Wednesday, September 02, 2026

🦋 Meditation verse - பிலிப்பியர் 1 : 21 / Philippians 1:21

 தியானம் - 2036

"ஆதவன்" செப்டம்பர் 05 சனி 2026


"கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" ( பிலிப்பியர் 1 : 21 )

ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களது பிரபலமான ஒரு மேற்கோள், "ஒருவரை நீங்கள் நேசிக்கும்போது, ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கிறீர்கள்; மாறாக, அவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அல்ல" என்பதாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை இப்படித்தான் நேசித்தார். நாம் பரிசுத்தவான்கள் என்று அவர் நம்மை நேசிக்கவில்லை. நாம் பாவிகளாக இருக்கும்போதே நம்மை அவர் நேசித்தார். 

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" ( ரோமர் 5 : 8 ) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், இந்த உலகத்தில் நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது  ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கின்றோம். அப்படியே கிறிஸ்து நம்மை நேசித்தார். 

இதுபோல நாமும் அவரை எந்த நிபந்தையுமின்றி நேசிக்கவே அழைக்கப்படுகின்றோம். அந்த அன்பினால்தான் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து எனக்கு உயிர்" என்கின்றார். இந்த உலகத்தில் காதலர்கள் பலர் தாங்கள் காதலிப்பவர்களைப் பார்த்து , "நீதான் என் உயிர்" என்று கூறும் வார்த்தைகள்தான் இவை. இப்படி நமது உயிராக நாம் கிறிஸ்துவை எண்ணி அன்புசெய்யவேண்டியது அவசியம். 

தொடர்ந்து பவுல் அப்போஸ்தலர், "சாவு எனக்கு ஆதாயம்" என்று கூறுகின்றார். இதற்கு நாம் இரண்டு பொருள் கூறலாம். ஆவிக்குரிய விதத்தில் கூறுவதென்றால், கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிப்பது நமக்கு லாபமாகும். காரணம் நாம் அவரோடுகூட மறுமையில் நித்தியமாக வாழ்வதற்கு நாம் தகுதிபெறுகின்றோம். இன்னொருபொருள், கிறிஸ்துவுக்காக என்று உண்மையாகப் பணிச்செய்து மரிப்பது நமக்கு ஆதாயம். 

இப்படி நாம் கிறிஸ்துவை அன்புசெய்வோமானால் நமது வேறு எந்த உலக ஆசைக்கும் அவரைத் தேடமாட்டோம். கிறிஸ்துவின் பிரசன்னம் நம்மோடு இருக்கவேண்டும், அவர் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தும் அனுபவம் நமக்கு நிரந்தரமாக வேண்டும் எனும் ஆசைகளே நமக்குள் எழும். 

சமீபத்தில் படித்தப்  பத்திரிகைச் செய்தி என்னைச் சிந்திக்கவைத்தது. தனது காதல் கைக்கூடாததால் ஒரு பெண் தற்கொலை செய்து மடிந்துபோனாள். அதனை அறிந்த அவளது காதலனும் தற்கொலை செய்துகொண்டான். சாகுமுன் அவன் எழுதிவைத்திருந்த கடிதத்தில், "அவளே எனது உயிராக இருந்தாள்;  அவளோடு சாவதே  எனக்கு நல்லது" என்று குறிப்பிட்டிருந்தான்.  ஆம், கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளவேண்டிய அன்பு இதுபோல தூய்மையான காதல் உணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். 

வேதாகமத்தின் உன்னத சங்கீதம் தேவனுடன் பக்தன் இந்த அனுபவத்துடன் பாடிய பாடல்களே. "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்று நம்மால் கூறி வாழமுடியுமானால் நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றோம் என்று பொருள்.

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2036

"AATHAVAN" | Saturday, September 05, 2026

"For to me, to live is Christ and to die is gain." — Philippians 1:21

A famous quote by the Russian author Leo Tolstoy states, "When you love someone, you love the person as they are, and not as you'd like them to be." This is precisely how the Lord Jesus Christ loved us. He did not love us because we were holy; He loved us while we were still sinners.

We read, "But God demonstrates His own love toward us, in that while we were yet sinners, Christ died for us" (Romans 5:8). Indeed, when we truly love someone in this world, we accept and love them just as they are. Christ loved us in the exact same way.

Likewise, we are called to love Him unconditionally. It is out of such devotion that the Apostle Paul declares, "Christ is my life." These mirror the words lovers in this world often say to one another: "You are my very life." We must cherish and love Christ as our very life.

The Apostle Paul goes on to say, "To die is gain." We can understand this in two ways:

Spiritually: Dying to sin for the sake of Christ is our gain, as it makes us worthy to live with Him eternally in the life to come.

Ministerially: Faithfully serving Christ to the point of giving up our physical life for Him is ultimate gain.

If we love Christ with this depth, we will not seek Him for worldly desires. Instead, our hearts will burn with the longing to abide in His presence continuously and to experience His guidance from within.

A recent news article gave me pause for thought. A young woman committed suicide because her love went unfulfilled. Upon hearing the news, her lover also ended his life. In his suicide note, he wrote, "She was my very life; dying alongside her is better for me." Our love for Christ ought to carry that same pure, consuming passion.

The Song of Solomon in Holy Scripture reflects this exact devotion between the believer and God. If we can truly declare and live out, "For to me, to live is Christ and to die is gain," we are living a genuine spiritual life.

✍️ Bro. M. Geo Prakash  


No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - பிலிப்பியர் 1 : 21 / Philippians 1:21

  தியானம் - 2036 " ஆதவன் " செப்டம்பர் 05 சனி 2026 " கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" ( பிலிப்பியர் 1 : 21 ) ர...