'ஆதவன்' 💚ஆகஸ்ட் 17, 2025. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,286
"அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4 : 19) / "We love him, because he first loved us." (1 John 4: 19) தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747. 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India
Thursday, August 08, 2024
திருவசனமாகிய ஞானப்பால்
இயேசு குழந்தைப்பருவத்தில் செய்த அற்புதம்
பல நூறு ஆண்டுகளாக பாப்பிரஸ் துண்டு ஒன்று 1011 ஹாம்பர்க் கார்ல் வான் ஒசிட்ஸ்கி மாநிலம் மற்றும் பல்கலைக்கழக நூலகத்தின் காப்பகத்தில் கவனிக்கப்படாமல் கிடந்தது. இந்த பாப்பிரஸ் துண்டு சமீபத்தில் ஹம்போல்ட்-யுனிவர்சிட்டாட் ஜூ பெர்லினில் இருந்து பாப்பிராலஜிஸ்டுகள் டாக்டர் லாஜோஸ் பெர்க்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் நொச்சி மாசிடோ ஆகியோரால் புனித தாமஸின் நற்செய்தியின் ஆரம்பகால நகல் என அடையாளம் காணப்பட்டது.
கி.பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புனித தாமஸின் நற்செய்தி, பைபிள் அபோக்ரிபாவின் ஒரு பகுதியாகும், இது நியமன பைபிளில் சேர்க்கப்படாத நூல்களின் தொகுப்பாகும்.
ஹம்போல்ட்-யுனிவர்சிட்டட்டில் உள்ள இறையியல் சங்கத்தின் விரிவுரையாளரான டாக்டர் பெர்க்ஸ் கூறுகையில், "இந்த பாப்பிரஸ் துண்டு ஆராய்ச்சிக்கு அசாதாரண ஆர்வத்தை கொண்டுள்ளது. இந்த துண்டு 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ளது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட அசல் உரையுடன் அதன் சீரமைப்பு ஒத்துபோகின்றது. இது நற்செய்தியின் ஆரம்பகால இருப்பு மற்றும் பரவல் பற்றிய முக்கிய ஆதாரங்களை வழங்குகின்றது, இந்த கண்டுபிடிப்பு புனித தாமஸின் நற்செய்தி முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்ற தற்போதைய அறிவார்ந்த மதிப்பீட்டை ஆதரிக்கிறது.
உத்தேசமாக 11 x 5 சென்டிமீட்டர்கள் (4.3 x 2 அங்குலம்) அளவுள்ள இந்த பாப்பிரஸ் துண்டு, ஒரு வரிக்கு பத்து எழுத்துக்களைக் கொண்ட பதின்மூன்று வரிகள் கிரேக்க உரையைக் கொண்டுள்ளது. இது பழங்கால எகிப்தின் பிற்பகுதியில் உருவானது மற்றும் அதன் உள்ளடக்கம் முக்கியமற்றதாகத் தோன்றியதால் (ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதியாகத் தோன்றியதால்) ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.
"இது ஒரு தனிப்பட்ட கடிதம் போன்ற அன்றாட ஆவணத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, ஏனெனில் கையெழுத்து மிகவும் விகாரமாக தெரிகிறது," என்று டாக்டர் பெர்க்ஸ் விளக்குகிறார்.
"இயேசு" என்ற வார்த்தை உரையில் அடையாளம் காணப்பட்டபோது திருப்புமுனை ஏற்பட்டது. மேலும் எண்ணற்ற டிஜிட்டல் பாப்பிரிகளுடன் ஒப்பிடுகையில், ஆராய்ச்சியாளர்கள் அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள "கூவுதல்" மற்றும் "கிளை" போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி, அவர்கள் பிற ஆரம்பகால கிறிஸ்தவ நூல்களை குறுக்கு-குறிப்பிட்டு, இதனை புனித தாமஸின் நற்செய்தியின் நகலாக உறுதிப்படுத்தினர்.
இந்தப் பாப்பிரஸ் துண்டின் உள்ளடக்கம் புனித தாமஸின் நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு அத்தியாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, அவரது நற்செய்தியில் இரண்டாவது அதிசயமாகக் கருதப்படும் "சிட்டுக்குருவிகளின் உயிர்ப்பித்தல்" தொடக்கத்தை இது விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில், இளம் இயேசு களிமண்ணிலிருந்து பன்னிரண்டு சிட்டுக்குருவிகள் வடிவமைத்து, ஒரு ஓடையின் அருகே விளையாடுகிறார். ஓய்வுநாளில் இதைச் செய்ததற்காக அவருடைய தந்தை ஜோசப் அவரைக் கண்டித்தபோது, இயேசு கைதட்டி களிமண் உருவங்களை உயிர்ப்பிக்கிறார்.
விகாரமான கையெழுத்து மற்றும் ஒழுங்கற்ற கோடுகள் காரணமாக, இந்த நற்செய்தி நகல் ஒரு பள்ளி அல்லது மடாலயத்தில் எழுதும் பயிற்சிக்காக உருவாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய நடைமுறைகள் கல்வி நோக்கங்களுக்காக பழங்காலத்தில் பொதுவானவை, இந்த துண்டு மத முக்கியத்துவத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அந்தக் காலத்தின் கற்பித்தல் முறைகளைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது.
இந்த பாப்பிரஸ் துண்டின் கண்டுபிடிப்பு விவிலிய அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு மைல்கல் ஆகும், இது கிறிஸ்தவ நூல்களைச் சுற்றியுள்ள ஆரம்பகால பரிமாற்றம் மற்றும் கல்வி நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியத்தின் ஆற்றல்மிக்க தன்மையையும் பல்வேறு பகுதிகள் மற்றும் காலகட்டங்களில் அதன் பரவலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Wednesday, August 07, 2024
"தேவன் நம்மை பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்."
'ஆதவன்' ஆகஸ்ட் 16, 2024. வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,285
"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 )
சுதந்திரம்
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 15, 2024. வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,284
Tuesday, August 06, 2024
போரடிக்கிற புதிதும் கூர்மையுமான இயந்திரம்
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 14, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,283
"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ( ஏசாயா 41 : 12 )
Monday, August 05, 2024
இழந்துபோனதைத் தேட வந்தவர்
✉'ஆதவன்' ஆகஸ்ட் 13, 2024. செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,282
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)
கடவுள் என்றால் அவர் தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழவைப்பவர் என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். காரணம், மனிதர்களாகிய நாம் அத்தகைய குணம் உள்ளவர்களாக இருப்பதால்தான். நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் நாமும் அன்பு செய்கிறோம்; நமக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டும் நாமும் நன்மை செய்கின்றோம்.
ஆனால் தேவன் இப்படிக் குறுகிய எண்ணம் உள்ளவரல்ல; மாறாக அவர் தீயவர்களையும் பாவிகளையும் அன்பு செய்கின்றார். காரணம், இந்த உலக வாழ்க்கைக் குறுகியது. இந்த உலகமே பெரிதென வாழ்ந்து எதிர்காலத்தில் முடிவில்லா அக்கினியில் ஆத்துமாக்கள் அழிந்துபோவது தேவனுக்குச் சித்தமல்ல. எனவேதான் தேவன் பாவிகளை உடனேயே அழித்து ஒழிக்காமல் விட்டுவைக்கின்றார். அவர்கள் மனம்திரும்ப சந்தர்ப்பம் அளிக்கின்றார்.
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3:9) என்று நாம் வாசிக்கின்றோம். ஒரு ஆத்துமாகூட அழிவது தேவனுக்குச் சித்தமல்ல. எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம் அவர் எதிலும் 100% எதிர்பார்ப்பவர்.
அன்று பாவி என்று கருதப்பட்ட சகேயு வீட்டில் இயேசு தங்கச் சென்றபோது யூதர்கள் மனித முறைமையின்படி சிந்தித்ததால், " இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்." (லூக்கா 19:7) ஆனால் இயேசு சகேயுவின் ஆத்துமாவைப் பார்த்தார். அது பாவத்துக்கு வருந்தும் தன்மை உள்ள ஆத்துமாவாக இருந்ததை அவர் அறிந்திருந்தார்.
அதுபோலவே "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." " (லூக்கா 19: 8, 7) என்றார்.
ஆம் அன்பானவர்களே, இழந்துபோனதை தேடுவதற்கே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். சகேயுவைபோல பாவத்துக்கு வருந்தி பரிகாரம்செய்யும் குணம் நமக்கு இருக்குமானால் நாம் அவருக்குத் தொலைவில் இல்லை. இழந்துபோன நம்மை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனான கிறிஸ்து உலகினில் வந்திருக்கிறார். அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 12, 2024. 💚திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,281
Saturday, August 03, 2024
வானம் எனக்குச் சிங்காசனம்
'ஆதவன்' 💚ஆகஸ்ட் 11, 2024. ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,280
Friday, August 02, 2024
பூரணம்
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 10, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,279
Thursday, August 01, 2024
உண்மை நட்பு
✉'ஆதவன்' ஆகஸ்ட் 09, 2024. வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,278
"என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது." ( 2 சாமுவேல் 1 : 26 )
இரண்டு சாட்சிகள்
✉'ஆதவன்' ஆகஸ்ட் 08, 2024. வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,277
"நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )
இந்தக் காலத்திலும்கூட எதற்கும் சட்டபூர்வமாக இரண்டு சாட்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு பத்திரம் பதிவுசெய்யும்போதுகூட இறுதியில் சாட்சிகள் என்று இரண்டுபேர் கையெழுத்திடுவார்கள். திருமண ஒப்பந்தத்திலும்கூட மணமகன் மணமகள் கையொப்பமிட்ட பின்னர் இரண்டு சாட்சிகள் இறுதியில் கையொப்பமிடுவார்கள். இதற்குப் பொருள் என்னவென்றால், இங்கு கூறப்பட்டுள்ளது அல்லது நடந்தது அனைத்தையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள்தான் சாட்சிகள் என்று பொருள்.
இப்படியே, நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கிறோம் என்பதற்கு இரண்டு சாட்சிகளை அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். ஒன்று ஆவியானவர் இன்னொன்று நம்முடைய சொந்த ஆவி என்று குறிப்பிடுகின்றார்.
நாம் தேவனுக்கேற்ற பிள்ளைகளாக நடக்கின்றோமா என்பதனை ஆவியானவர் நமக்கு முதலில் உணர்த்துகின்றார். நம்மைத் திருத்திக்கொள்ள வழி காட்டுகின்றார். அப்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளாவிட்டால் அவர் துக்கமடைகின்றார். இதனை அப்போஸ்தலரான பவுல், "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 ) என்று குறிப்பிடுகின்றார்.
ஆவியானவரின் உணர்த்துதலின்படி நாம் நம்மைத் திருத்திக்கொள்ளும்போது நமது ஆவியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் தேவனுடைய பிள்ளைகளாய்த்தான் இருக்கின்றோம் என்பதனை உறுதி செய்யும். இப்படி இரண்டு சாட்சிகளும் சரியாக இருக்குமானால் நாம் மெய்யாலுமே தேவனுக்கேற்றவர்கள் ஆகின்றோம்; அவரது பிள்ளைகளாகின்றோம்.
இதனையே இதற்கு அடுத்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகிற்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )
அதாவது நாம் அவரது பிள்ளைகளாகி ஒரு மகன் அல்லது மகள் எப்படித் தகப்பனது சொத்துக்களில் உரிமை பெறுவார்களோ அதுபோன்ற உரிமையினைப் பெறுவோம். அப்படி உரிமைப்பேறு கிடைக்க நமக்கு மேற்படி இரண்டு சாட்சிகளும் தேவைப்படுகின்றன. நமக்கு இந்த இரண்டு சாட்சிகளும் உண்டுமா என்பதனை நாம் நிதானித்துக்கொள்வோம்.
ஆவியானவர் நம்மைக்குறித்து என்னச் சொல்லுவார்? நமது சொந்த ஆவி நம்மைக் குறித்து என்ன உணர்த்துகின்றது?
Tuesday, July 30, 2024
1947 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தாவீதின் புதிய சங்கீதம்
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் :-
சகோ. எம்.ஜியோ பிரகாஷ்
1947 ஆம் ஆண்டு கும்ரன் குகையில் ஆடுமேய்த்த சிறுவர்கள் கண்டுபிடித்த மண்பாண்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வேதாகம தோல்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றும் இருந்தது. வேதாகமத்தில் இல்லாத அந்தச் சங்கீதம் இதோ:-
நிச்சயமாக ஒரு புழு உம்மைத் துதிக்க முடியாது; கல்லறைப் புழு உம் இரக்கத்தைப் புகழ்ந்திடாது. ஆனால் ஜீவனுள்ளோர் உம்மைத் துதிக்கமுடியும்!!. தள்ளாடுகிறவன்கூட உம்மைப் போற்றிப் புகழ முடியும்.
உமது இரக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி உமது நீதியால் அவர்களை மகிழ்விக்கின்றீர். ஏனெனில் ஜீவனுள்ளோரின் ஆன்மாக்கள் உமது கரங்களில் உள்ளன. மாம்சமான அனைத்துக்கும் உயிரளித்தவர் நீரே.
உமது நன்மைக்கேற்ப, உமது இரக்கம் நீதிக்கேற்ப எம்மிடம் செயல்புரியும்.
கர்த்தரின் நாமத்தின்மேல் பற்றுதல் கொள்வோரின் குரலை அவர் கேட்கிறார். தனது இரகத்தினால் அவர்களைக் கைவிடாமல் காக்கின்றார்.
நீதியை நடப்பிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவரே பரிசுத்தவான்களை தனது அன்பினாலும் இரகத்தினாலும் முடிசூட்டுகின்றார்.
என் ஆன்மா கர்த்தரது நாமத்தை உயர்த்திப் போற்றுகின்றது. அவரது அன்பின் கிரியைகளை புகழ்ந்து பாடுகின்றது. உமது நீதியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவே இல்லை.
எனது பாவங்களும் மீறுதல்களும் என்னை மரணத்துக்குச் சமீபமாக இழுத்துச் சென்றன. ஆனால் கர்த்தாவே, உமது மகா கிருபையினாலும் நீதியினாலும் நீரே என்னை மீட்டுக்கொண்டீர்.
தேவனே! உண்மையிலேயே உமது நாமத்தை நான் நேசிக்கிறேன். உமது பாதுகாப்பில் அடைக்கலம் காண்கிறேன். உமது வல்லமையினை நினைவுகூரும்போது எனது இருதயம் தைரியம் கொள்கின்றது. உமது இரக்கத்தின்மேல் சாய்ந்துகொள்கிறேன்.
என் பாவங்களை மன்னியும், கர்த்தாவே என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் ஆத்துமாவை உமது உண்மையிலும் நீதியிலும் காத்து நான் அழிந்திடாமல் பாதுகாத்தருளும்.
அலகை என்னை மேற்கொள்ளாமலும், அசுத்தஆவி என்னை வேதனைப்படுத்தி என் எலும்புகளை மேற்கொள்ளாமலும் இருப்பதாக! தேவனே, நீரே என்புகழ்ச்சி; நாள்முழுதும் நீரே என் நம்பிக்கை.
உமது இரக்கத்தின் மேன்மையைக்கண்டு ஆச்சரியப்படும் என் சகோதரர்கள் என்னோடும் என் தகப்பன் வீட்டாரோடும் அக்களிப்பார்களாக.
தேவனே! நான் எப்போதும் உம்மிலே மகிழ்ந்திருப்பேன்.!
ஓட்டையான தொட்டி
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,276
"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )
மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப் பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.
அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக் கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர்.
அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "
இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள்.
அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.
"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )