Tuesday, September 29, 2026

🦋 Meditation verse - எபிரெயர் 11 : 4 / Hebrews 11:4

 ஆதவன் தியானம்

எண் :- 2063 - நாள் :- 02.10.2026



"விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதனாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்." ( எபிரெயர் 11 : 4 )

தேவனுக்குப் பலி செலுத்துவது குறித்து இன்றைய தியான வசனம் குறிப்பிடுகின்றது. பழைய ஏற்பாட்டுப் பலிகள் பலவிதம் உண்டு. அவைகளைக்குறித்து நாம் லேவியராகமத்தில் வாசிக்கின்றோம். ஆனால் புதிய ஏற்பாட்டு மக்களாகிய நாம் ஆடுமாடுகளையும் எருதுகளையும்,  பழைய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ள இதர பலிகளையும்   செலுத்தவேண்டியதில்லை.  

பழைய ஏற்பாட்டுக்காலமோ புதிய ஏற்பாட்டுக் காலமோ, "தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." (சங்கீதம் 51:17) என்று தாவீது கூறுகின்றார்.  ஆம், பாவ உணர்தல் பெற்று நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை தேவன் புறக்கணிப்பதில்லை; அவையே தேவன் விரும்பும் பலி.   

இன்றைய தியான வசனத்தில், விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத்  தேவனுக்குச் செலுத்தினான் என்று கூறப்பட்டுள்ளது. மேன்மையான பலி என்பது, நம்மிடம் இருபவற்றில் மேன்மையானவற்றை தேவனுக்கென்று கொடுப்பது. காயினும் ஆபேலும் பலி செலுத்தினர். ஆபேல் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தேவனுக்கென்று செலுத்தினான். ஆனால் காயினோ, பலி செலுத்தவேண்டுமெனும் எண்ணம் மட்டும் கொண்டிருந்து சிலவற்றைச் செலுத்தினான். 

இதனை நாம், "சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. " ( ஆதியாகமம் 4 : 3 - 5) என்று வாசிக்கின்றோம். 

காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்; ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆம் அன்பானவர்களே, நாமும் இப்படி நம்மிடமிருப்பவற்றில் சிறந்தவற்றை தேவனுக்கென்று கொடுக்க முன்வரவேண்டும். 

தேவன் நமது பொன்னையோ பொருளையோ பெரிதாக எண்ணுவதில்லை. நம்மிடம் இருப்பவற்றில் சிறந்தவையாக தேவன் எண்ணுவது நமது உடலும் இருதயமும் தான். நாம் அவற்றையே அவருக்குப் பலியாகக் கொடுக்கவேண்டும். பாவக்கறை இல்லாத உடலும் இருதயமும் தான் தேவன் விரும்பும் சிறந்த காணிக்கை. "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்திய ஆபேலைபோல நாமும் மேன்மையானவற்றை தேவனுக்குச் செலுத்தவேண்டும். அப்படிச் செலுத்தியதால்தான்  ஆபேல் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். ஆம் அன்பானவர்களே, இன்று புதிய ஏற்பாட்டு மக்களாகிய நாம் நமது உடலையும் இருதயத்தையும் பரிசுத்தமாகக் காத்துக்கொண்டு அவற்றை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். 

இப்படி நம்மை தேவனுக்கேற்ற பலியாக ஒப்புக்கொடுத்தால் நம்மைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்குமுன் சாட்சியிடுவார். "அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்." (லூக்கா 12:8,9) ஆம், கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகின்ற சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதுவே மிகச்சிறந்த பலி. 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

Number: 2063 | Date: 02.10.2026

"By faith Abel offered to God a better sacrifice than Cain, through which he obtained the testimony that he was righteous, God testifying about his gifts, and through faith, though he is dead, he still speaks." — Hebrews 11:4

Today’s meditation verse speaks about offering sacrifices to God. There were many types of sacrifices in the Old Testament, which we read about in the Book of Leviticus. But as New Testament believers, we do not need to offer sheep, cattle, bulls, or any of the other sacrifices specified in the Old Testament.

Whether in Old Testament times or New Testament times, David says:

"The sacrifices of God are a broken spirit; A broken and a contrite heart, O God, You will not despise." — Psalm 51:17

Yes, God does not reject those who have a broken heart that has received conviction of sin; those are the sacrifices God desires.

In today's meditation verse, it says that by faith Abel offered a better sacrifice to God than Cain. Offering a better sacrifice means giving the very best of what we have to God. Both Cain and Abel offered sacrifices. Abel selected the best and offered it to God. But Cain merely had the thought that he ought to offer a sacrifice, so he simply brought some items.

We read about this:

"So, it came about in the course of time that Cain brought an offering to the Lord of the fruit of the ground. Abel, on his part also brought of the firstborn of his flock and of their fat portions. And the Lord had regard for Abel and for his offering; but for Cain and for his offering He had no regard." — Genesis 4:3–5

It is noteworthy that Cain brought an offering of the fruit of the ground, whereas Abel brought of the firstborn of his flock and of their fat portions. Yes, beloved, we too must step forward to give the best of what we have to God.

God does not consider our gold or material possessions to be great things. What God considers the best among what we possess are our body and heart. We must offer those as a sacrifice to Him. A body and heart undefiled by sin are the best offerings God desires.

"Therefore, I urge you, brethren, by the mercies of God, to present your bodies a living and holy sacrifice, acceptable to God, which is your spiritual service of worship." — Romans 12:1

Like Abel, who offered a better sacrifice to God than Cain, we too must offer the best to God. It was because he offered such a sacrifice that Abel obtained the testimony that he was righteous; God Himself testified about his gifts; and though he died, he still speaks. Yes, beloved, as New Testament believers today, let us keep our body and heart holy and surrender them to God.

If we surrender ourselves as a sacrifice acceptable to God in this way, the Lord Jesus Christ will testify about us before the Father.

"I say to you, everyone who confesses Me before men, the Son of Man will confess the same one also before the angels of God; but he who denies Me before men will be denied before the angels of God." — Luke 12:8–9

Yes, let us live a witness-bearing life that confesses Christ. That is the finest sacrifice.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🏫 Bible Meditation - September 2026

  Meditation  – 2032                                                                                                                        ...