Monday, September 21, 2026

🦋 Meditation verse - ஏசாயா 49 : 25 / Isaiah 49:25

 ஆதவன் தியானம்

எண் :- 2056 - நாள் :- 25.09.2026


"என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்." ( ஏசாயா 49 : 25 ) 

தேவனுக்கு நம்மை அர்ப்பணித்து வாழும்போது நமக்கு பல்வேறு ஆசீர்வாதங்கள் உண்டு. அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

இதற்குமுன் நாம் வாழ்ந்த தேவனை அறியாத வாழ்க்கை நமக்கு பல்வேறு அடிமைத்தனங்களை வாழ்வில் கொண்டுவந்திருந்தது; சிறை வாழ்க்கைபோல பல சிறையிருப்புக்களை நமக்கு ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு பாவங்கள், நோய்கள், கடன்கள், குடும்பப் பிரச்சனைகள், போன்று பல சிறைகள் நமக்குச் சாத்தானால்  ஏற்பட்டிருந்தன. ஆம், சாத்தானையே இன்றைய தியான வசனம் "பராக்கிரமன்", "பெலவந்தன்"  என்று கூறுகின்றது. தேவனுக்குத் தங்களை  அர்ப்பணித்து வாழும்போது இப்படி, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.  

கடந்த காலங்களில் நாம், பொருளாதார இழப்புக்கள். தொழில் இழப்புகள், நண்பர்கள் மற்றும் நம்பியவர்களால் கைவிடப்பட்ட இழப்புக்கள், உடல் பலவீனமெனும் இழப்புகள், போன்ற பல்வேறு இழப்புகளை வாழ்வில் சந்தித்திருக்கலாம். இவைகளையே கொள்ளையிடப்பட்டவைகள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இப்படி, பெலவந்தனால் நம்மிடமிருந்து கொள்ளையிடப்பட்டவைகளும் விடுதலையாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, எபேசியர் நிரூபத்தில் நாம் வாசிக்கின்றோம், "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" ( எபேசியர் 6 : 12 ) என்று. இப்படி உலக வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் துரைத்தனங்கள், பல்வேறு அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்,  வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகள் நமக்கு எதிரிட்டு நிற்கின்றன. அதாவது நம்மோடு வழக்காடுகின்றன.  

இப்படி உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நானே வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.  இதனையே அன்று இஸ்ரவேல் மக்களைப்பார்த்து மோசே கூறினார், "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" ( யாத்திராகமம் 14 : 14 ) என்று.

ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நமக்குக் கிடைக்கும் பலன்கள் இவைகளாகும்.  முதலில் அவர் நமது சிறையிருப்பை மாற்றுகின்றார்; நாம் இழந்துபோனவைகளை மீண்டும் பெறும்படி கிருபை செய்கின்றார்; நமக்காக அவரே போராடுகின்றார்; நம்மை மட்டுமல்ல, நமது பிள்ளைகளையும் பாதுகாத்து நடத்துகின்றார். 

நமது வாழ்க்கையையும், நமது குடும்பத்தையும் கர்த்தரது பாதுகாப்பில் ஒப்புக்கொடுத்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No.: 2056 – Date: 25.09.2026

"Nevertheless, the captives of the mighty man will be taken away, and the prey of the tyrant will be rescued; for I will contend with the one who contends with you, and I will save your sons." (Isaiah 49:25, NASB)

When we live a life consecrated to God, there are various blessings for us. Today's meditation verse speaks to us about this very thing.

The life we lived before, without knowing God, had brought various forms of bondage into our lives; it had brought upon us many captivities, like a life of imprisonment. Various prisons — sins, diseases, debts, family problems, and the like — had been brought upon us by Satan. Yes, today's meditation verse calls Satan himself "the mighty man" and "the tyrant." When we live consecrated to God, this verse says that even those taken captive by the mighty man will be set free.

In times past, we may have faced various losses in life — financial losses, loss of employment, losses from being abandoned by friends and those we trusted, losses from bodily weakness, and many others. These are what today's meditation verse calls "the prey" that has been plundered. It says that even what has been plundered from us by the tyrant will be rescued.

Not only that, but we read in the book of Ephesians: "For our struggle is not against flesh and blood, but against the rulers, against the powers, against the world forces of this darkness, against the spiritual forces of wickedness in the heavenly places" (Ephesians 6:12, NASB). In this way, both in worldly life and in spiritual life, rulers, various powers, the world forces of this darkness, and the spiritual forces of wickedness in the heavenly places stand against us. That is, they contend with us.

It is to those who contend with you that the Lord God says, "I will contend with the one who contends with you, and I will save your sons." This is what Moses said to the people of Israel long ago: "The LORD will fight for you while you keep silent" (Exodus 14:14, NASB).

Yes, dear ones, these are the benefits we receive when we surrender ourselves to the Lord and live a life worthy of Him. First, He changes our captivity; He shows grace so that we regain what we have lost; He Himself fights for us; and He not only protects us but also guides and safeguards our children.

Let us surrender our lives and our families into the Lord's protection and receive God's blessings.

𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஏசாயா 49 : 25 / Isaiah 49:25

  ஆதவன் தியானம் எண் :- 2056 - நாள் :- 25.09.2026 "என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்...