worship.” — Romans 12:1
This is spiritual worship.
Not only that, it is the first step toward spiritual blessing.
But when it is preached, “If
you give a thousand rupees, God will return ten thousand to you; the more you
give, the more God will give you,” such teaching resembles the deception by
which Satan misled Eve. Such teaching is from Satan. Teaching that worldly
material prosperity alone is God’s blessing is the doctrine of Satan. Likewise,
the Bible clearly declares:
“For there is one God, and
one mediator also between God and mankind, the man Christ Jesus.” — 1 Timothy
2:5
Therefore, presenting saints as mediators—whom the Bible does not declare as such—is a doctrine contrary to Scripture.
God had clearly told Adam
and Eve not to eat from the tree in the midst of the garden, warning them of
death. Yet Satan distorted God’s words. We read:
“The serpent said to the
woman, ‘You certainly will not die! For God knows that on the day you eat from
it your eyes will be opened, and you will become like God, knowing good and
evil.’” — Genesis 3:4–5
This is exactly what the
Apostle Paul warns about in today’s meditation verse—that just as Eve was
deceived by the serpent’s craftiness, our minds too may be led astray from
sincere devotion to Christ.
Beloved, what Paul feared is
happening even today. Because of the teachings and practices of many
present-day ministers, people of other religions are unable to gain a proper
understanding of Christianity. Twisting the truth in this way pleases Satan; and
since it serves his purposes, he allows such ministries to flourish materially.
Only when we grow in our
personal relationship with God can we escape these deceptive teachings and know
the truth. Merely attending church, reading the Bible, or participating in
prayer meetings is not enough. Our personal prayer life is what strengthens our
relationship with God.
When that relationship grows
strong, we can escape Satan’s schemes and live a truly victorious spiritual
life.

No comments:
Post a Comment