Wednesday, September 16, 2026

🦋 Meditation verse - 2 சாமுவேல் 9 : 13 / 2 Samuel 9:13

 ꧁༺ஆதவன் தியானம்༻꧂

எண் :- 2048       நாள் :- 17.09.2026


"மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தன." ( 2 சாமுவேல் 9 : 13 )

சிலவேளைகளில் நமது உடலிலோ மனதிலோ மிகப்பெரிய பாதிப்பைத் தேவன் அளிக்கின்றாரென்றால் நாம் அது ஒருவேளை நமது நன்மைக்காகவே இருக்கும். ஆம், தேவன் ஏதோ பிற்காலத்தில் நமக்கு நன்மையாக முடியப்பண்ண சிலப் பெரிய  வேதனைகளை நமக்குத் தரக்கூடும். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 ) என்று பவுல் அப்போஸ்தலர் கூறவில்லையா? 

இதற்கு இரண்டு கால்களும் முடமாயிருந்த மேவிபோசேத்தின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரண பாடமாக இருக்கின்றது. சவுலின் வாரிசுகள் அனைவரும் இறந்துபோனபோதும் முடவனாகிய மேவிபோசேத் மட்டும் உயிர் தப்பினான். அதற்கு அவனது முடமான கால்களே காரணமாக இருந்தன. சவுல் இறந்த அதே வேளையில், அவருடன் போரில் ஈடுபட்டிருந்த அவரது மூன்று மகன்களான யோனத்தான், அபினதாப் மற்றும் மல்கிசூவா ஆகியோரும் கொல்லப்பட்டனர். (1 சாமுவேல் 31:1-2) சவுலின் இறப்பிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீது ராஜாவின் ஆட்சிக்காலத்தில், சவுலின் சந்ததியினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.  (2 சாமுவேல் 21:8-9). இப்படி சவுலில் வாரிசுகள் அனைவரும் அழிந்தனர். 

ஆனால், சவுலின் மகனாகிய யோனத்தானின் ஒரே ஒரு மகன் மேவிபோசேத் மட்டும் உயிர் பிழைத்திருந்தான்.  யோனத்தானும் சவுலும் கில்போவா மலையில் மரித்தபோது, ​​இவனுக்கு ஐந்து வயதுதான் ஆகியிருந்தது. போரைப் பற்றிய செய்தியைக் கேட்ட மேவிபோசேத்தின்  தாதி, அவனைத் தூக்கிக்கொண்டு தப்பியோட முயன்றபோது கீழே விழுந்துவிட்டாள்; அதனால் அவன் இரு கால்களிலும் ஊனமுற்றான். (2 சாமுவேல் 4:4)

யோனத்தான் மீதான அன்பு மற்றும் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் காரணமாக தாவீது  மேவிபோசேத்தைக்  காப்பாற்றினார். தாவீது அவனை அரண்மனைக்கு அழைத்து வந்து, சவுலுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் அவனிடம் திரும்ப ஒப்படைத்தார்; மேலும் அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரசரின் மேஜையில் ஒரு மகனைப் போல அமர்ந்து உண்ணும்படி செய்தார். (2 சாமுவேல் 9). ஆம்,  கடவுளின் கிருபையால் அவன் பாதுகாக்கப்பட்டான்.

​​அவனது அந்த ஊனம், அவனை ஒரு பயனற்றவனாகவும், அரசராகும் தகுதி இல்லாதவனாகவும் மற்றவர்கள் பார்க்கும்படி செய்தது. அக்காலத்தில், ஊனமுற்ற ஒருவரால் அரசராகவோ அல்லது போர்வீரராகவோ இருக்க முடியாது. எனவே, யாரும் அவனைத் தேட முற்படவில்லை; கொல்லவும் முயலவில்லை.  

ஆனால் பிற்காலத்தில், அதே ஊனம்தான் அவனுக்குக் கிருபையைப் பெற்றுத் தந்தது. தாவீது அவனைக் கண்டறிந்தபோது, ​​அவன் மீது இரக்கம் காட்டி இவ்வாறு கூறினார்: "பயப்படாதே... உன் தகப்பனாகிய யோனத்தானின் நிமித்தம் நான் உனக்குத் தயவு செய்வேன்" (2 சாமுவேல் 9:7). எனவே இதை இப்படிச் சொல்லலாம். தேவனே அவனது பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை மறைத்து வைத்தார்; பின்னர் அதே பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை இராஜாவின் பந்திக்குக் கொண்டு வந்தார். 

ஆம் அன்பானவர்களே இது நமது வாழ்க்கை பற்றிய ஒரு அழகான படமாக அமைந்துள்ளது. சிலவேளைகளில் நமது பலவீனம், உடைந்த நிலை, இழப்புகள் பிற்கால நன்மைக்காகவே இருக்கலாம். தேவன் அவருக்கு உகந்தவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை.  நிச்சயமாக அவர் நம்மைத் தம்முடைய பந்திக்கு அழைத்து வருவார். இராஜாவுடன் ஒரு மகனைப்போல அன்றாடம் உணவு உண்ணக்கூடிய மேலான நிலைக்கு அவர் நம்மை உயர்த்துவார். 

சில உடல் இழப்புகளோ, பலவீனங்களோ, பொருளாதார பாதிப்புகளோ நிரந்தரமல்ல; அவை நமது எதிர்கால நன்மைக்காவே இருக்கலாம்.  மேவிபோசேத்தின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான். விசுவாசமுடன் இழப்புகளைத் தங்கி வாழ்வோம். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

꧁AATHAVAN MEDITATION꧂
No.: 2048 Date: 17.09.2026

"Mephibosheth was living in Jerusalem, for he was continually eating at the king's table; and he was lame in both feet." (2 Samuel 9:13, NASB)

Sometimes, if God allows a great affliction in our body or mind, it may be for our own good. Yes, God may give us certain great sufferings so that later He can work them out for our benefit. Did not the apostle Paul say, "And we know that God causes all things to work together for good to those who love God, to those who are called according to His purpose." (Romans 8:28, NASB)?

The life of Mephibosheth, who was lame in both feet, serves as an example and lesson for us. When all of Saul's descendants died, only Mephibosheth, the lame one, survived. His lame feet were the very reason for it. At the same time Saul died, his three sons who were engaged in battle with him—Jonathan, Abinadab, and Malchishua—were also killed. (1 Samuel 31:1–2)

Many years after Saul's death, during King David's reign, seven of Saul's descendants were killed. (2 Samuel 21:8–9) Thus all of Saul's descendants were destroyed.

But only Mephibosheth, the only son of Saul's son Jonathan, survived. "Jonathan and Saul died on Mount Gilboa, and he was only five years old. When Mephibosheth's nurse heard the news about the battle, she picked him up and tried to flee, but she fell, and he became lame in both feet." (2 Samuel 4:4)

Because of his love for Jonathan and the covenant he had made with him, David spared Mephibosheth. David brought him to the palace and restored to him all the lands that belonged to Saul; and he made him eat at the king's table like a son for the rest of his life. (2 Samuel 9) Yes, by God's grace he was protected.

That disability of his made others see him as useless and unfit to be king. In those days, a disabled person could not be a king or a warrior. So, no one sought him out; nor did anyone try to kill him.

But later, that same disability was what obtained grace for him. When David found him, he showed compassion on him and said: "Do not fear... I will show kindness to you for the sake of your father Jonathan" (2 Samuel 9:7). So, it can be said this way: God Himself used his weakness to hide him; then He used that same weakness to bring him to the king's banquet.

Yes, dear ones, this stands as a beautiful picture of our lives. Sometimes our weakness, brokenness, and losses may be for future good. God does not abandon those who are pleasing to Him. Surely, He will bring us to His table. He will raise us to the higher position of eating daily like a son with the King.

Certain physical losses, weaknesses, or financial setbacks are not permanent; they may be for our future good. This is the truth that Mephibosheth's life conveys to us. Let us live with faith, holding on through our losses.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - സങ്കീർത്തനം 122:6, 7

  ആധവൻ ധ്യാനം നമ്പർ: 2075 | തീയതി: 14.10.2026 "യെരൂശലേമിന്റെ സമാധാനത്തിനായി പ്രാർത്ഥിക്കുവിൻ; നിന്നെ സ്നേഹിക്കുന്നവർ സ്വസ്ഥമായിരിക്കു...