Saturday, September 12, 2026

🦋 Meditation verse - யாக்கோபு 1 : 8 / James 1:8

 தியானம் - 2045

"ஆதவன்" செப்டம்பர் 14 திங்கள் 2026


"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இந்த உலக வாழ்க்கையில்கூட நாம் ஏதாவது ஒன்றினைச் சாதிக்கவேண்டுமானால்  மனம் தடுமாற்றமின்றி எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். ஒரு முடிவெடுக்குமுன் பலமுறை சிந்திக்கவேண்டும் அனால் முடிவெடுத்தபின்னர் எடுத்த முடிவில் தடுமாற்றமின்றி துணிந்து நிற்கவேண்டும். இப்படித் துணிந்து  முடிவெடுக்கமுடியாதவர்கள் எதனையும் சாதிக்கமுடியாது. இத்தகையவர்களே இருமனமுள்ளவர்கள். இருமனமுள்ளவர்களாக நாம் இருப்போமானால் நிலையற்றவர்களாகவே இருப்போம். 

ஆவிக்குரிய வாழ்விலும் நாம் இப்படியே இருக்கவேண்டியது அவசியம். கர்த்தருக்காக வாழ நாம் முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து நாம் பின்வாங்கிடக்கூடாது. உழக்கூடிய உழவன் முன்னோக்கிப்பார்த்து வயலை உழவேண்டியது அவசியம். பாதி வயலை உழுதுவிட்டு பின்னோக்கிப் பார்த்துத் தனது வேலையை நிறுத்திவிட்டால் அவனால் வயலை உழுது பயிர்ச்செய்து அறுவடையைக் காண முடியாது.  

நாம் தேவனுக்கென்று எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். இல்லையானால் நாம் அவருக்குமுன் தகுதியற்றவர்களாக ஆகிவிடுவோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்" ( லுூக்கா 9 : 62 )

ஆம் அன்பானவர்களே, இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இருமனமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாங்கள் நினைத்தது கிடைக்கவேண்டும், ஜெபித்தது நிறைவேறவேண்டும் என எண்ணுகின்றனர். அப்படி நடக்கவில்லையானால் கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்து மாற்றுவழியைத் தேடுகின்றனர்.  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இப்படியே எலியா காலத்திலும் மக்கள் இருந்தனர். "அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை." ( 1 இராஜாக்கள் 18 : 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், இரண்டு நினைவுகள் நம்மைக் குந்திக்குந்திதான் நடக்கச்செய்யும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியாது. 

கிறிஸ்துவிடம்  வந்த ஒருவன் பின்னிட்டுப் பார்க்கின்றான் என்றால் அதற்கு இன்னொரு காரணம் பழைய பாவ சந்தோஷங்களாகும். பழைய பாவ நண்பர்களும் அவர்களோடு செலவழித்த பழைய நாட்களும்  நினைவுக்கு வருவதால் பலர் இருமனமுள்ளவர்களாக மாறி, கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்குகின்றனர்.  பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை முற்றிலும் மறந்துவிட வேண்டியது அவசியம். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 )

ஒரு மனிதனுக்கு இருமனம் ஏற்படக் காரங்கள் விசுவாசக் குறைவும் தேவையில்லாத மாற்று சிந்தனைகளும்தான். எனவே நாம் கிறிஸ்துவைத்தவிர வேறு எதனையும் அறியாமலும், அறிய ஆசைப்படாமலும் இருக்கவேண்டியது அவசியம். இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்கின்றார். 

இருமனம் வேண்டாம்; கிறிஸ்துவைத்தவிர வேறு சிந்தனை வேண்டாம்; கலப்பையின்மேல் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கவேண்டாம். நமது இலக்கான கிறிஸ்துவை மட்டுமே நோக்கிப்பார்த்து நமது விசுவாசப் பயணத்தைக் தொடருவோம். காரணம், இன்றைய தியான வசனம் கூறுவதுபோல  இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். 

MEDITATION – 2045

AATHAVAN – September 14, Monday, 2026

“Being a double-minded man, unstable in all his ways.” James 1:8 (NASB)

Even in our earthly life, if we want to accomplish something, it is essential that we remain firm in the decisions we make, without wavering. We should think carefully and consider matters many times before making a decision. But once a decision has been made, we must stand firmly and courageously by it without hesitation. Those who are unable to make firm decisions will not be able to accomplish anything. Such people are double-minded. If we are double-minded, we will always remain unstable.

The same principle applies to our spiritual life. Once we have decided to live for the Lord, we must never turn back from that decision. A farmer who ploughs a field must look forward and continue his work. If he ploughs only half of the field and then looks back and stops, he will never be able to complete the ploughing, cultivate the field, or see the harvest.

Likewise, we must remain steadfast in the decision we have made to live for God. Otherwise, we will become unworthy before Him. This is exactly what our Lord Jesus Christ said:

“No one, after putting his hand to the plow and looking back, is fit for the kingdom of God.” — Luke 9:62 (NASB)

Yes, beloved, sadly, many Christians today are double-minded. They expect everything to happen according to their wishes and want their prayers to be answered exactly as they desire. When this does not happen, they grumble against the Lord and begin looking for alternative ways. Even those who call themselves spiritual Christians are not always an exception to this.

People were like this even during the days of Elijah. We read:

“How long will you hesitate between two opinions? If the LORD is God, follow Him; but if Baal, follow him.” — 1 Kings 18:21 (NASB)

Yes, having two conflicting thoughts will only make us hesitate and stumble along our way. We will not be able to make progress in our lives.

When a person comes to Christ and then begins looking back, another reason may be the pleasures of his former sinful life. Old sinful friends and the days spent with them may come to mind. As a result, many become double-minded and turn away from Christ. Once we have run away from sinful ways, it is essential that we completely leave them behind and forget them. If we turn back and look at them again, sin may pull us back and cast us once more into the pit from which we escaped.

“For if, after they have escaped the defilements of the world through the knowledge of the Lord and Savior Jesus Christ, they are again entangled in them and are overcome, the last state has become worse for them than the first.” — 2 Peter 2:20 (NASB)

The reasons for double-mindedness in a person are a lack of faith and unnecessary alternative thoughts. Therefore, we must be determined to know nothing except Christ and must not desire to pursue anything that takes our attention away from Him. That is why the Apostle Paul said:

“For I determined to know nothing among you except Jesus Christ, and Him crucified.” — 1 Corinthians 2:2 (NASB)

Let there be no double-mindedness. Let there be no thoughts that draw us away from Christ. Let us not put our hand to the plow and then look back. Instead, let us keep our eyes fixed upon Christ, our goal, and continue our journey of faith with steadfastness.

For, as today’s meditation verse reminds us:

“Being a double-minded man, unstable in all his ways.” — James 1:8 (NASB)

✍️ Bro. M. Geo Prakash  

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - யாக்கோபு 1 : 8 / James 1:8

  தியானம் - 2045 " ஆதவன் " செப்டம்பர் 14 திங்கள் 2026 "இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக...