ஆதவன் தியானம்
மாம்சத்திற்கென்று விதைத்தல் என்பது இந்த உலக ஆசீர்வாதங்களுக்காகவே நாம் உழைத்துக்கொண்டிருப்பதையும் ஜெபித்துக்கொண்டிருப்பதையும் குறிக்கின்றது. ஒருவேளை இப்படி நாம் முயற்சிசெய்வது நமக்குக் கிடைத்தாலும் அவை நமக்கு நிலைத்த மகிழ்ச்சியைத் தராது. மேலும் அவை ஆசீர்வாதம்போல முதலில்தெரிந்தாலும் அவற்றின் முடிவு ஆசீர்வாதமல்ல அழிவே என்பதனை நாம் பிற்பாடு புரிந்துகொள்வோம்.
ஒருவேளை நமது கடினமான முயற்சிகளால் நாம் இந்த உலகத்து மனிதர்களது பாராட்டுதலையும் அதிகமான பொருட்களையும் சேர்க்கலாம். ஆனால் அப்படி நாம் உலகத்தை ஆதாயப்படுத்துவது நமது ஆத்துமாவுக்கு எந்த பலனையும் கொண்டுவராது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று.
ஆனால் நாம் எடுக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான முயற்சிகள் அப்படியல்ல. நமக்கு அவை முதலில் கடினமாகவும் எந்த ஆசீர்வாதமும் இல்லாததுபோலத் தெரிந்தாலும் இறுதியில் நமக்கு நித்தியஜீவனை பிரதிபலனானத் தரும். இதனையே, "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 ) என்று இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.
நமது சிந்தனையே செயலாக மாறுகின்றது. மாம்ச சிந்தை கொண்டிருந்தோமானால் மாம்ச காரியங்களையே செய்வோம். ஆவிக்குரிய சிந்தை நமக்கு இருக்குமானால் ஆவிக்குரிய செயல்களைச் செய்து ஆவிக்குரிய மக்களாக வாழ்வோம். இதனையே, "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது தமிழ் பழமொழி. முட்செடியின் விதையினை விதைத்துவிட்டு நல்ல அத்திப்பழங்களை அவை தரும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆவிக்கென்று விதைப்பது என்பது, ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் செய்யும் செயல்பாடுகளைக் குறிக்கின்றது. பாவத்துக்கு விலகி, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடப்பதைக் குறிக்கின்றது.
இன்று பலரது வாழ்க்கையை வெளியிலிருந்து பார்க்கும்போது நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைபோலத் தெரிகின்றது. ஆனால் சற்று ஆழமாகக் கவனித்தால் அவர்களது ஆவிக்குரிய முயற்சிகளின் இறுதி இலக்கு உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே இருப்பதை கண்டுகொள்ளமுடியும்.
இப்படி முற்றிலுமாக உலக ஆசைகொண்டு அலைந்துவிட்டு நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியாது. காரணம், மாம்சத்துக்கென்று உழைப்பதால் ஆவிக்குரிய வாழ்வை அழிவுக்குநேராகவே கொண்டு செல்வோம். ஆனால் மெய்யாகவே ஆவிக்குரிய காரியங்களுக்காக உழைக்கும்போது தேவன் உலக ஆசீர்வாதங்களையும் நமக்குச் சேர்த்துத் தருவார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?
அன்பானவர்களே, நமது எண்ணங்களையும் வாழ்கையினையும் செயல்பாடுகளையும் சிந்தித்துப் பார்ப்போம். நாம் உண்மையில் எதற்காக விதைத்துக்கொண்டிருக்கின்றோம் ?
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️AATHAVAN MEDITATION
No.: 2053 | Date: 22.09.2026
"For the one who sows to his own flesh will from the flesh reap corruption, but the one who sows to the Spirit will from the Spirit reap eternal life." (Galatians 6:8)
Sowing to the flesh refers to our labouring and praying solely for worldly blessings. Even if we should obtain these things through such effort, they will not give us lasting joy. Furthermore, though they may at first appear to be blessings, we will later come to understand that their end is not a blessing but corruption.
Perhaps through our hard efforts we may gain the praise of worldly people and accumulate many possessions. But gaining the world in this way will bring no benefit to our soul. That is why Jesus Christ said, "For what will it profit a man if he gains the whole world and forfeits his soul? Or what will a man give in exchange for his soul?" (Matthew 16:26).
But the efforts we make for spiritual growth are not like that. Though at first, they may seem difficult to us and appear to carry no blessing, in the end they will yield eternal life as our reward. This is what we read in the verse preceding today's meditation verse: "Do not be deceived, God is not mocked; for whatever a man sows, this he will also reap." (Galatians 6:7).
Our thoughts themselves become actions. If we have a fleshly mindset, we will do fleshly deeds. If we have a spiritual mindset, we will do spiritual deeds and live as spiritual people. This is what the apostle Paul writes: "For those who are according to the flesh set their minds on the things of the flesh, but those who are according to the Spirit, the things of the Spirit." (Romans 8:5).
"A man who sows evil reaps evil; a man who sows millet reaps millet" is a Tamil proverb. Having sown the seed of a thornbush, one cannot expect it to yield good figs.
To sow to the Spirit means to give priority to spiritual things and to engage in the activities by which we obtain eternal life. It means turning away from sin and walking according to the guidance of the Holy Spirit.
Today, when we look at many people's lives from the outside, they appear to be good spiritual lives. But if we look a little more deeply, we can recognize that the ultimate goal of their spiritual efforts is merely to obtain worldly blessings.
Having wandered about wholly consumed by worldly desires in this way, we cannot expect spiritual blessings. The reason is that by labouring for the flesh, we will carry our spiritual life only toward corruption. But when we truly labour for spiritual things, God will add worldly blessings to us as well. Did not Jesus Christ say, "But seek first His kingdom and His righteousness, and all these things will be added to you" (Matthew 6:33)?
Beloved ones, let us examine our thoughts, our lives, and our actions. What are we truly sowing for?
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:
Post a Comment