தியானம் - 2043
நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் மகிமை உண்டாகும் என்று இன்றைய தியான வசனம் மூலம் தேவன் நமக்கு அறிவுறுத்துகின்றார்.
பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்ததுபோல கர்த்தருக்கு என நியமிக்கப்பட்ட சீயோன் மக்களாகிய பலர் இன்று அறிந்தோ அறியாமலோ பாவத்துக்கு அடிமைகளாக இருக்கின்றோம். ஆம், பாவ சந்ததிகளாகிய பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் அவர்களைப்போல வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இப்படி வாழும் மக்களைப்பார்த்து, "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." அதாவது, பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்களைவிட்டு; அவர்களது பாவ பழக்கங்களை விட்டு, உன்னை விடுவித்துக்கொள். அப்போது உனது வாழ்க்கையில் புது மகிமையைக் காண்பாய் என்கின்றார்.
இப்படி நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு ஆசீர்வாதம் உண்டு. இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதியில் இதனைக் குறித்து கூறப்பட்டுள்ளது. நாம் பாபிலோன் வாழ்க்கையினை விட்டுவிடும்போது, இதுவரை உங்களை அடிமைப்படுத்தி கொள்ளையிட்ட பாபிலோனிடத்துக்கு நான் செல்வேன் என்று ஆவியானவர் கூறுகின்றார்; எனவே, அவர்கள் இனி உன்னை நெருங்க முடியாது. மட்டுமல்ல, இனி நீங்கள் எனது கண்மணிபோல இருப்பீர்கள். உங்களை எவரும் இனித் தொடமுடியாது. இதனையே, "உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்ட சீயோன் மக்கள் நாம். இதனை உணர்ந்து நமது பாவ வாழ்க்கையினை விட்டு மனம்திரும்பி அவரிடம் வரவேண்டியது அவசியம். இன்று பலரும் தங்களது தொடர்ந்த துன்பங்கள், ஆசீர்வாதக் குறைவுகளுக்கான காரணம் புரியாமல் தொடர்ந்து பாபிலோன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இன்று தேவன் சகரியா மூலம் "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்" என அறைகூவல் விடுகின்றார்.
அப்படி விடுவித்துக்கொண்டபின் மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மட்டுமல்ல, அதன்பின் எந்தத் துன்பங்களும் உங்களை மேற்கொள்ளாதவாறு கர்த்தர் நான் காத்துக்கொள்வேன் என்கின்றார். காரணம், பாபிலோன் வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொண்ட உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அப்படித் தொடுகிறவனை அவர் விட்டுவிடமாட்டார்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Meditation - 2043
"AATHAVAN" | Saturday, September 12, 2026
"Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon. For thus says the LORD of hosts, ‘After glory He has sent Me against the nations which plunder you, for he who touches you, touches the apple of His eye.’" (Zechariah 2:7, 8 - NASB)
Through today’s meditation verse, God instructs us that when we free ourselves from our sinful life, there will be glory in our lives.
Babylon signifies bondage. Just as the people of Israel were slaves to the Babylonians, many of us—the people of Zion appointed for the Lord—are today slaves to sin, whether knowingly or unknowingly. Yes, we are living like them, dwelling among a generation that lives a sinful "Babylonian" life.
Looking at people living this way, the Lord says, "Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon. For thus says the LORD of hosts, ‘After glory...’" That is, free yourself from the people living a Babylonian life and from their sinful habits. When you do, He says you will see new glory in your life.
When we free ourselves in this manner, there is a blessing waiting for us. The latter part of today’s meditation verse speaks to this. The Spirit says that when we forsake the Babylonian life, He will go against the Babylon that has enslaved and plundered you thus far; therefore, they will no longer be able to come near you. Not only that, but from now on, you will be like the apple of His eye. No one will be able to touch you anymore. This is exactly what the Lord God means when He says, "He has sent Me against the nations which plunder you, for hewho touches you, touches the apple of His eye."
Yes, dear ones, we are the people of Zion, appointed for the Lord. Realizing this, it is essential for us to leave our sinful lives, repent, and return to Him. Today, many continue to live a Babylonian life without understanding the reason for their ongoing struggles and lack of blessings. To them, God gives a clarion call today through Zechariah: "Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon."
The Lord of hosts promises that after you free yourself in this way, there will be glory. Moreover, the Lord says He will protect you so that no afflictions will overcome you thereafter. The reason is that anyone who touches you—you who have freed yourself from the Babylonian life—touches the apple of His eye. And He will never spare the one who touches you in such a way.
✍️ Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment