"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் - எண் 1833
🔆 ஆதவன் 13.02.2026 வெள்ளி
"உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை." ( எசேக்கியேல் 16: 4)
எருசலேம் குறித்துத் தேவன் கூறும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இதனைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் தேவன் கூறுகின்றார், "உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்த நாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய்." ( எசேக்கியேல் 16: 5) அதாவது, தொப்புள் அறுக்கப்படாமலும், தண்ணீரினால் குளிப்பாட்டப்படாமலும், உப்பால் சுத்திகரிக்கப்படாமலும், துணிகளில் சுற்றப்படாமலும் கிடந்த அனாதைக் குழந்தையாக எருசலேம் இருந்தது.
பிறந்த குழந்தைகள் அனாதைகளாக குப்பைத் தொட்டிகளில் விடப்படுவதை இன்று நாம் பலவேளைகளில் செய்தித்தாளில் வாசித்திருக்கின்றோம். மட்டுமல்ல, பிறந்து தொப்புள்கொடி காய்வதற்குமுன் இரத்தத்தோடு சில குழந்தைகள் இப்படி ஆனாதைகளாக விடப்படுவதுண்டு. இதனைக்காணும் சிலர் எடுத்து அரசாங்கத்துக்குத் தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் அந்தக் குழந்தை அரசாங்கக் காப்பகங்களில் வளர்க்கப்படும். இப்படி இந்தக் குழந்தைகள் கைவிடப்படக் காரணம் பெரும்பாலும் இவை தகாத உறவுமூலம் பிறந்தவைகளாக இருக்கும்.
எருசலேம் இப்படியேக் கைவிடப்பட்டிருந்தது. ஆனால், அனாதையாக குப்பைத் தொட்டியில் போடப்பட்டக் குழந்தையான எருசலேம் தேவனது கிருபையால் ஆசீர்வாதமான தேவ நகரமாக மாறியது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் எருசலேம் முக்கிய பங்குவகித்த நகரமாக இருந்தது. விண்ணக எருசலேமுக்கு ஒப்பாக கூறப்படும் மண்ணக நகரமாக எருசலேம் மாறிவிட்டது.
இன்று, கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் நமக்கு இதனை நாம் ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆம் அன்பானவர்களே, கைவிடப்பட்ட அனாதையான எருசலேம் போன்ற கைவிடப்பட்ட வாழ்வு நம்மில் பலருக்கு பலவேளைகளில் நேர்கின்றது. நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பாத்திருந்த யாருமே நமக்கு உதவாமல் நம்மை உதாசீனப்படுத்தி ஒதுங்கலாம். இப்படிப்பட்ட நாம்தான் தொப்புள் அறுக்கப்படாமலும், தண்ணீரினால் குளிப்பாட்டப்படாமலும், உப்பால் சுத்திகரிக்கப்படாமலும், துணிகளில் சுற்றப்படாமலும் கிடக்கும் அனாதைக் குழந்தைகள்.
இப்படிப்பட்ட நிலையில் அந்த அனாதைக் குழந்தையால் எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படியே எதுவும் செய்யமுடியாத நிர்க்கதியான நிலைமையில் கைவிடப்பட்டு நாம் நிற்கலாம். ஆனால், அனாதைக் குழந்தையை மீட்க இரக்ககுணம் கொண்ட மனிதர்கள் உலகினில் இல்லாமல் இருந்தாலும் நமது இழிவான அற்பமான நிலைமையை ஆசீர்வாதமாக மாற்றும் ஒரு மீட்பர் நமக்கு உண்டு. அதனை நாம் மறந்துவிடக் கூடாது. அவர் கிருபையால் நமக்கு இரங்குகின்றார் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இதனையே தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்." ( எசேக்கியேல் 16: 6) எருசலேமைப்பார்த்து "பிழைத்திரு" என்று கூறியதைப்போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப்பார்த்தும் கிருபையாக, "பிழைத்திரு" என்கின்றார். இந்த வார்த்தையால் நாம் பிழைத்து வாழமுடியும்.
அனாதைக் குழந்தையான எருசலேமுக்கு வாழ்வளித்த உயர்த்திய தேவன் அனாதைபோல உதவிற்று வாழும் நம்மையும் "பிழைத்திரு" என்று ஒரே வார்த்தையால் உயர்த்தமுடியும். குப்பைத் தொட்டி குழந்தைபோல அமைதியாக அவரது கிருபை நம்மைக் கடந்துபோகக் காத்திருப்போம். "நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்கிறேன்" என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரது வார்த்தைக்காகக் குழந்தைபோலக் காத்திருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
📖 Bible
Meditation – No. 1833
🔆 AATHAVAN |
Friday, 13.02.2026
“As for your birth, on the
day you were born your navel cord was not cut, nor were you washed with water
for cleansing; you were not rubbed with salt or even wrapped in cloths.” — Ezekiel
16:4
Today’s meditation verse
contains the words spoken by God concerning Jerusalem. In the very next verse,
the Lord continues:
“No eye looked with pity on
you to do any of these things for you, to have compassion on you. Rather, you
were thrown out into the open field, for you were abhorred on the day you were
born.” — Ezekiel 16:5
In other words, Jerusalem
was like an orphaned infant—her navel cord not cut, not washed with water, not
rubbed with salt, and not wrapped in cloths—completely abandoned.
Even today, we often read in
newspapers about newborn babies being abandoned in garbage bins. Not only that,
some infants are cruelly left with blood still on them, even before the
umbilical cord has dried. When such scenes are noticed, some compassionate
people inform the authorities, and the child is then taken into government care
and raised in shelters. In most cases, such abandonment happens because the
child was born out of an illicit relationship.
Jerusalem, too, was
abandoned in this very manner. Yet, by the grace of God, this orphaned
child—cast into a garbage heap—was transformed into the blessed city of God.
Jerusalem became a city of great significance in the earthly ministry of our
Lord Jesus Christ. It came to be known as the earthly city that is spoken of in
comparison with the heavenly Jerusalem.
Today, we can apply this
truth to our own lives. Yes, beloved, many of us experience seasons of
abandonment—times when our lives resemble that of forsaken Jerusalem. Those
from whom we expected help may ignore us and turn away. In such moments, we too
become like infants lying helpless — navel not cut, not washed with water, not
purified with salt, not wrapped in cloths.
In that condition, just as
an abandoned infant can do nothing for itself, we too may find ourselves
utterly helpless and destitute. Yet, even if there were no compassionate people
in this world to rescue an orphaned child, we have a Redeemer who can transform
our lowly and despised condition into blessing. We must never forget that. We
must also never forget that He looks upon us with grace and compassion.
We read further:
“When I passed by you and
saw you squirming in your blood, I said to you while you were in your blood,
‘Live!’ Yes, I said to you while you were in your blood, ‘Live!’” — Ezekiel
16:6
Just as God said to
Jerusalem, “Live!”, our Lord Jesus Christ graciously speaks the same word over
us today— “Live!” It is by this word that we are able to live.
The exalted God who gave
life to orphaned Jerusalem can also lift us—who struggle like orphans—by a
single word: “Live!” Let us wait quietly, like a discarded child by the
roadside, for His grace to pass by us. Our Lord Jesus Christ says:
“When I passed by you and
saw you squirming in your blood… I said to you, ‘Live!’
Let us wait like children
for His life-giving word.
God’s Message: - Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment