Friday, September 18, 2026

🦋 Meditation verse - யோவான் 11 : 37 / John 11:37

 ஆதவன் தியானம்

எண் :- 2051       நாள் :- 20.09.2026



"அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்." ( யோவான் 11 : 37 )

இன்றைய தியான வசனம் நமக்கு இரண்டுவிதப் பார்வைகளைத் தருகின்றது. ஒன்று, மனிதர்கள் தேவனைப் பார்க்கும் பார்வை. இன்னொன்று, அவர்கள் சக மனிதர்களைப் பார்க்கும் பார்வை. 

ஆண்டவர் இயேசு "நன்மை செய்கிறவராகவே உலகில் சுற்றித்திரிந்தார்" என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். ஆனால் அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் இதனை முற்றிலும் உணர்த்துக்கொள்ளவில்லை. இறந்த லாசருவை நான்கு நாட்களுக்குப்பின் கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தான் தேவ குமாரன் என்பதை மக்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்பது தேவ திட்டம். அதற்கு லாசர் முதலில் மரிக்கவேண்டியது அவசியம். மனிதர்களுக்கு இது தெரியாததால்,  "குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா" என்று குறைகூறினார்கள். 

தேவ நோக்கம், தேவ சித்தம் அறிந்த மனிதர்கள் இப்படி தேவனைக் குறைகூறிக்கொண்டிருக்கமாட்டார்கள். நமது வாழ்விலும் நாம் இதனைப் புரிந்து வாழவேண்டியது அவசியம். தேவன் எதனைச் செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார் எனும் விசுவாசம் நமக்கு அவசியம். 

மேலும், மனிதர்கள் தேவனிடம் பல்வேறு வேண்டுதல்களைச் செய்கின்றனர்.  பலர் தேவன் தங்களது வாழ்வில் இதுவரைச் செய்திருக்கும் நல்ல செயல்களை நினைத்துப்பார்த்து நன்றிகூறுவதில்லை. மாறாக, தங்களது நிறைவேறாத வேண்டுதல்களை மற்றவர்களிடம் பட்டியலிட்டு விளக்கி, "நான் எவ்வளவோ ஜெபம் செய்கிறேன், எத்தனையோ  ஆண்டுகளாக இந்தக் குறிப்பிட்டக் காரியத்துக்காக ஜெபிக்கின்றேன், ஆனால் ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்கவில்லை" என முறுமுறுகின்றனர்.  முதலில்  "நன்றியறிதல் உள்ளவர்களாகவும் இருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 ) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இன்றைய தியான வசனம் உணர்த்தும் இரண்டாவது உண்மை, மனிதர்கள் நாம் சக மனிதர்களைப் பார்க்கும் பார்வை பற்றியது.  ஒருவர் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அனுபவித்தவர்கள் அதனைப் பெரிதாக எண்ணாமல், "இவ்வளவு உதவி செய்தவர் இதனையும் செய்திருக்கலாம்" என்றுதான் கூறுவார்கள். 

அரசியலிலும் ஒரு அரசாங்கம் நல்ல காரியங்கள் பல செய்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் அதனைப் பாராட்டாமல், இன்னொரு காரியத்தைச் சுட்டிக்காட்டி, "இதனை ஏன் செய்யவில்லை?" என்றுதான் கேள்வி எழுப்புவார்கள். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் இவற்றினை உணர்த்தி, முதலில் தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ அறிவுறுத்துகின்றது. "எனது வாழ்வில் தேவன் எதனைச் செய்தாலும் சரியாகவே செய்வார்" எனும் விசுவாசம் நமக்கு அவசியம். அதற்காக நாம் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். மேலும் தேவன் இதுவரை நமக்குச் செய்துள்ள நன்மைகளை நினைத்து தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழவேண்டும். இதனை ஏன் தேவன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புதல் நல்லதல்ல.  காரணம், அவரது நோக்கம் நமக்குத் தெரியாது.

இறுதியாக, "குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா" எறு கேட்ட மக்களைப்போல நிறைவற்றவர்களாக இல்லாமல்  மனநிறைவுள்ளவர்களாக,  தேவன் இதுவரை நமது வாழ்வில் செய்த காரியங்களுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக வாழவேண்டும். இதனையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No.: 2051 | Date: 20.09.2026

"But some of them said, 'Could not this man, who opened the eyes of the blind man, have kept this man from dying?'" (John 11:37, NASB)

Today's meditation verse gives us two kinds of perspectives. One is the perspective with which people look at God. The other is the perspective with which they look at their fellow human beings.

We read in the Scriptures that the Lord Jesus "went about doing good" in the world. But those who lived in that society did not fully understand this. God's plan was that Jesus should raise the dead Lazarus from the tomb after four days and show the people that He is the Son of God. For that, it was necessary that Lazarus die first. Since people did not know this, they grumbled, saying, "Could not this man, who opened the eyes of the blind man, have kept this man from dying?"

People who know God's purpose and God's will would not grumble against God like this. It is essential that we too understand this and live accordingly in our lives. We need the faith that whatever God does, He does for our good.

Furthermore, people make various requests to God. Many do not thank God by remembering the good things He has done in their lives so far. Instead, they list their unanswered prayers to others and explain, "I pray so much, I have been praying for this particular matter for so many years, but the Lord has not heard my prayer," and they grumble. First of all, the Scripture instructs us, "Be thankful." (Colossians 3:15, NASB)

The second truth that today's meditation verse conveys is about the perspective with which we look at our fellow human beings. However much good someone may have done, those who benefited from it will not regard it as significant; they will only say, "Someone who helped so much could have done this too."

In politics too, even if a government has done many good things, the opposition will not appreciate it; instead, they will point to another matter and ask, "Why was this not done?"

Yes, dear ones, today's meditation verse makes us understand these things and instructs us first to submit ourselves to God's will and live accordingly. We need the faith that "whatever God does in my life, He does rightly." For that, we must wait patiently. Moreover, we must live as people who are thankful to God, remembering the good things He has done for us so far. It is not good to raise the question of why God has not done this. The reason is that we do not know His purpose.

Finally, instead of being dissatisfied like the people who asked, "Could not this man, who opened the eyes of the blind man, have kept this man from dying?", we must live as content people, grateful for what God has done in our lives so far. This is what God expects from us.

𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யோவான் 11 : 37 / John 11:37

  ஆதவன் தியானம் எண் :- 2051       நாள் :- 20.09.2026 "அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் க...