Wednesday, September 09, 2026

🦋 Meditation verse - மத்தேயு 6 : 4 & 6:18 / Matthew 6:4 & 6:18

 தியானம் - 2042

"ஆதவன்" செப்டம்பர் 11 வெள்ளி 2026


"அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 4 & 6:18)

மனிதர்களைப்போல தேவன் நம்மைப் பார்ப்பது கிடையாது. மனிதர்கள் பொதுவாக நமது அந்தஸ்து, திறமை, பதவி, பகட்டு இவைகளைக்கொண்டு நம்மை எடைபோடுகிறார்கள். இவற்றின் அடிப்படையிலேயே நம்மை மதிக்கின்றனர். ஆனால் தேவன் நமது அந்தரங்க வாழ்கையினைப் பார்க்கின்றார். குறிப்பாக நமது இருதயத்துச் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பார்க்கின்றார். 

தாவீதைத் தெரிந்துகொள்ளுமுன் கர்த்தர் சாமுவேலுக்கு இதனைத் தெளிவாகக் கூறினார். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" ( 1 சாமுவேல் 16 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி நல்லச்  செயல்களைச் செய்யவேண்டும். நாம் ஜெபிப்பது, தர்மம் செய்வது, உபவாசம் மேற்கொள்வது இவைபோன்ற காரியங்களை அந்தரங்கமான முறையில் தேவனுக்கும் நமக்கும் மட்டும் தெரியும்படிச் செய்யவேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறும்போது இன்றைய தியான வசனத்தைக் கூறினார். ஆம், இவைகளை நாம் அந்தரங்கமாகச் செய்யவேண்டும், "அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" என்று கூறினார். 

ஆனால் மனிதர்கள் இதற்கு மாறாக, நல்லச் செயல்களை எல்லோரும் அறியும்படி பறைசாற்றுகின்றனர். பாவ காரியங்களையோ அந்தரங்கத்தில் இரகசியமாகச் செய்கின்றனர். அனால் அன்பானவர்களே, நல்ல செயலோ, கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவற்றுக்கு அவர் வெளியரங்கமான பலனளிப்பார்.  

"தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்." ( ரோமர் 2 : 6,7 )

ஆம் அன்பானவர்களே, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தேவனுக்குமுன் வெளியரங்கமாக இருக்கின்றன. நமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பலன் உண்டு. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். நல்ல செயலோ கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றார். "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்" ( எபிரெயர் 4 : 13 )

இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமது செயல்களுக்குத் தேவன் வெளியரங்கமான பதிலைத் தருவார். இறுதிநாளில் மட்டுமல்ல, அவர் விரும்பினால் நமது உலக வாழ்வில்கூட நாம் நமது செயல்களுக்கு ஏற்ற பலனை அவர் தருவதற்கு உண்மையும் கிருபையும் உள்ளவராகவே இருக்கின்றார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

Meditation - 2042

"AATHAVAN" | Friday, September 11, 2026

"and your Father who sees what is done in secret will reward you." (Matthew 6:4 & 6:18, NASB)

God does not look at us the way humans do. People generally judge us by our status, talent, position, and outward show; they value us based on these things. But God looks at our secret, inner life. Specifically, He looks at the deepest thoughts and intentions of our hearts.

Before choosing David, the Lord stated this clearly to Samuel. We read: "But the Lord said to Samuel, 'Do not look at his appearance or at the height of his stature, because I have rejected him; for God sees not as man sees, for man looks at the outward appearance, but the Lord looks at the heart.'" (1 Samuel 16:7, NASB).

We must do our good deeds in a way that is hidden from others, known only to ourselves and to God. Jesus Christ spoke today’s meditation verse when He instructed that things like our praying, charitable giving, and fasting should be done secretly. Yes, we must do these things in private, and He promised that "your Father who sees what is done in secret will reward you."

In contrast, human beings often trumpet their good deeds so that everyone will know about them, while committing sinful acts in secret. But beloved, whether it is a good deed or a bad deed, God is watching everything in secret. He will certainly give an open reward or consequence for them.

"who will render to each person according to his deeds: to those who by perseverance in doing good seek for glory and honour and immortality, eternal life;" (Romans 2:6-7, NASB)

Yes, beloved, all the deeds we do are out in the open before God. There is a corresponding consequence for every single one of our actions. Therefore, it is imperative that we remain careful. Whether a deed is good or bad, God is watching it all in secret. "And there is no creature hidden from His sight, but all things are open and laid bare to the eyes of Him with whom we have to do." (Hebrews 4:13, NASB).

On the day of final judgment, God will give a public response for our deeds. And not only on the final day—if He so wills, He is faithful and gracious enough to grant us the appropriate fruit of our actions even during our earthly life.

✍️ Bro. M. Geo Prakash  


No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - சகரியா 2 : 7, 8 / Zechariah 2:7, 8

  தியானம் - 2043 " ஆதவன் " செப்டம்பர் 12 சனி 2026 "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள...