Monday, September 07, 2026

🦋 Meditation verse - ஏசாயா 60 : 2 / Isaiah 60:2

 தியானம் - 2041

"ஆதவன்" செப்டம்பர் 10 வியாழன் 2026



"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

நேற்றைய தியானத்தில் நாம் இருளின் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த கர்த்தரைக்குறித்தும் அவர் நம்மை தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளார் என்றும்  பார்த்தோம். 

இன்றைய தியான வசனம், அப்படி நம்மைத் தனது ஒளியால் நிரம்பிய கர்த்தர் நம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி மகிமைப்படுத்துவார் என்று கூறுகின்றது. அதாவது, கிறிஸ்துவின் ஒளி நம்மில் வரும்போது நாம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு விளங்குவோம். மட்டுமல்ல, நாம் உலகத்துக்கு மறைவாக இருக்கமாட்டோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மீது காணப்படும். அந்த மகிமையை மற்றவர்கள் பார்க்கும்படி அவர் நம்மை உயர்த்துவார். 

கிறிஸ்து தெரிந்துகொள்ளுமுன்  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் உலகிற்கு அறிமுகமானவர்களல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். ஆனால் கிறிஸ்து அவர்கள்மேல் உதித்தபோது அவர்கள் மகிமையடைந்தனர். 

இன்று நாமும் இதற்காகவே கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொண்ட நாம் அந்த ஒளியை மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி மலைமேல் உள்ள வெளிச்சமான பட்டணமாக விளங்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் விளங்கும்போது என்ன நடக்கும் என்பதனை இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக நாம், "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்."  ( ஏசாயா 60 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

இருளான இடத்தில் ஒரு ஒளி இருக்குமானால் அதனைத்தேடி அந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள பூச்சிகளெல்லாம் ஓடிவரும். அதுபோல நாம் ஒளிகொடுப்பவர்களாக வாழும்போது ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.

கிறிஸ்துவுக்குள் ஒளிகொடுப்பவர்களாக நாம் வாழும்போது இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும். அதாவது, உலகமெல்லாம் இருளுக்குள்ளும் அந்தகாரத்துக்குள்ளும் கிடந்தாலும் கர்த்தரது மகிமை நம்மேல் காணப்படும். 

இந்த ஒளியான இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள நாம் முயற்சியெடுக்கின்றோமா? இந்த மெய்யான ஒளி நமக்கு வேண்டும் எனும் ஆர்வம் நமக்கு இருக்கின்றதா? இந்த ஆர்வம் நமக்கு இருந்து உண்மையாக அவரைத் தேடுவோமானால், "உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

✍️சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

Meditation - 2041

"AATHAVAN" – September 10, Thursday, 2026

"For behold, darkness will cover the earth and deep darkness the peoples; but the Lord will rise upon you and His glory will appear upon you." (Isaiah 60:2, NASB)

In yesterday's meditation, we saw how the Lord called us out of darkness into His marvellous light, making us a chosen race, a royal priesthood, a holy nation, and a people for His own possession.

Today’s verse tells us that the Lord, who filled us with His light, will distinguish and glorify us above others. When the light of Christ enters us, we stand apart. Furthermore, we will not remain hidden from the world. As the Lord Jesus Christ said:

"You are the light of the world. A city set on a hill cannot be hidden." (Matthew 5:14, NASB)

Yes, beloved, darkness will cover the earth and deep darkness the peoples; but the Lord will rise upon us, and His glory will appear upon us. He will lift us up so that others may see that glory.

Before Christ chose them, none of the disciples of our Lord Jesus were known to the world. They lived as ordinary men among ordinary people. But when Christ rose upon them, they were glorified.

Today, we too are called for this very purpose. Having received the light of Christ, He expects us to shine as a city on a hill, giving that light to others. When we shine like this, what happens next? We read in the very next verse:

"Nations will come to your light, and kings to the brightness of your rising." (Isaiah 60:3, NASB)

When a light burns in a dark place, insects from all around swarm toward it. In the same way, when we live as light-bearers, nations and kings will walk toward the brightness of our rising.

When we live reflecting Christ's light, even if darkness covers the earth and deep darkness covers the people, the Lord will rise upon us and His glory will be seen upon us. Though the whole world lies in darkness and gloom, God's glory will be evident on us.

Are we striving to receive Jesus Christ—the true Light—in our lives? Do we harbour a genuine longing for this light? If we seek Him earnestly with this desire, the Lord God promises: "The Lord will rise upon you and His glory will appear upon you."

✍️ Bro. M. Geo Prakash  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஏசாயா 60 : 2 / Isaiah 60:2

  தியானம் - 2041 " ஆதவன் " செப்டம்பர் 10 வியாழன் 2026 "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் க...