Saturday, September 12, 2026

🦋 Meditation verse - சங்கீதம் 57 : 2 / Psalm 57:2

 தியானம் - 2044

"ஆதவன்" செப்டம்பர் 13 ஞாயிறு 2026



"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

இன்று நல்ல மதிப்பெண்ணுடன் படித்துமுடித்தும் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களும் இளம்பெண்களும் அதிகம் உண்டு.  ஆனால் இப்படி வேலைவாய்ப்பில்லாத பலரும் பொதுவாக தேவனை நோக்கிப்பார்ப்பதில்லை. நாம் தேவன்மேல் பற்றுக்கொள்ளவும் ஜெபிக்கவும் நமக்கு இன்னும் வயதாகவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். மேலும் தங்களது இளம் வயதை இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் கைப்பேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் செலவிடுகின்றனர். 

ஆனால், "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" ( பிரசங்கி 12 : 1 ) என்று வேதம் அறிவுறுத்துகின்றது.  ஆம் அன்பானவர்களே, நாம் நமது இளம் வயதிலேயே தேவனை அன்புசெய்து அவரையேச் சார்ந்து வாழப் பழகவேண்டும். 

தாவீது சவுல் இராஜாவுக்குப் பயந்து  தப்பி ஓடியபோது மலையிலுள்ள ஒரு குகையிலிருந்து இன்றைய தியான வசனம் குறிப்பிடப்பட்டுள்ள சங்கீதத்தை எழுதினார். ஆனால், தாவீது இராஜாவானபோது அவருக்கு வயது முப்பது. அதாவது, அவர் இராஜாவாகுமுன்,  முப்பது வயதுக்கும் குறைவாக இருக்கும்போது இன்றைய தியான வசனத்தை எழுதியுள்ளார் என்பது தெளிவாகின்றது. ஒரு துடிப்பான இளைஞனாக அவர் இருந்தபோது தனது பலத்தை நம்பாமல்,  "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறுகின்றார். 

இது தாவீதின் விசுவாச அறிக்கையாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். "தேவன் எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகின்றார், எனவே அவரை நோக்கிக் கூப்பிடுவேன்"  என்று அவர் முழு நம்பிக்கையுடன் கூறுவதை நாம் பார்க்கின்றோம். மட்டுமல்ல, தொடர்ந்து அவர் கூறுகின்றார், "என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்:  தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." ( சங்கீதம் 57 : 3 ) என்கின்றார் முழு விசுவாசத்துடன். 

இதனை வாசிக்கும் இளம் சகோதரனே, சகோதரியே, முப்பது வயதுக்குமுன் தேவன்மேல் இத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்த தாவீதைப்போல உங்கள் அன்பும் விசுவாசமும் இருக்கின்றதா? தேவன் எனக்காக இதனைச் செய்து முடிப்பார் என்று தாவீதைப்போல உறுதியான விசுவாச அறிக்கையை  உங்களால் கூறமுடியுமா? தாவீது சுகமாக வாழ்ந்து இருக்கும்போது இப்படிக்கூறவில்லை. மாறாக,  நொறுங்குண்ட இதயத்துடன், உயிர் பயத்துடன் இருந்தபோது இந்த விசுவாச அறிக்கையினைச் செய்தார். 

இதே தாவீது, "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" ( சங்கீதம் 34 : 18 ) என்று ஏற்கெனவே கூறியுள்ளார். அதாவது,  நொறுங்குண்ட இதயத்துடன், மனவேதனையுடன் தேவனை நோக்கிப்பார்த்தால் தேவன் நிச்சயமாக நமக்கு இரங்குவார் என்கின்றார். தாவீதின் வார்த்தைகள் அனைத்துமே அவர் தேவனோடு அனுபவித்த அனுபவத்தின் வெளிப்பாடுகள்.  ஆம், மனவேதனைக்குத் தீர்வு முகநூலும், இன்ஸ்டாகிராமும் இதர சமூக ஊடகங்களுமல்ல. மாறாக, தேவனாகிய கர்த்தரின் சமூகம் மட்டுமே. 

இன்றைய ஒடுக்கபட்ட, வேலையற்ற, புறக்கணிக்கப்பட்ட நிலையினை எண்ணி வருந்தாமல், கர்த்தரை உறுதியான விசுவாசத்துடன் பற்றிக்கொள்ள இன்றைய தியான வசனம் மூலம் கர்த்தர் உணர்த்துகின்றார். கர்த்தரையே பற்றிக்கொள்ளுங்கள்; "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறியுள்ளபடி அவரை நோக்கி விசுவாசத்துடன் உங்கள் மனதின் வேதனையையும் எதிர்பார்ப்பையும் வெற்றி அறிக்கையிடுங்கள். ஆம், உங்கள் விசுவாச அறிக்கையின்படியே கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். 

✍️சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2044

"AATHAVAN" Sunday, September 13, 2026


"I will cry to God Most High, To God who accomplishes all things for me." (Psalm 57:2)

Today, there are many young men and women who have graduated with good marks but lack employment opportunities that match their education. However, many of those who are unemployed in this way generally do not look to God. Many think they are not yet old enough to cling to God or to pray. Furthermore, most of today's youth spend their younger years on mobile phones and social media.

But the Scripture advises, "Remember also your Creator in the days of your youth" (Ecclesiastes 12:1). Yes, beloved, we must learn to love God and depend solely on Him even in our youth.

David wrote the Psalm containing today's meditation verse from a cave in the mountains while fleeing in fear of King Saul. However, David was thirty years old when he became king. This means it is clear he wrote today's meditation verse before he became king, when he was less than thirty years old. As a vibrant youth, without relying on his own strength, he declared, "I will cry to God Most High, To God who accomplishes all things for me."

We see this as David's declaration of faith. We see him stating with full confidence, "God will accomplish all things for me, therefore I will cry out to Him." Not only that, he continues to say with full faith, "He will send from heaven and save me; He reproaches him who tramples upon me... God will send forth His lovingkindness and His truth" (Psalm 57:3).

Young brother or sister reading this, do you have such love and faith in God as David had before the age of thirty? Can you make a firm declaration of faith like David, saying that God will accomplish this for me? David did not say this while living comfortably. Rather, he made this declaration of faith when he was with a broken heart and in fear for his life.

This same David had already said, "The LORD is near to the broken-hearted And saves those who are crushed in spirit" (Psalm 34:18). That is, he says that if we look to God with a broken heart and mental agony, God will certainly have mercy on us. All of David's words are expressions of the experiences he had with God. Yes, the solution to mental agony is not Facebook, Instagram, or other social media. Rather, it is only the presence of the Lord God.

Through today's meditation verse, the Lord makes us realize that we should not despair over our current oppressed, jobless, or rejected state, but rather hold firmly onto the Lord with unwavering faith. Cling to the Lord alone; just as it is said, "I will cry to God Most High, To God who accomplishes all things for me," look to Him with faith and declare your heart's pain and expectations as a declaration of victory. Yes, according to your declaration of faith, the Lord will accomplish all things for you.

✍️ Bro. M. Geo Prakash  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - സങ്കീർത്തനം 122:6, 7

  ആധവൻ ധ്യാനം നമ്പർ: 2075 | തീയതി: 14.10.2026 "യെരൂശലേമിന്റെ സമാധാനത്തിനായി പ്രാർത്ഥിക്കുവിൻ; നിന്നെ സ്നേഹിക്കുന്നവർ സ്വസ്ഥമായിരിക്കു...