ஆதவன் தியானம்
எண் :- 2049 நாள் :- 18.09.2026
"உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 9 )
அப்போஸ்தலரான யோவானுக்கு பத்மு தீவில் ஆவியானவர் இறுதிநாட்களைக் குறித்து பல தரிசனங்களை அளித்தார். அதில் குறிப்பாக, தேவனது பார்வையில் ஒவ்வொரு சபையும் எப்படி இருக்கின்றது என்றும் இனி அவைகள் என்ன செய்யவேண்டும்; தங்களை எப்படிச் சீர்திருத்திக்கொள்ளவேண்டும் என்றும் ஆவியானவர் விளக்கினார்.
"நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 11 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, இந்தப் பெயரில் சபைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் உலகிலுள்ள சபைகளை இவை குறிக்கின்றன என்பதனை நாம் உணர்ந்துக்கொள்ளவேண்டும். இங்கு சபை என்பது விசுவாசிகளையும் விசுவாசிகளின் கூட்டத்தையும் குறிக்கின்றது.
இன்றைய தியான வசனமானது சிமிர்னா சபை தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள வார்த்தைகளாகும். இங்கு தேவன் கூறுகின்றார், உன் செயல்களை நான் அறிந்திருக்கின்றேன். நீ படக்கூடிய உபத்திரவங்களை அறிந்திருக்கிறேன். உன்னை நீ ஏழை என்று எண்ணிக்கொள்கின்றாய் ஆனால் உண்மையில் நீ செல்வந்தன். நாங்கள்தான் உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், நீ அப்படியல்ல என்று உன்னைப் பழித்துப் பேசும் மக்களை நான் அறிவேன். கவலைப்படாதே, அப்படி உன்னைப் பழித்துக் கூறுபவர்கள்தான் சாத்தானின் கூட்டத்தார், எனவே உன்னை அவர்கள் தூஷிக்கின்றார்கள்" என்கிறார் ஆண்டவர். சுருக்கமாக, உனது ஆவிக்குரிய வாழ்க்கையினைக் குறைசொல்பவர்களைக் குறித்துக் கவலைப்படாதே என்கின்றார்.
மட்டுமல்ல, இற்றைய தியானம், கிறிஸ்தவ பாரம்பரிய சபைகளிலிருந்து ஆவிக்குரிய வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு எதிராக சிலர் கூறும் அவதூறுக்குப் பதில் தருவதாகவும் உள்ளது. ஆம் அன்பானவர்களே, பிறர் நம்மைக் குற்றம் சாட்டுவதைக்குறித்து கவலைப்படாமல் நமது ஆவிக்குரிய நம்பிக்கையில் விசுவாசத்தோடு வாழவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
உண்மையான ஆவிக்குரிய மக்கள் பிறரால் தூஷிக்கப்படுவார்கள்; இது இயற்கை. "நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 10 ) எனவே, உன் துன்பங்களைக்குறித்து நீ படுகின்ற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இது பிசாசு கொஞ்சகாலம் உங்களை சோதிக்கும் சோதனைதான். ஆகிலும் நீ மரணபரியந்தம் உன் நம்பிக்கையில் உண்மையாயிரு என்கிறார் ஆண்டவர்.
அன்பானவர்களே, உங்களது ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, உங்களைக் குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து கவலைப்படவேண்டாம். இத்தகைய ஆவிக்குரிய துன்பத்தை அனுபவிக்கின்றவர்களாக நீங்கள் இருந்தால் அதனைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு நீங்கள் கொண்ட நம்பிக்கையில் உறுதியோடு வாழவேண்டும் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
இன்றைய வசனத்தைத் தொடர்ந்து பதினொன்றாம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது, "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 11 ) ஆம், இப்படி ஆவிக்குரிய துன்பத்தைச் சகித்து உண்மையாய் வாழும்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாகின்றோம். இப்படி வெற்றி வாழ்க்கை வாழ்பவர்களை இரண்டாம் மரணம் எனும் நரக அக்கினி சேதப்படுத்துவதில்லை. ஆமென், அல்லேலூயா.
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN
MEDITATION
No.: 2049 | Date: 18.09.2026
"I know your deeds and
your tribulation and your poverty (but you are rich), and the blasphemy by
those who say they are Jews and are not, but are a synagogue of Satan." — Revelation
2:9 (NASB)
The Holy Spirit gave the
Apostle John many visions on the island of Patmos concerning the last days. In
particular, the Holy Spirit explained how each church appears in God's sight,
what they must now do, and how they must reform themselves.
We read: "I am the
Alpha and the Omega, the first and the last, and what you see, write in a book
and send it to the seven churches which are in Asia: to Ephesus and to Smyrna
and to Pergamum and to Thyatira and to Sardis and to Philadelphia and to
Laodicea." — Revelation 1:11 (NASB). That is, although the churches
are mentioned by these names, we must understand that they represent the
churches in the world today. Here, "church" refers to believers and
the assembly of believers.
Today's meditation verse is
the word spoken to the messenger of the church in Smyrna. Here God says:
"I know your deeds. I know the afflictions you are enduring. You consider
yourself poor, but in truth you are rich. I know the people who slander you,
saying, 'We alone are the true spiritual Christians; you are not.' Do not worry
— those who slander you in this way are the synagogue of Satan, and that is why
they blaspheme you," says the Lord. In short, He says: Do not worry about
those who find fault with your spiritual life.
Not only that, today's
meditation also serves as an answer to the slander that some speak against
those who wish to live a spiritual life apart from traditional Christian
churches. Yes, beloved ones, today's verse instructs us to live in faith in our
spiritual hope, without worrying about the accusations of others.
True spiritual people will
be slandered by others; this is natural. "Do not fear what you are about
to suffer. Behold, the devil is about to cast some of you into prison, so that
you will be tested, and you will have tribulation for ten days. Be faithful
until death, and I will give you the crown of life." — Revelation 2:10
(NASB). Therefore, do not fear at all concerning your troubles and the
sufferings you endure; this is merely a testing by which the devil will test
you for a short time. Yet the Lord says: Be faithful in your hope until death.
Beloved ones, do not worry
about those who accuse you concerning your spiritual life. The Lord Jesus
Christ says that if you are among those who experience such spiritual
suffering, you must patiently endure it and live firmly in the hope you hold.
Following today's verse,
verse eleven says: "He who has an ear, let him hear what the Spirit says
to the churches. He who overcomes will not be hurt by the second death." —
Revelation 2:11 (NASB). Yes, it is when we endure spiritual suffering
and live faithfully that we become overcomers in the spiritual life. Those who
live such a victorious life will not be harmed by the second death, the fire of
hell. Amen, Hallelujah.
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦
No comments:
Post a Comment