꧁༺ஆதவன் தியானம்༻꧂
꧁༺༻꧂
தேவன் அளிக்கும் தண்டனையைப் பற்றி இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. நமது தகாத செயல்பாடுகள், சரியான திட்டமிடுதல் இல்லாமை போன்றவை பல துன்பங்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஆனால், சில துன்பங்கள் தேவனால் நம்மைத் திருத்துவதற்காகத் தரப்படுகின்றன. அதாவது, எல்லா துன்பங்களும் தேவனால் நமக்கு வருவதில்லை. ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் தேவன் தனது அடியார்களைத் துன்பங்களின் மூலம் கடிந்து திருத்துகின்றார்.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது நாம் தவறு செய்யும்போது நமது பெற்றோர்கள் நம்மைத் தண்டிப்பதுண்டு. இதனை, "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் நம்மைத் தண்டிக்கின்றார் என்றால் காரணம் அவர் நம்மைத் தமது மகனாக, மகளாக நடத்துகின்றார் என்று பொருள். இதுபோல, பள்ளியில் ஆசிரியர்கள் நம்மைத் தண்டிப்பதுண்டு. இவை நல்ல நோக்கத்துக்காக தண்டனைகளே.
ஆனால் நாம் தண்டிக்கப்படும்போது நமக்கு வேதனையாக இருக்கும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
நமது உலக தகப்பன் நம்மைத் தண்டிக்கும்போது அவர்களுக்கு நாம் பயப்படுகின்றோம். நம்மைத் திருத்திக்கொள்கின்றோம். அப்படியானால் நமது வழிகளைத் திருத்த தேவன் தண்டிக்கும்போது அவருக்கு நம் எவ்வளவு பயப்பட்டு நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்!!! ஆம், "அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?" ( எபிரெயர் 12 : 9 )
இதனையே எபிரெய நிரூப ஆசிரியர் விளக்கி, நம்மைத் தேவனுக்கேற்பத் திருத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றார். அதாவது, இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனங்களில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்." ( எபிரெயர் 12 : 12, 13 )
அதாவது, உங்கள் கைகள், முழங்கால்கள் இவைகளைத் செவ்வைபண்ணுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக, உங்களை; உங்கள் வழிகளைச் சீர்படுத்துங்கள் என்று கூறப்படுகின்றது. எப்படி ஒரு தகப்பனோ, ஆசிரியரோ நம்மைத் தண்டிக்கும்போது நமது தவறுகளைத் திருத்திக்கொள்கின்றோமோ, அப்படியே நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
"நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் எனது தாய் தகப்பன் என்னைக் கண்டித்து வளர்த்ததுதான்" என்று இந்த உலகத்தில் கூடச் சிலர் கூறுவதுண்டு, ஆம், அன்பானவர்களே, எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
துன்பங்களைக் கண்டு துவண்டுபோவதையல்ல, மாறாக, அவை நமக்குச் சொல்லும் செய்திகளை ஆய்ந்தறிந்து நம்மைத் திருத்திக்கொள்வதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எனவே, நெகிழ்ந்த நமது கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு அவைகளைக் காத்துக்கொள்வோம்.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
꧁༺AATHAVAN Meditation༻ No: 2047 | Date: 16.09.2026
"All discipline
for the moment seems not to be joyful, but sorrowful; yet to those who have
been trained by it, afterwards it yields the peaceful fruit of
righteousness." — Hebrews 12:11 (NASB)
꧁༺༻꧂
Today’s meditation scripture
speaks about the discipline given by God. There are many reasons for the
suffering we experience. Our improper actions and lack of proper planning often
cause various troubles. However, certain afflictions are allowed by God in
order to correct us. That is to say, not all suffering comes from God. Yet, in
spiritual life, God rebukes and corrects His servants through trials.
When we were children, our
parents disciplined us whenever we did wrong. Regarding this, we read:
"It is for discipline
that you endure; God deals with you as with sons; for what son is there whom
his father does not discipline?" — Hebrews 12:7 (NASB)
This means that if God
disciplines us, it signifies that He is treating us as His own sons and
daughters. Similarly, teachers at school discipline us as well—these are
punishments intended for a good purpose.
When we are disciplined, it
feels painful at the time. Yet, as today's meditation verse says, afterwards it
yields the peaceful fruit of righteousness to those who have been trained by
it.
When our earthly fathers
discipline us, we revere them and correct our behaviour. If so, how much more
should we revere God and correct ourselves when He disciplines us to mend our
ways! Indeed, Scripture says:
"Furthermore, we had
earthly fathers to discipline us, and we respected them; shall we not much
rather be subject to the Father of spirits, and live?" — Hebrews
12:9 (NASB)
Explaining this very truth,
the author of Hebrews exhorts us to align and correct ourselves according to
God’s will. In the verses that directly follow today's scripture, we read:
"Therefore, strengthen
the hands that are weak and the knees that are feeble, and make straight paths
for your feet, so that the limb which is impaired may not be dislocated, but
rather be healed." — Hebrews 12:12–13 (NASB)
In other words, it instructs
us to strengthen our hands and knees—in short, to mend ourselves and align our
paths. Just as we correct our mistakes when a father or teacher disciplines us,
it is essential that we examine and correct ourselves.
Even in this world, some
people testify, "The reason I am in this good position today is because
my parents disciplined and guided me well while raising me." Yes,
beloved, all discipline for the moment seems not to be joyful, but sorrowful;
yet afterwards, it yields the peaceful fruit of righteousness to those who are
trained by it.
God does not expect us to
lose heart when facing trials, but rather to discern the message behind them
and correct our lives. Therefore, let us strengthen our weak hands and feeble
knees, guarding our ways so that what is impaired may not be dislocated, but
fully healed.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:
Post a Comment